Tuesday, February 13, 2024

1801 துரோகத்தில் கருகிய சுதந்திர மலர்கள்: கவிஞர் தணிகை

 


1801 துரோகத்தில் கருகிய சுதந்திர மலர்கள்: கவிஞர் தணிகை


எத்தனை மொழிகள்,எத்தனை நூல்கள், எத்தனை நூலாசிரியர்கள், எத்தனை மதங்கள் எத்தனை கடவுள்கள் ஒரு ஜென்மம் போதாதே.

1801 இந்த நூலை முனைவர் மு. ராஜேந்திரன். இ.ஆ.ப அவர்கள் எழுத 2016ல் வெளியிட்டுள்ளனர் முதல் பதிப்பாக அகநி பதிப்பகத்தார் விலை ரூ.500 சுமார் 544 பக்கங்கள்.

முனைவர் இறையன்பு, முனைவர் பாலகிருஷ்ணன், முனைவர் பாலச்சந்திரன், முனைவர் மு. ராஜேந்திரன் போன்றோர் தமிழுக்கு நல்ல இலக்கிய‌ பணியாக இந்தியர் ஆட்சியர் பணியில் இருந்தபடியே செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.


1801...இந்த நூலைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.


சில உறுதி மொழிகள், சில சலுகைகள், கொஞ்சம் பணம் கொடுத்தால் இந்த மண்ணில் துரோகிகள் கிடைப்பார்கள் நாங்கள் எல்லா நேரங்களிலும் ஆய்தம் ஏந்தி போர் புரிய வேண்டிய தேவையில்லை என்கிற வெள்ளை ஏகாதிபத்தியம்.


ஆசிரியர் நிறைய உழைத்திருப்பது இதில் வரும் எண்ணிறந்த மனிதர்களின் உள் வாங்கல் மூலம் தெரியவருகிறது. எப்படிப் பெற்ற சுதந்திரம்? என அறிய விரும்பும் அனைவரும் இந்நூலைப் படித்தாகவேண்டும்.


வாழ்வதே மானத்திற்காகத்தான்...என்ற ஒற்றை மருது சகோதரர்களின் வரி இந்த நூலின் ஒரு அடையாளம்.


பங்காளிச் சண்டை, மாமன் மைத்துனர், பத்து மனைவிகள் இருந்தும் ஆண் வாரிசு இல்லாமை, ஐந்துடன் ஒன்று சேர்த்து 6 மனைவிக்ள் ஆனாலும் அண்ணார் மகன் ஆட்சிக்கு வரவேண்டிய நிலை, ஒரு மன்னர் இறப்புக்கு 49 மனைவிகள் உடன் கட்டையேறி தீயில் விழுந்து இறத்தல்


மன்னரின் மணம் சாதிக்கு அப்பாற்பட்டது


எத்தனை சாம்ராஜ்ஜியங்களும், அதன் கனவுகளும் , முரண்களும் இப்படி துரோகத்தால் வீழ்ந்துள்ளன என்பதை தெளிவாக்குகிறது. மேலும் முகமதியர்கள், ஆங்கிலேயர்கள்,போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் எல்லாம் இந்த திராவிட அல்லது தமிழ் இனப் பெண்களுடன் சேர்ந்து எப்படி ஒரு கலப்பினம் உருவாகக் காரணமானது... ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வேறுபாடுகள் இருந்தாலும் மணக்கலாம் என்ற காலத்தின் பாகுபாடு நன்கு தெரிகிறது ஆண் பெண் என்ற இரண்டே இனம் தான் என்பதை அவை சொல்கின்றன.


எல்லாம் போராளிகள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டு தூக்கில் இடப்படுகின்றனர். அதிகம் செலவின்றி பனைகள் நடப்பட்டு கயிறுகள் கட்டப்பட்டு தொங்க வைக்கப் படுகின்றனர் தியாகக் கொடிகளாக அவர்கள் பிணங்கள் ஆடிக் கொண்டிருக்க வெள்ளை வெறியர்கள் கொக்கரித்தபடி ஆளுகின்றனர் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை காலனி ஆதிக்க நாடாக முழுமையாக தந்திரத்தால் மாற்றிக் கொள்கிறது. வீரம் எடுபடவில்லை. ஆய்தம் அறிவியல் சில காரணக் கூறுகள்.


"வெள்ளையர்களிடம் நம்மைக் காட்டிக் கொடுத்து, நம்மவர்கள் நமது தோள்களிலும் மார்புகளிலும் மாட்டிக் கொண்டு திரிகிற பட்டங்களும், பதக்கங்களும் எமது மறைவிடங்களில் வளரும் மயிருக்குச் சமமானவை. அவர்கள் உண்ணும் உணவு மலம்தான். அவர்களுடைய பெண்டாட்டியும் பிள்ளைகளும் மற்றவர்களுக்கு உரியவர்கள். கூட்டிக் கொடுத்த இந்த இழிபிறவிகளுக்குப் பிறந்தவரகளாக அவர்கள் கருதப்படுவார்கள்.ஆகையால் ஆங்கிலேயருடைய ரத்தத்தால் ரத்த நாளங்களிலும் யார் யார் மாசுபடவில்லையோ அவர்கள் எல்லாம் எங்களோடு ஒன்றிணையுங்கள்...இப்படிக்கு பேரரசுகளின் ஊழியன் சின்ன மருது பாண்டியன்... என திருவரங்கம் கோயில் உட்பட எல்லா இடங்களிலும் இந்த பதாகை ஒட்டப்பட்டிருக்கிறது. எனவே ஆங்கிலேயர்கள் சீற்றமுறுகிறார்கள் சின்ன மருதை தீர்த்துக் கட்ட‌

கான் சாகேப் கான், சின்ன மருது, பெரிய மருதுவின் தலை தனியே முண்டம் தனியே என வெவ்வேறு ஊர்களுக்கு சென்று புதைக்கப்படுகிறது.  ஆயிரக்கணக்கான பேர் தூக்கிலிடப் படுகிறார்கள். 5 வயது உள்ள பாலர்கள் எல்லாம் நாடு கடத்தப்பட்டு மலேயே போன்ற கண் காணா இடத்துக்கு 40 நாள் கப்பல் பயணத்துடன் குற்றுயிரும், கொலையுயிருமாய் சோறு தண்ணி இன்றி அனுப்பப் படுகிறார்கள். அதிலும் மருது சகோதரர்களின் பேரர்கள் கூட தூக்கிலிடப்படுகிறார்கள்

மரங்களும், மிருகங்களும் துரோகம் செய்யாது, காட்டிக் கொடுக்காது மனிதர்களில் தாம் துரோகிகளை உருவாக்க முடியும். வெள்ளைக்காரன்கள் அவன் படையில் வீரர்களை உருவாக்கிறான்களோ இல்லையோ துரோகிகளை உருவாக்கி விடுவான்கள்..

வாழும் போதே சரித்திரமானவர்கள், வீழ்ந்த பிறகு சரித்திரமானவர்கள் என இரு பிரிவினரைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். அதில் வாழும் போது சரித்திரமானவர்கள் பற்றி எம் போன்றோர் ஏற்பதற்கில்லை ஏன் எனில் அவர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வேலைக்காரர்கள். வீழ்ந்த பிறகு சரித்திரமானவர்கள் மட்டுமே இந்திய சரித்திரத்தின் தியாகப் பக்கங்களின் அத்தியாயங்கள்.

கனமாகிப் போன இதயத்தின் சுமையை என்ன சொன்னாலும் என்னால் தூக்கி வெளியே வைக்க முடியவில்லை. இந்த நூலைப் படித்துப் பாருங்கள் இந்திய சரிதத்தின் துடைத்தெறிய முடியா, விலக்கி வைக்க முடியாப் பக்கங்கள். கறைகளுக்கும் தியாக வேள்விகளுக்கும் இடையே நடந்த ஒரு யூகிக்க முடியா யுத்தம் இதை நன்கு பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். பாராட்டுகள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: அன்புச் சகோதரர் சிவக்குமார் தலைமை ஆசிரியர் அளித்த 

       1. ஃபிடல் காஸ்ட்ரோ எழுச்சியூட்டும் நூல்,

       2. 1801. அவசியமாக தென்னக சுதந்திர வேட்கை பற்றி அறிய வேண்டியது

       3. இரண்டாம் இடம்: வாசுதேவன் நாயர்...ஏற்கெனவே அறிந்த மஹாபாரதம்.

       4. அருந்ததி ராயின் சின்ன விஷியங்களின் கடவுள் நாவல் சிறப்பாக இல்லை (என்னளவில் குறைந்த பட்சம் )

5. ஓஷோ மறைந்திருக்கும் உண்மைகள் இரண்டும் கெட்டான்.


       இரண்டாம் இடம்: குந்தி தேவி சொல்கிறாள்: அது திரௌபதி என்று தெரிந்தேதான் நான் ஐவரையும் பங்கிட்டு பிரித்து வைத்துக் கொள்ளச் சொன்னேன் ....பீமனின் மனந்திறந்த கதையாக... எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாள நாவல் கதையை குறிஞ்சி வேலன் மொழி பெயர்த்துள்ளார்.  நன்றாகவே இருக்கிறது என்றாலும் தெரிந்த கதை பல முறை கடந்து சென்ற கதை என்பதால் மேலும் சொல்ல பெரிதாக சிறப்பாக ஏதுமில்லை என்றாலும் கிருஷ்ணனும் தோற்றவன் தான் என்பது, கடோத் கஜன் ஒரு காட்டு மனிதன் எனவே அவனுக்கு வீரனுக்கு உரிய சத்திரியனுக்கு உரிய கடைசி மரியாதை எல்லாம் தேவையில்லை என்பது போன்ற நிறைய கேள்வி எழுப்ப காரணமாகும் நூல்.

thanks to

Siva Kumar

Head master

Amaraththaanoor middle school







No comments:

Post a Comment