Thursday, November 24, 2022

புரூஸ் லீ மரணம் குறித்த‌ உண்மை 50 ஆண்டுகள் ஆன பின் வெளி வந்துள்ளது: கவிஞர் தணிகை

 

புரூஸ் லீ மரணம் குறித்த‌ உண்மை 50 ஆண்டுகள் ஆன பின் வெளி வந்துள்ளது: கவிஞர் தணிகை

1973ல் மரணம் அடைந்த புரூஸ் லீயின் சாவு குறித்த பல் வேறுபட்ட செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தன. அத்தனைக்கும் முற்றுப் புள்ளி வைத்தாற் போல இன்று ஒரு செய்தி வந்து அவருடைய மரணம் இயல்பானதுதான், அவருடைய சிறு நீரக காயம், அதனால் ஏற்பட்ட விளைவு காரணமாக அவருடைய மூளை வீக்கம் சுமார் 175 கிராம்(க‌டுமையான பெருமூளை வீக்கத்தால் 1,400 கிராம் எடை இருக்க வேண்டிய மூளை 1,575 கிராம் எடைக்கு இருந்தது.)

மேலும் அதிக தாக்கம் ஏற்படுத்தும் கஞ்சா, மதுபானப் பழக்கங்கள் அவரிடம் இருந்தன என்றும் புரூஸ் லீ மூளை வீக்கத்தால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறந்த நாளில் கூட அவ‌ருடைய உடலில் கஞ்சா உபயோகத்திற்கான சான்றுகள் இருந்திருக்கின்றன.வயிற்றில் கஞ்சாவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

புரூஸ் லீயின் மரணம் எக்வாஜெசிக் மாத்திரைக்கு அதிக உணர்திறன் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பெருமூளை வீக்கம் தான் காரணம் என்று அதிகாரபூர்வமாகத் தீர்மானிக்கப்பட்டது.சான்றுகள் இருந்திருக்கின்றன. ஆக ஒரு மரணத்திற்கான் உரிய காரணம் வெளி வந்து இருக்கிறது. கடைசி நாளில் அவர் டப்பிங் பணியில் இருந்த போது அவரால் சரியாக நிற்கவும் முடியவில்லை என்றும் அவர் அதிக நீர் குடிக்க வேண்டிய நிலை பற்றி அவரது மனைவி குறிப்பிட்டதாகவும் உள்ளன.

தண்ணீரை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட காரணங்கள் போக, “லீயின் மனைவி லிண்டா, அவருடைய அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுமுறை குறித்தும் கூறியுள்ளார்.

அவர் உயிரிழந்த நாளிலும் போல்லி, அவர் அதிகளவு தண்ணீர் அருந்தியதைப் பற்றி பேசினார்,” என்று குறிப்பிடும் இந்த ஆய்வுக்கட்டுரையில், புரூஸ் லீ மூளை வீக்கத்தால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக அரை நூற்றாண்டுக்கும் பின் உண்மை வெளி வந்திருக்கிறது. உண்மை வர பல காலம் தேவைப்படுகிறது.பொய்களும் வதந்திகளும் அரை நொடியில் உலகை வலம் வந்து விடுகின்றன என்பது எவ்வளவு பெரிய உண்மை.

பாரதியிடமும் கஞ்சா பழக்கம் இருந்ததாக சொல்லப் படுகிறது. விவேகானந்தா கூட புகைப் பழக்கத்தில் இருந்ததாக புத்தகங்கள் சொல்கின்றன.

நமது சுபாஷ் சந்திர போஷ் மறைவு பற்றியும் உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவரும். ஆனால் அது நமது காலத்துக்குள் வருமா என்பதுதான் கேள்விக்குறியே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


பி.கு: ஆனால் புரூஸ் லீயின் மகன் பிராண்டன் லீ டம்மி தோட்டாக்களுக்கு பதிலாக திரைப்படத் தயாரிப்பரங்கிலேயே உண்மையான தோட்டாக்கள் போடப் பட்டு சுடப்பட்டு இறந்தது உலகறிந்தது.
thanks:BBC





No comments:

Post a Comment