Saturday, November 22, 2025

திருமண(ம்) 01.12,2025 வாழ்த்து : கவிஞர் தணிகை

  

திருமண(ம்)  01.12,2025 வாழ்த்து மடல்

தாரமங்கள கைலாய நாதர் ஆலயம் & கரிகால் நகர்     மண்டபம்

மணமகன்: ரிஷி விக்ரம் B.E,     மணமகள்:  நவீனாB.Tech


 

எனது சுவர் எழுத்துகளை தவறாமல் பெரியவர் ஒருவர் படிப்பார்

அவரும் நானும்  பேசியதாக நினைவில்லை...அவர் S.M.  தனபால்

 

அவரது பெயரன் ரிஷி விக்ரம் நவீனா கரம் கோர்க்கும்

திருமண விழாவிற்கு மகன் நந்தகுமார்

வாழ்த்த அழைக்கும் நேரம் பல சுற்றமும் சூழமும் வந்திணையும் நேரம்

 

உரிய நேரத்தில் கிடைக்கும் சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனி

என்கிறது விவிலியம்.

அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது என்கிறது முகமதியம்

பதினாறும் பெற்று பெருவாழ்வு  வாழச் சொல்கிறது  எமது ஆன்மிகம்

 

மணமக்கள் மன ஒருமைப்பாட்டுடன் ஈருடலும் ஓருயிருமாய் காலமெலாம்

வாழையாக, அருகாக, ஆலாக,மூங்கிலாகஎன்றும் வாழ வாழ்த்துகிறோம்

 

என்றும்

கவிஞர் தணிகை

T.S.வடிவு

T.G.R.S.மணியம் குடும்பத்தார்.


No comments:

Post a Comment