புதுசாம்பள்ளி சுடுகாட்டில் நவீன தகன எரிவாயு மேடை: கவிஞர் தணிகை
கடந்த 21.12.2024 முதல் புதுசாம்பள்ளி சுடுகாட்டில் வீரக்கல் புதூர் பேரூராட்சி சார்பாக நவீன தகன எரிவாயு மேடை செயல்பட்டு வருகிறது.
இந்த சுடுகாட்டில் எல்லா இடங்களும் சமாதிகளால் நிறைந்திருக்க இடப் பற்றாக்குறை நீக்க இதெல்லாம் காலத்தின் கட்டாயம். அவசியத் தேவையும் கூட.
எல்லா சமாதிகளையும் இடித்து நிரவி விட்டு மறுபடியும் கூட சில பிரபலமான நாடுகளில் இடங்களில் சமாதி அமைவதாக அமைப்பதாக படித்திருக்கிறேன்.
எனவே மனித வாழ்வில் நிலையாமை அலையாமை கருத்து செறிவுடன் இந்த நவீன தகன எரிவாயு மேடை அமைக்கப் பட்டு செயல்பட்டு வருவது வரவேற்கத் தக்கதாகவே கருதுகிறேன்.அரசுக்கு நன்றி செலுத்தலாம். அதன் கட்டணம் மற்றும் விவரங்களுக்கு:
தொடர்பு எண்கள்
98945 99297
82488 08824
என்ற எண்களும் விளம்பரப் பதாகைகள் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளன.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
P.S:
முன்பெல்லாம் இதற்காக நவீன முறைக்காக இந்தப் பகுதியில் இருந்து கீழ் மேட்டூருக்கு சுமார் 10 கி.மீ தொலைவுக்கு சென்று இந்த தேவையை நிறைவு செய்ய வேண்டி இருந்தது. இப்போது இங்கேயே செயல்பட ஆரம்பித்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment