குடிகாரக் கூத்தாடிகள்: கவிஞர் தணிகை
காமராசர்: கூத்தாடிகளிடம் நாட்டைக் கொடுத்தால் கூத்தியாளிடம் கொடுத்து விடுவர்
காந்தி: நான் சர்வாதிகாரியாக அரை மணி இருக்க நேர்ந்தால் இந்தியாவில் மதுக் கடைகளை மூடிவிடுவேன்
பாரதி: எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்
க்ளாப்: ரோல் காமிரா ஆக்சன்,கட் இயக்குனர் சொல்லியபடி ஆடும் கைப்பாவைகள்
இயக்குனர், கதை வசனகர்த்தாக்கள், பாடல் எழுதுவார், இசை,பின்னணி, ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு, ஒட்டல் வெட்டல் இப்படி அனைவரும் ஒருங்கிணையும் சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் ஊதியம் எதற்கு இவ்வளவு?
பிணம் எரிப்பார்க்கும் அடக்கம் செய்வார்க்கும், தூய்மைப் பணியாளர்க்கும் தானே ஊதியம் அதிகம் இருக்க வேண்டும்?
அரசு விழாவில் மதுவை நுகர்ந்த மாமேதைகளைப் பற்றி கூசாமல் பேசுகிறது தமிழக மேடைகள்... அவர்கள் எல்லாம் மானிடப் பிறவியே அல்ல என்கிற வார்த்தெடுப்புகள், வளர்த்தெடுப்புகள்...
இறந்து போன நம் மண்ணின் மைந்தர்களே அவர்கள் என்ன தேவர்களா? தேவதைகளா? அவர்கள் உடலுக்கும் கழிவு உண்டு, துர்நாற்றம் உண்டு, வியர்வை உண்டு பிறர்க்கு ஊறு விளைவிக்க முயலாதவர் வாழ்வை விட வேறு எந்த வாழ்வும் உயர்ந்ததல்ல. மக்களும், அரசும், கட்சிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை பின்னிப் பிணைந்தவை.
யாரது கடவுளா?
கூட்டத்தில் குடிநீர்ப் பாட்டில்களை வீசினால் முண்டியடிக்க மாட்டார்களா என்ற அடிப்படை அறிவற்றார் கூட நமது தலைவர்களா?
மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற மகாத்மாவின் சிலைக்கு சாயம் ஊற்றி அசிங்கப் படுத்தல் பற்றிய நடந்த செய்திகள் இன்றும் வந்திருக்கிறது
சாலை விதிகளை கற்றுத் தரவேண்டிய கல்விச் சாலைகள்
உடல் ஆரோக்கியம் உடல் உறுப்புகளின் பராமரிப்பு, உடற்பயிற்சி, உட் கொள்ளல், கழிவு, வாய் சுகாதாரம், ஆசன வாய் சுகாதாரம், பற்றி எல்லாம் கற்றுத் தரவேண்டிய பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதற்கு கூட்டம், எப்படி கூட்டம்....என்ற கட்டுப் பாட்டையும், எவை சிறந்தவை, எவை தாழ்ந்தவை என்பது பற்றி எல்லாம் சொல்லித் தர வேண்டுமல்லவா? உலகுக்கே வழி காட்டும் ,வழி காட்டிய வள்ளுவம் வாழும் நாட்டில் இது யாவர்க்கும் தலைக் குனிவு.
கட்டுப்பாடு இல்லா விடுதலை, ஒழுக்கம் இல்லா சுதந்திரம், தியாகம் இல்லா சாதனை பயனற்றது என்றார் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன், தத்துவ ஞானியும் கூட.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment