அப்பாவின் திருமண வாழ்த்து பிள்ளைக்கு
க.அருண்பாரதி B.E, L.L.B(Hons) நா.பார்கவி B.B.A, L.L.B(Hons)
திருமண வரவேற்பு இடம்: நாமக்கல் கோஸ்டல் ரெசிடென்சி சிந்து மஹால்
நாள்: 02.03. 2025 ஞாயிற்றுக் கிழமை நேரம்:மாலை:6மணி முதல் இரவு 9மணி
கருணாநிதி வழி சரஸ்வதி வழி அருண் பாரதி வழி பார்கவி அறிந்தோம்
ஒலி,மொழி இலா உணர்வலை எம்முள் திகழும் பரவும்
தகதகவென தகதகவென சுழன்றாடும் கதிரொளியில்
காலைப் பனிப்புல்லும் மலர்ந்தாடும்
கலகலவென கலகலவென நீரோடும் காற்றும் தீயும்
கலந்தொரு சுடர் உருவாகும்!
கணகணகணவென கணகணவென கனவொடு மணியாடும்
காதுகளே கண்களாகிட உயிர் ஒளியாகும்
பளபளவென பளபளவென முகமாகும் பலப்பல
நிறங்களும் குணங்களும் மணங்களும் உள்ளாடும்!
பாரெலாம் கவி விளைந்தாடும் இடமெலாம் கலையாகும்
அருண் பாரதியின் வாழ்வுமதனால் சுவையாகும்
கல்வியும் செல்வமும் சேர்வதென்பது அரிதாகும்
கலந்தொருமித்தது அதனாலிங்கு பெரிதாகும்!
கருத்தொருமித்து வாழ்வதென்பதே நெறியாகும்
கணக்கிரு பிள்ளைகள் பெறுவதின்றைய அறமாகும்
அளவறிந்தபடி வாழச் சொல்வதே தமிழாகும்
அதிகம் போனால் அமிழ்தும் கூட நஞ்சாகும்.
என்று(ம்) வாழ்த்துவது சுடர் தணிகையின் நெஞ்சாகும்
கவிஞர் தணிகை
த.சண்முக வடிவுடன் த.க.ரா.சு.மணியம்.
No comments:
Post a Comment