திருமண வாழ்த்து
மடல்:
கவிஞர்
தணிகை
நாள்: 30.11.2025 ஞாயிறு இடம்: கந்தி குப்பம் விண்ணரசி ஆலயம்
மணமகன்: பொறி:P.சுனில் ஜெரோம்M.E மரு.A.பிலோமின் பிரிசில்லா.M.B.B.S,
கண்டேன் ஒரு நல்மனிதரை அன்றொரு நாள்
சேலம் குகை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
கலாம் மாமனிதர் பேர் சொல்லி முதல் சந்திப்பிலேயே
ஆயிரக்கணக்கான பள்ளிச் சிறார்களுக்கு எனது உரையை
வழங்கச் செய்தார்.
இவரும் சாதரண மனிதரல்ல பள்ளியை விரிவுபடுத்தி
ஆயுளை ஆன்மாவை விதைத்தவர், அன்று முதல்
இன்று வரை அவருடன் கலந்த அந்த மணி நேரங்கள்
என்றும் பசுமையுடன்.
நல் ஆசிரியர் விருதைப் பெற தகுதியான இவர் என்றும்
எனது உறவைத் தொடர்வதே எனக்குப் பெருமை இவர்
நல் ஆசிரியர் விருதைப் பெற்றதால் ஆசிரியர் குலத்துக்கு(ம்) பெருமை
முகாம் நடத்த முகம் சுளிக்காமல் தன்னால் இயன்றதை
செய்த பெரிய உள்ளம் அவர்தான் பனிமேதாஸ் எனும் மேதை.
M.பனி மேதாஸ் M.Sc,M.Phil,M.Ed, இணையர் :A எமிலி ஜோன் ஆப் ஆர்க் M.A,Phil,B.Ed
இருவரின் இளைய புதல்வன் பொறியாளர்: சுனில் ஜெரோம்
மருத்துவர் பிலோமின் பிரிசில்லா இணையவிருக்கும்
திரு நாளில் ஒரு நாளாய் ஞாயிறு வருகிறது.
தெய்வம் போற்றுதும், செம்மழை போற்றுதும்
ஞாயிறு போற்றுதும், நானிலம் போற்றுதும்
மதங்களைக் கடந்து அரிய உள்ளங்களை மனித நேயத்துடன்
அரவணைத்து வாழ்த்தை என்றும் கோர்க்கிறோம்
எமது குடும்பத்தின் மன மலர்களின் மணமாக....
அன்பு மனங்கள்:
கவிஞர் தணிகை
இணையர்: த.சண்முகவடிவு
புதல்வர்:T.G.R.S மணியம்.B.E,
No comments:
Post a Comment