Thursday, July 25, 2019

புதிய கல்விக் கொள்கையுடன் : கவிஞர் தணிகை

புதிய கல்விக் கொள்கையுடன் : கவிஞர் தணிகை

Related image


51 பக்கம் தமிழில் இருந்ததை நான் படிக்க எடுத்துக் கொண்ட நாட்கள் 3. ஏன் எனில் எனது கல்லூரிப் பணி முடித்து, நடைப்பயிற்சி முடித்து உண்டு உறங்கும் தருவாயில் படித்தே ஆக வேண்டும் என நிர்பந்தப்படுத்தி படித்துப் பார்த்தேன்.

இதை எல்லா தரப்பிலும் படித்துப் பார்த்து இதற்கு ஒப்புதல் அல்லது ஆட்சேபணை தெரிவிப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பது அரசு மக்களுக்கு வைக்கும் ஆப்பில் ஒரு வெளிப் பூச்சு. பெயரளவில் செய்துள்ளதுதான்.

ஏன் எனில் தந்தை பெரியார் திராவிடர் கழக இராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள் கோவையில் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடான புதிய கல்விக் கொள்கை கூட்டத்திற்கு சென்று ஆட்சேபணை செய்வதை செய்த்தை அப்படியே வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டதையும் கவனித்துப் பார்த்தேன்.
Image result for new education policy of india
மக்கள் பங்கெடுப்பாளராக எவருமே இருக்கைகளில் இல்லை. இருக்கை எல்லாமே காலியாகவே இருந்தன. மக்கள் எவருக்குமே அது பற்றித் தெரியவேயில்லை என்பது திரு ராமகிருஷ்ணன் அதில் விவாதிக்கிறார். கூட்டத்தைக் கலைத்து விட்டு அதாவது நன்றாக விளம்பரம் செய்துவிட்டு அதன் பிறகு இவ்வளவு பாதுகாப்பு முறைகளை எல்லாம் இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும்படி ஒரு அரசு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்று கேட்டார் அது மிகச் சரியாகவே இருந்தது.

அதன் பின் என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை ஔரங்க சீப் இந்தியா முழுதும் ஆள நினைத்தது போல் மத்திய ஆளும் கட்சி ஆள்கிற மனப்பாங்கில் இருக்கிறதோ என்ற கருத்து கொள்ளும்படி உள்ளன நிகழ்வுகள்.
Image result for new education policy of india
அகரம் சூரியா என்ன இது மயிருக் கொள்கை புதிய கல்விக் கொள்கை என்றதை ஆதரித்து கமல், வைகோ, திருமா, சீமான் இப்படி பலரும் ஆதரித்த பின் ரஜினிகாந்தும் திருவாய் மலர்ந்தருளி மதன் கார்கி சொன்ன கருத்துக்கு பதிலாக சூரியா சொன்னதும் மோடி வரை சென்றிருக்கிறது என்று சொல்லியதாக அறிந்தோம்.

மும்மொழிக்கொள்கை தேவையில்லை. இரு மொழிக் கொள்கையே போதும் என்ற கருத்து இவர்களுக்கு.

சூரியா சொன்னது போல இந்த நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் பயின்ற ஒரு மாணவர்க்கும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பது அவரது வருத்தம்.

மேலும் எல்லா நிலைகளிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியவர். என்றும் வடக்கத்தியார்க்கு தென்னகத்தில் நிறைய வாய்ப்புகளை இந்த நடுவண் அரசு ஏற்படுத்தி வருவது உண்மையே.

3 வயது முதலே பள்ளிக்கு செல்லவேண்டும் என ஒரு பக்கம்,
மும்மொழிக் கொள்கை என ஒரு பக்கம்
இனி எம்.பில் எல்லாம் இல்லை எனவும் பி.ஹெச்.டி மட்டுமே என்றும்

தரமான தனியார் பள்ளிகளைத்தவிர மற்ற அனைத்து தனியார் பள்ளிகளையும் மூடிவிடுவோம் என்றும்

அதே போல ஆசிரியர்களுக்கு ஒரே பொதுவான தகுதி என்றும்

ஐந்தாண்டு மேற்படிப்பு படித்தார் மட்டுமே ஆசிரியராக வேண்டும் என்றும்

5+3+3+ 4  என்பது போன்ற ஒரு கணக்கு ஆண்டுகள் படிப்பதற்கு என்றும்...

இப்படி எல்லாம் நிறைய அந்த கல்விக் குழுவினர் சொல்லி இருந்தனர் எனது நினைவிலும் சரியாக பெரிதாக பதியவில்லை

என்றாலும் எனக்கு ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது
ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஒரே மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது அது தாய் மொழியில்

அவர்கள் எப்படி இந்தியாவை விட முன்னணியில் இருக்கிறார் என இந்தியா கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்

தொடர்பு மொழி என இங்கு ஆங்கிலமா இந்தியா என்பது ஒரு கேள்வி வடக்கே இந்தி இருப்பது உண்மைதான். ஆனால் அதை அவரவர் விருப்பப் படி விட்டு விடுவதுதான்  சுதந்திர நாட்டுக்கு அழகும்.
Image result for new education policy of india
உணவு அதை அடுத்து மருத்துவம் கல்வி இருப்பிடம் உடை என எதற்குமே உத்திரவாதம் தரமுடியா அரசு வேலைவாய்ப்பு, குடிநீர் போன்றவற்றிற்கு எதையும் செய்ய முடியா அரசு சிகெரட்டை தூக்கிப் போட்டு வாயிலே கவ்விப் பிடித்த ரஜினிகாந்த் பாடத்தை படிக்கச் சொல்லி பாட நூலில் வைக்கிறது.

அத்தி வரதரை பார்க்காவிட்டால் இன்னும் 40 ஆண்டு ஆகிவிடும் என மக்களை ஏமாற்றி வருகிறது.  அருணிமா சின்ஹா என்பவர் யார் என ஒரு பாடம் வைக்கச் சொல்லி இருந்தால் பாராட்டலாம்.

சரித்திரத்தை மாற்றி எழுதி விட்டால் அது நிலைக்கும் என கணக்கு போடுகிற மத்திய அரசு...நமது மக்களைப் பற்றி தெரிந்து கொள்ள வில்லை போலும். அவர்கள் பக்திக்கு மடிவார்கள் ஆனால் அவர்களது மூன்றாம் தலைமுறையை பற்றியும் அறியார்கள். அறியும் முயற்சியும் செய்யார்கள்.

குடிநீர், மருத்துவம், போன்றவற்றிற்கு உத்தரவாதம் செய்துவிட்டு அதன் பிறகு கல்வியை தகுதி வாய்ந்த பிரதிநிதிகளை ஆலோசித்து நல்ல கல்வியைக் கொண்டு வரலாம். தரலாம். மெக்காலே கல்வியை மோசம் என்பார்களுக்கு இது எப்படியும் ஒரு மாற்று ஆகாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment