Friday, November 25, 2022

பொய்யா மொழி பொய்த்ததுவோ? கவிஞர் தணிகை

 பொய்யா மொழி பொய்த்ததுவோ? கவிஞர் தணிகை



 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 

கல்லார் அறிவிலா தார்


இது போல புலால் மறுத்தல், சூது, கள்ளுண்ணாமை போன்ற குறள்கள் எல்லாம் காலத்தால் பின் தள்ளப் பட்டு விட்டதோ என்ற தற்காலம்...


இது போல முழுத் திருக்குறளையும் அலசிப் பார்த்தால் இன்னும் கூட சில பல‌ குறள்கள் கூட இருக்கலாம்.


பெரும்பாலான மதுப் பிரியர்களோடு நாமும் சேர்ந்து கொள்ள முடியுமா? உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்னும் குறள் படி 100க்கு 99 பேர் புலால் உண்ணுவாராக இருக்கும் போது அப்படியே நாமும் ஆக முடியுமா?


உண்ணுவது செரிமானம் ஆன பிறகு  திரும்ப உண்டால் உடலுக்கு பிணி இல்லை அதற்கு மருந்து தேவையில்லை என்ற குறளை இந்த உலகு பின் தள்ளி விட்டது என்றே சொல்ல முடியும் வண்ணம் எல்லா உணவுமே இரசாயனக் கலவையுடன் இருப்பதுவும், நோய் இல்லா மனிதரோ உயிரோ இந்த உலகில் இருப்பது தற்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம்...எனவே...


கருத்துகள் வரவேற்கப்படுகின்றன‌


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




No comments:

Post a Comment