2025 09 05 எப்படி சிறந்தது? இனி திரும்புமா இது போல் ஒரு நாள்: கவிஞர் தணிகை
செப்.05 அனைவரும் அறிந்ததே ஆசிரியர் தினம் என்பதும் நமது முன்னால் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆசிரியராக இருந்த இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் என்பதும்,
அன்றே மிலாடி நபி...நபிகளின் பிறந்த நாள் என்று கொண்டாடப் படும் நாள்
அத்துடன் ஓணம் பண்டிகை: மகாபலியை வரவேற்று வாசலில் அத்தப் பூக்கோலம் இட்டுக் கொண்டாடும் நாள்
செக்கிழுத்த வ.வு.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள்
மேலும் அன்னை தெரஸாவின் நினைவு நாள்
என அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து விழாக் கொண்டாடும் ஒரு நாளாக அமைந்திருக்கிறது மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது.
இது போல் இனி ஒரு நாள் 5 நிகழ்வுகளை உள்ளடக்கி ஆங்கிலத்து 05 செப்டம்பரில் வருமா என காலத்தை பின் தொடர்ந்து கவனிப்போம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.