மேட்டூரில் கார்த்திகை தீபம்: கவிஞர் தணிகை
கார் திகைவது, மேகம் கலைவது இது முதல் என்பதெல்லாம் காலம் மாறிப் போச்சு. இயற்கை மாறுதல்கள் மட்டுமே நிரந்தரம் என்று உரைப்பதே வாடிக்கையாய்ப் போச்சு.
மழை, புயல் வளிமண்டல நதிகள், பனிக்கட்டி கரைதல், உருகுதல், பனி மழை யாவும் காலம் மாறி மாறி உயிர்களை வாட்டிக் கொண்டிருக்க வழக்கம் போல அல்ல புதிதான கார்த்திகை தீபம் இந்த ஆண்டு மேட்டூரில் அது நிறைய பேருக்குத் தெரியாது எனவே இந்தப் பதிவு அவசியமாகிறது சரித்திரமும் ஆகும் இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் போது , தொடருமானால்...
எந்தப் புண்ணியவான்களோ, காவிரி ஆற்றங்கரையில் உள்ள தேசாய், நகர் பகுதி அல்லது வைத்தீஸ்வரா பள்ளிக்கு பின் புறமுள்ள திப்பு சுல்தான் கோட்டை , அது மிகவும் சரிசம விகித முக்கோணமாக உச்சியுடன் காட்சி அளிக்கும் குன்று அது.மேட்டூரின் மிக உயர்ந்த பகுத் உச்சி அதுவே.அதன் மேல் கார்த்திகை தீபம் ஏற்றி பட்டாசையும் வெடித்துக் கொண்டாடினர். அதை வழக்கம் போல நடைப் பயிற்சியில் இருந்தபோதே சில பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதும் நானும் நண்பர் ஒருவரும் கண்டு மகிழ்ந்தோம்.
சில ஆண்டுகளுக்கும் முன் இந்தச் செயலை முன்னிறுத்தி ஒரு பதிவை ஒரு நாயகன் முயன்று பார்த்து செய்ய முடியாமையை தன்னைப் பற்ற வைத்து தீபமாக எரிந்து அந்த மலைக் குன்றின் மேல் இருந்து விழுவதாக எழுதிப் பதிவிட்டிருந்தேன் ஒரு இலக்கிய நண்பர்கூட அந்தப் பதிவு சிறப்பாக வந்திருந்ததை பாராட்டி இருந்தார்.
மேலும் அந்த திப்பு சுல்தான் கோட்டை மேட்டூர் நீர்த் தேக்கத்திலிருந்து படிகள் உள் ஓடி மைசூருக்கு செல்வதாக எல்லாம் செய்திகள் உண்டு. அங்கே ஒரு கோட்டைக் கொத்தளத்துக்கு உண்டான எல்லா தகுதிகளும் இருந்ததை சிலமுறை நாங்கள் சென்று கவனித்தது உண்டு. கவாத்து திடல் உட்பட....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
இன்றுதான் தாங்கள் பார்த்துள்ளீர்களா கடந்த 4 5 வருடங்களாக ஏற்றி கொண்டுள்ளார்கள். இந்த மலைக்கு பெயர் தேன் கல் பாறை (அதாவது தேன் கூடுகள் பெரிய பெரிய அளவில் இருந்ததனால் தேன் கல் பாறை என பெயர் ) பின்னர் அது மருவியது தேங்கல்வாரை என்று . இதன் பெயரில் ஒரு சிற்றூர் இருப்பது தங்களுக்கு தெரியவில்லை போலிருக்கு அந்த ஊரை தாண்டித்தான் தேசாய் நகர் , வைத்தீஸ்வரா பள்ளியும் உள்ளது. தாங்கள் தேங்கல்வாரை என மாற்றி போட்டால் நன்றாக இருக்கும்.
ReplyDelete