Sunday, February 5, 2023

கலை வாணி வாணி ஜெயராம் இறப்பு இசை உலகின் பேரிழப்பு: கவிஞர் தணிகை

 கலை வாணி வாணி ஜெயராம் இறப்பு இசை உலகின் பேரிழப்பு: கவிஞர் தணிகை



தமிழ்க் குயில்,கலைவாணி, இசை வாணி வாணி ஜெயராம், திடீர் மறைவு இரு பாடங்களைத் தருகிறது. உடல் பொருள் ஆவி அல்லது ஆன்மலயிப்பு, அர்ப்பணிப்பு வீண் போகாது என்பதும், வயோதிகத்தில் உடன் துணயின்றி வாழ்வது தவறு என்றும். உடன் இருந்து உடனே மருத்துவ உதவி கிடைத்திருந்தால் இவர் நேரே சென்று பத்ம பூஷணைப் பெற்றிருக்கலாம் மேலும் வாழ்வை நிறைவு செய்யுமளவு வாழ்ந்திருக்கலாம். விபத்தா? வேறா அதை காவல்துறையின் கடமைக்கு விட்டு விடுவோம். Death always inevitable and  unexpected.


உங்களுக்குத் தெரியாதது இல்லை, புதிதாக ஒன்றும் இல்லை என்றாலும் இது தேவைதான் இந்தப் பதிவைத்தான் சொல்கிறேன். 


ஏன் எனில் இப்போதெல்லாம் கிரைம், ஹாரர், செக்ஸ் என செய்தி மட்டுமே எண்ணற்ற‌ மனிதரால் செய்தியக்கப்படும் காலத்தில் சில வாழ்வையும் பதிவு செய்வது அவசியம் என்ற சிந்தனையில் இருப்போர் சிலரில் அடியேனும் ஒருவன்.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியது மற்றும் விருதுகள் பல பெற்றதெல்லாம் பெரியதில்லை 19 மொழிகளில் பாடியதும் பல்வேறு இசை வடிவங்களில் பாடியதும் உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை.


பிறப்பு இறப்பு எல்லா உயிர்க்கும் உண்டு...சிலரே தோன்றின் புகழொடு  தோன்றுக... குறளுக்கு இலக்கணமாகிறார்கள் அப்படி இவரும் 6 பெண்களில் 5 வது பிறந்த பெண்குழந்தையாக வேலூரில் பிறந்து உலகை வலம் வந்த சாதனையாளராக இருக்கிறார். இவர்கள் குடும்பத்தில் 6 பெண்குழந்தைகள் 3 ஆண் குழந்தைகளாம்.


பி.சுசீலா, எஸ். ஜானகி போன்றோர் தமிழ் திரைப்பட இசையை ஆக்ரமித்துக் கொண்டிருந்த போது இவரும் தனது தனித் தன்மையை விடாது ஆட்சி செலுத்தி வந்திருக்கிறார். இவருக்கு ஜோடி பாடல்களை விட தனியான பாடல்களே அதிகம் புகழ் சேர்த்திருக்கின்றன.


பட்டதாரி, வங்கி ஊழியராக இருந்த போதிலும் இசையின் ஆன்ம குரலுக்கு செவி சாய்த்து தமது வாழ்வு முறையை அமைத்துக் கொண்டார் அதற்கு இவரது கணவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். குழந்தைகள் வாரிசுகள் ஏதும் இல்லாத சாதனையாளரே இவரும்... Real name is Kalai Vaani. Name really Suits her. He deserve for all prizes and awards in Music.


அடுத்து தமிழ்ப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவு , இப்படி பல மறைவுகள் வந்து எல்லா செய்திகளையும் புதுச் செய்திகள் பழையனவற்றை பின் தள்ளி விடும் என்றாலும் வாணி ஜெயராம் எம் போன்றோரை தம் குரலால் வசியப்படுத்தியவர் அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் இந்தப் பதிவு என்றே நினைக்கிறேன். அந்த 77 வயது முதிய பெண்ணுக்கு எனது அஞ்சலிகள். காலத்தை விஞ்சிய சாதனை. பத்ம பூஷன் பெறாமலே போய்ச்  சேர்ந்த ஜீவன். அதை அறிவிக்கும் போதே தகுதியானவர் என அனைவரும் எண்ணும்படியான நல்ல குரலுக்கு சொந்தக்காரர்.


HE +ART (HEART) ART ஆர்ட் என்னும் மூன்று எழுத்தைக் கொண்டிருப்பதால் அதில் ஈடுபடுவார் நல்ல இதயம் கொண்டவராக இருப்பார் என்ற பொருள் இருப்பே ஆங்கில HEART  ஹார்ட் என்று சொல்லக் கேள்வி.


இனி இந்தக் குயில் கூவப் போவதில்லை என்றாலும் நல்ல வேளை அறிவியல் அவர் பாடிய எல்லா பாடல்களையுமே அவர் வானொலியில் சிறுமியாக ஆரம்பித்தது முதல் சேர்த்து வைத்திருக்கிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment