Sunday, July 28, 2019

இரு கை கூப்பி வணங்கியவர்க்கு இறுதி வணக்கம்.கவிஞர் தணிகை

இரு கை கூப்பி வணங்கியவர்க்கு இறுதி வணக்கம்.

வியப்பான மாறுதல்கள்: கவிஞர் தணிகை
Image result for surprise and suspense
வழக்கம் போல்தான் அன்றும் நடைப்பயிற்சிக்குப் புறப்பட்டேன். நடைப்பயிற்சி முடிந்ததும் வழக்கமாக அமரும் முனியப்பன் கோவிலில் சற்று நேரம் தியானம் அமரத் திட்டம் அடுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொண்டதால். .ஆனால் ஒரு ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள் போதும் என்ற வார்த்தை. என்ன இது புரியவில்லையே என்று புறப்பட்டேன்.

கருப்பு ரெட்டியூர் போகும் வளைவான பாதை எங்கும் சாலையில் கசங்கிய மலர்கள் இரு புறமும் . என்ன யார் என விசாரித்தேன். அதாங்க ஒங்களை கை எடுத்துக் கும்பிடுவாரே அந்தப் பெரியவர்தான்  என்றார் ஒரு நண்பர்.
Image result for surprise and suspense
ஆமாம் அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் அந்த வழியாக முடிந்தவரை தினமும் அல்லது முடியும்போதெல்லாம் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அந்டக் கூன் விழுந்த முதியவர், காந்திக் கண்ணாடி அணிந்தவர் எழுந்து நடக்கக் கூட முடியாதவர் எனப் பார்த்து தினமும் இரு கை கூப்பி வணங்குவார். நானும் வணங்குவேன். அவருக்கும் எனக்கும் அதுதான் உறவு. சில நாட்களில் ஏன் நேரமாக வந்திருக்கலாமே என்பார் தாமதமாகும்போது.

அவர் மகனும் வணங்குவார், அவர்கள் வீட்டு மருமகள் ஆரியம் அல்லது கேழ்வரகு என்பார்களே அதில் களி செய்து விற்பார்கள் அடுத்து நிறுத்தி விட்டு, காய் கறி வியாபாரம் செய்து பார்த்தார்கள் நாலுசக்கர வண்டி வைத்து சாலையோரம் அதையும் செய்ய முடியாமல் விட்டு விட்டார்கள்.

சிரித்த வெற்றிலை பாக்கு போட்ட முகம், பேத்திகளை டாட்டா சொல்ல வைப்பார்கள்.

எனக்கு அங்கு சென்று துக்கம் விசாரிக்கப் போராட்டம், கோவிலுக்கும் செல்ல முடியாதே தியானமும் செய்ய முடியாதே... போகலாமா வேண்டாமா என்று இலாப நட்டக் கணக்கெல்லாம் பார்த்துவிட்டு அவருக்கும் நமக்க்கும் என்ன உறவு அவர் ஏன் என்னை அந்தளவு மதிக்க வேண்டும், போனால் என்ன, போகாமலிருந்தால் என்ன என்றெல்லாம் யோசித்தபடி போகும்போது வேறு புறம் வளைந்து சென்று நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வரும்போது

அங்கு சென்று அவரது மகனைத் தேடி கைகளைப் பிடித்து வணங்கி அமர்ந்து துக்கம்விசாரித்தேன். 90 வயதுக்கும் மேல் ஆன முதிய தந்தை எப்படி இறந்தார் எனக் கேட்டேன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து தொடயில் இடுப்பு எலும்பு 3 பகுதிகளாக உடைந்துநொறுங்கி விட்டதாகவும், அருகே உள்ள ஆஸ்தான மருத்துவமனை மருத்துவர்  நாலுடன் ஐந்து இவரையும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள சேலம் ஒரு சூப்பர் ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்ததாகவும்  முதல்வர் காப்புறுதித் திட்டம் வழியே அறுவை சிகிச்சை செலவு இன்றி முடிந்ததாகவும் அதிலிருந்து ஒரு நாள் நன்றாக இருந்தவர் வார்டு மாற்றப்பட்டு ஐ.சி.கேர் கொண்டு சென்று வைத்திருந்ததாகவும் அதன் பின் ஒரு விடியல் காலத்தில் உயிர் பிரிந்து செய்ய வேண்டிய முறைகளை எல்லாம் முடித்து வீடு திரும்பியதாகவும் செய்திகள்....நான் அந்தக் காலக்கட்டத்தில் அந்த அறுவை சிகிச்சை தேவையா செய்ய வில்லை எனில் இன்னும் இருந்திருப்பார் ஆனால் அவருக்கு பணி விடை செய்து கொண்டிருக்க வேண்டும் நாளெல்லாம். அப்படி இருந்திருந்தால் இன்னும் சற்று நாட்களை நீட்டி வைத்திருக்கலாம் என்று சொல்லிவிட்டு

அவர் மகனிடம்  குடும்பம் பற்றி விசாரித்தேன். எல்லாம் கூறினார். இரு மகன்கள், ஒரு மகள் என்றும் மூத்த மகன் தூய தமிழ் பேர், இரண்டாம் மகன் வடநாட்டுப் பேர்.
Image result for surprise and suspense
அங்கிருந்துதான் நமது கதை ஆரம்பம். அந்த கிராமத்தில் : டிப்ளமோ படித்து 4 மாதம் சேலம் பகுதியில் இரவு நேர ப்ரவுசிங் சென்டரில் பணி புரிந்து, அதன் பின் ஊர் அருகேயே அதே பணி செய்து ஊதியம் ஏதும் உயர்வில்லாமல் இருந்த காரணத்தால் அவரே வீட்டில் இரண்டு கணினி வாங்கி யு.பி.எஸ் வாங்கி வைத்து முக நூல் வழியாக ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாட்டு வியாபார, மற்றும் சொந்தக்காரர்களின் வீடு டிசைன் வாங்கி அதற்கு இன்டீரியர் பெயிண்டிங் டிசைன் செய்து அனுப்பி வைத்து அதிலிருந்து சுமர் இப்போது 50 ஆயிரம் வரை ஊதியம் பெறுவதாகவும் அதற்கு பே பால் வழி சரியாக  துல்லியமாக ஏமாற்றாமல் பணத்தை அவர்களின் பணி கொடுப்பார் அனுப்பி வைப்பதாகவும் சரியான அவர்கள் சொன்ன நேரத்துக்கு பணியை முடித்து அனுப்பி வைப்பதாகவும் அத்துடன் பணிக்கும் சென்று வருவதாகவும் அந்த இளைஞர் கூறினார்.

அவர் தந்தை அவரை தூங்குவதே இல்லை. இதே பணிதான்... என்றார். அந்த 24 வயதில் அந்த  இளைஞர்க்கு எப்படி வந்தது அந்த பொறுப்பு என்றால், சரியாக எனக்கு ஆங்கில மொழியறிவு கூட இல்லைதான். நானும் என்னுடன் சேர்ந்து இன்னொரு நண்பரும் பணி செய்கிறோம். பெரும்பாலும் இரவில் தாம் பணி.  இதுவே பெரிய அளவில் இலட்சக்கணக்காக ஊதியம் பெறும்போது கம்பெனி ஆக்கி விடலாம் , கணக்கு வழக்குகளை கொடுக்கலாம். எல்லாம் பே பாலில் இப்போது கூட சரியாகவே கணக்கு எல்லாம் இருக்கிறது என்றார்.

நான் பெருமைப்பட்டு பாராட்டி விட்டு இந்த இளைஞர் செய்ய முடிவதை என்னால் செய்ய முடியாததற்காக இயலாமையில் இருப்பதற்காக என்னை  நானே பாராட்டிக் கொள்ள முடியவில்லை.

இப்படி ஒரு நல்ல பணி எனக்குக் கிடைத்தால் கிடைத்திருந்தால் நானும் கூட செய்ய ஆசைப்பட்டேனே அப்போதெல்லாம் அதற்கு அவர்கள் பணம் கட்டவல்லவா சொன்னார்கள் அதனால் தானே நான் கட்ட மறுத்து பணியின் முதல் ஊதியத்தில் எடுத்த்க் கொள்ளுஙக்ள் என்றெல்லாம் கேட்டேனே... என அசைபோட்டபடி வந்து தலைக்கு  குளித்தேன். லிப்ட் வீடு வரை தருவதாகச் சொன்ன நண்பரிடம் பெரியவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வந்திருப்பதைச் சொன்னேன் அவருடன் செல்ல மறுத்தேன்.

சில நாட்களுக்கும் முன் நாங்கள் இறுதி வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம் போலும்.
Image result for surprise and suspense
ஆனால் அதற்கு முன் நாட்களிலேயே அவரை மரணம் பிடித்துச் செல்லும் முடித்து விடும் என உணர ஆரம்பித்திருந்தேன். அவருக்கு கண் பார்வை மிகவும் கூர்மையுடன் இருந்தது எனை இருளில் பார்த்தாலும் இரு கை கூப்பி வணங்குமளவு...

இரு கை கூப்பி வணங்கியவர்க்கு இறுதி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment