பாம்புகளின் சிநேகம்: கவிஞர் தணிகை
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் அருகே அவ்வப்போது எனது அருகாமை நிகழ்ந்ததுண்டு. ஆனால் தேவையில்லாமல் அதை அடித்துக் கொன்றதே இல்லை. ஏன் இப்படி சொல்ல வேண்டியது இருக்கிறது எனில் ஒரு முறை ஒரு பெரிய சாரைப் பாம்பு எங்கள் வீட்டில் அப்போது நிறைய இருந்த எலிகளைப் பிடிக்க சுவரின் மேல் ஏறி வீட்டுக் கோம்பை வரை வந்து படுத்திருந்தது.
வீட்டில் துணைவியார் பார்த்து விட்டு பயந்து விட்டார்கள். அதை துரத்தி விட்டு அது வந்து புகுந்த இடத்தில் எல்லாம் கற்களை வைத்து அடைத்துப் பார்த்துவிட்டோம். அங்கே வரவழி விடவில்லை. . எங்களது வீடு ஓட்டு வீடுதான். வில்லை வீடு என்றும் சொல்வார்கள்.
அந்த நிகழ்வுக்கும் பிறகு கொஞ்ச நாள் கழித்து எங்களது வீட்டின் பெரும் தைரியசாலியான நபர்...பயந்தாங் கோழி என்பதையே பயந்தாங்க் கொள்ளி என்றும் தமிழில் ஆக்கி விட்டார்கள்...துணைவியார்தான் இரண்டு பெரிய பாம்புகள் வந்து விட்டன என்று பயத்தில் ஆடு ஆடு என்று என்னிடம் ஆடினார்கள். பாம்பு தான் படம் எடுத்து ஆடும் என்பார்கள். ஆனால் அவர்கள் ஆடிய ஆட்டமே எனக்குப் பெரியதாக இருக்கப் போய், நான் பார்க்கும்போது எனது கண்களுக்கு அகப்படவில்லை.
இனி அது அல்லது அவை இங்கே வந்தால் அவை உயிரோடு போகாது என தைரியம் அளித்து வேறு இடம் எல்லாம் குடி போகவேண்டிய தேவையில்லை என ஆறுதல் படுத்தி வைத்திருந்தேன்
பொதுவாகவே எனக்கு பாம்பைக் கண்டால் எல்லாம் பயம் இல்லாமல் இருக்கக் காரணம். சிறு வயது முதல் பல பாம்புகளை பல்வேறுபட்ட சூழல்களில் கண்டிருந்ததுதான்.
எனது அக்காவும் தந்தையும் அடிக்கடி கோதுமை நாகம் பாம்பை அடித்து அதற்கு மஞ்சள் துணியும் நாலணாவும் முடிந்து நெருப்பு வைப்பார்கள்.
எங்கள் வீட்டுப் புழக்கடையில் நிறைய பூஞ்செடிகள், நிறைய மரவகைகள், புல் பூண்டு புதர்கள் உண்டு. எனவே பாம்புகளுக்கு பஞ்சமில்லை.
புளிய மரங்களில் பச்சைப் பாம்புகள் தொங்கியபடி சிட்டுக் குருவிகளை அப்படியே முழுங்க முடியாமல் முழுங்கியபடி இருக்கும் காட்சிகள் பல முறை எங்களுக்கு கிடைத்தபடி இருக்கும் அதில் உணவுக்காக குருவியைப் பிடித்த பாம்பு பாவமா உயிருக்காக போராடும் அந்தக் குருவி பாவமா ....அது மரணப் போராட்டத்தில் கீச் கீச் என்று கத்தியபடியே இருக்கும் வாயுள் போய்க் கொண்டே... சில நேரம் விதிவிலக்காக காப்பாற்றி விடுவோம் குருவியை பாம்புக்கு கிடைத்த இரையை ஏமாற்றிப் பிடுங்கி விடுவோம் அது/குருவி பறந்துவிடும் சில நேரம் பறக்கவும் முடியாது நீர் குடிக்க கொடுத்து ஆசுவாசப்படுத்திவிடுவோம். சில நேரம் இரையை வைத்து முறத்தைக் கட்டி கயிற்றின் மூலம் குருவி வந்து இரை பொறுக்க அதைப் பிடித்து வறுத்துத் தின்ற கதை எல்லாம் உண்டு. உண்மைதான். ஆனால் இப்போது வெறும் மரக்கறி உணவாளர்தாம்..
சில நேரம் காகத்தின் கால்களில் வைத்திருக்கும் கொடுக்காப் புளி என்னும் கோணப் புளியங்காயை காக்கையை துரத்தி விட்டு கீழ் விழுவதை நாங்கள் எடுத்து உண்பது போல... அந்த பாம்பின் உணவை அதனிடமிருந்து பிடுங்கியதும் உண்டு இரை அது பிழைக்க.
இதன் தொடர்ச்சியாக: மூலிகை பறிக்கப் போய் கையை புற்களில் வைத்தால் அங்கிருந்து விருண்டெழுந்து ஓடிய பாம்பு, மலைவாழ் பணி செய்கையில் மாடு ஆடு போகாதிருக்க கட்டிய தட்டிப் படல் மேல் நள்ளிரவில் கால் எடுத்து வைக்க நேர்கையில் அதன் மேல் படுத்திருந்த பாம்பை கொல்லாமல் இருந்ததுண்டு.
கேம்ப் காட் எனப்படும் கட்டிலை விரித்தால் அதன் மடிப்பில் உள்ளிருந்த பெரும் பாம்பை அடிக்காமல் அனுப்பியதுண்டு.
ஆனால் என்ன இருந்தாலும் பாம்பு வீட்டுள் புகுந்து விட்டால் அது ஒரு கவலைக்குரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்பது நமக்கு ஏற்பட்ட அனுபவமும் அறிகுறியும் என்பது உண்மைதான்.
ஒரு முறை எங்கள் வீட்டில் ஒரு குட்டிப் பாம்பு புகுந்து திண்ணை வரை வந்திருந்தது. அதை அடித்தோமா அடிக்காமல் விட்டோமா மறந்துவிட்டது. ஆனால் பெரும் கலகம் ஒன்று வெடித்து வாழ்வெலாம் ஒரு குடும்பப் பகை வந்திருந்தது.
அதே போல் பிறர் வாழ்வில் நடந்த கதையல்ல உண்மைச் சம்பவங்களும் உண்டு. எனவே பாம்பு புகுந்த வீட்டில் குடி இருக்காமல் காலி செய்து வேறு வீட்டுக்கு குடி புகுவாரும் உண்டு.
எத்தனையோ பாம்புகளை சாலைகளில், நடைப்பயிற்சி செல்கையில் ஒதுக்குப் புறமான நான் தியானம் செய்யும் கோவில் படிகளில் ஏராளமான முறை கண்டதுண்டு கடந்ததுண்டு. பிறர் அதை அடித்துப் போட்டதையும் கண்டிருக்கிறேன். நம்மைப் போல் வேளாண் தொழில் செய்வார் அதை அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டார்கள். அப்படி ஒரு முதிய பெண்ணே கூட அவர்கள் காட்டில் வந்த பாம்பைஅடித்துக் கொன்றதை கண்டிருக்கிறேன் விறகு வெட்டி பழனிசாமி, தொழில் அதிபர் மாரிமுத்து இப்படி நிறைய பேர் அடிக்க அதைக் காட்டிக் கொடுத்த பாவமும் எனக்குண்டு, ஏன் எங்களது ஒரு நாயை முகத்தில் கடித்திட நாய் அதைக் கடித்த காரணம்...நாய் இறந்த நிலை எல்லாம் உண்டு..
எந்தப் பாம்புமே நம்மைக் கடிக்க வேண்டிய கட்டாயத்தில் சினிமாவைப் போல, கதையைப் போல, காத்திருப்பதில்லை என்பது உண்மைதான்.
சொல்ல மறந்து விட்டேனே...எனது வீட்டில் அந்த சாரைப் பாம்பு மறுபடியும் வந்திருந்தது. அதை விரட்ட வழியில்லை அங்கே இங்கே என்று சென்று சுருண்டு கொண்டு படுத்தபடி ஆட்டம் கட்டியது. எனவே அதை போட்டுத்தள்ள ஒர் உலக்கையைப் பயன்படுத்தினேன். அடி வாங்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியதை...சில நாட்கள் கழித்து பக்கத்து வீட்டுக் கொல்லைப் புறத்தில் எறும்பு அரிக்க இறந்த காட்சியை பக்கத்து வீட்டார் எல்லாம் ஒரே குடும்ப உறவு முறைதான்...காட்டினார்கள். அது எப்படி நிகழ்ந்ததோ என நாங்கள் தாம் அதை அடித்தது என காண்பிக்காமல் விட்டு விட்டோம்.
இதை எல்லாம் செய்யாவிட்டால் குடும்பமே கூட சிதைந்து போய் இருக்கலாம். சில நேரங்களில் இராமலிங்கராகவும், சில நேரங்களில் காந்தியக் கொள்கையான அஹிம்சையுடனும் சில நேரம் வேளாண் தொழில் செய்வாரைப் போலவும் களை எடுப்பதைப் போலவும் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் குடும்பம் நடத்தவும் வழி இருக்காது போலிருக்கிறது
நீரில் நெளியும் புழுக்கள், காற்றில் நம்மை பதம் பார்க்கும் கொசுக்கள் தெரியாமல் மிதிக்கும் எறும்புகள் போல் அன்றாடம் உயிர்களை நாம் அழித்தபடியே இருக்கிறோம் இதில் கொசுக்கள் நம்மை பாதிப்பது, புழுக்களும் ....
அடிபட்ட பாம்பு எறும்பு ஏறி விட்டால் அதோகதிதான். எல்லா பாம்புகட்கும் விஷம் இல்லை. ஆனால் காற்றிலேயே விஷத்தை வீசி எதிரியைக் கொல்லும் பாம்புகளும் உண்டு என்பதெல்லாம் சொல்கிறது பாம்பு சார்ந்த படிப்பு. ஆனால் பொதுவாக சுமார் 600 வகையான பாம்பு இனத்தில் 30 அல்லது 40 இனத்திற்கே விஷ நச்சு உண்டு என்பதும் அதில் ஒரு சில இனத்திற்கு மட்டுமே மனிதர்களைக் கொல்லும் விஷ அளவு உண்டு என்பதும் அதே அறிவியல்
பாம்புகள் கடித்து கொத்தி இறப்பாரை விட பயத்தில் அந்த விஷம் கலந்து போன நச்சு உடனான இரத்தம் மூளைக்குச் சென்று விட இறப்பாரே அதிகம் என்பதும் செய்திகள்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment