Saturday, October 23, 2021

தமிழக அரசை பாராட்டுகிறோம்: கவிஞர் தணிகை

 













 thanks to (News Sharing by) Divya Darsan

கடந்த 20.10.2021 அன்று தினத் தந்தி 9 ஆம் பக்கத்தில் நான் சரியாகப் பார்க்காமல் விட்டு விட்ட ஒரு செய்தியை எனது மூத்த சகோதரியின் பேரன்  இவர் கல்லூரி மாணவர்...எனக்கு வாட்ஸ் ஆப் தகவல் மூலம் பகிர்ந்திருந்தார். அது எனக்கு இந்த பதிவு ஏற்படக் காரணமாக இருக்கிறது.

கீழ் மட்டத்தில் இருக்கும் படிக்காத பாமரர்களை மட்டுமல்ல மெத்த படித்த சமூகத்தில் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள்கூட‌ செய்யும் அல்லது செய்து வரும் அல்லது செய்யத் தூண்டும் சமுதாய வழக்கமாக விளங்கும் இலஞ்சம் கொடுப்பது, இலஞ்சம் வாங்குவது போன்ற செயல் பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் : வருவாய்த் துறையின் அமைச்சர் அறிவிப்பை சொல்வதாக இருந்தது அந்த செய்தி அறிவிப்பு... அந்த ஈன நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் சுடராக...
 
வருவாய்த் துறை மட்டுமல்ல,
 பத்திரப் பதிவுத் துறை,
 வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்துத் துறை, 
போக்குவரத்துத் துறை,
 நீதித்துறை,
பள்ளிக் கல்வித் துறை
கல்லூரி மற்றும் மேற்படிப்புத் துறையான உயர்கல்வித் துறை
 இப்படி முக்கியமான துறைகளில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலுமே மேலிருந்து கீழ் வரை ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர இந்தப் பதிவின் மூலம் நாம் மறுபடியும் பூக்கும் வலைப்பூவின் மூலம் தனிப்பட்ட முறையிலும், தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்ற இணைத் தலைவர் என்ற முறையிலும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.

இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள  தமிழக அரசு, மேன்மைமிகு முதல்வர் ஸ்டாலின்,தலைமைச் செயலர்  துறை சார்ந்த அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகிய அனைவரையும் பாரட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இதில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனில் : இனி பட்டா தொடர்பான பரிமாற்றங்களுக்கு முகாம் மூலம் தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக காலம் தாழ்த்தக் கூடாது என்றும் இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் வலுவாக இலஞ்ச ஒழிப்புக்கு ஆதரவாக வடிவமைத்திருக்கிறார்கள்...

சத்துணவு நேராக பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் எனச் செயல்பட்டது போல...இலஞ்ச இலாவண்யங்கள் தடைப் படுத்தும் முகமாக...

என்னதான் இருந்தாலும் இந்த அரசுப் பணியாளர்கள் அரசின் ஊதியம் வசதி வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பெரும் பணத்தை இலஞ்சமாகப் பெறாமல் இதுவரை செயல் பட்டதாக பெரும்பாலும் இல்லை...அதற்கு விழுந்திருக்கிறது இந்த சம்மட்டி அடி...

அது மட்டுமல்ல இது போன்ற நடவடிக்கைகளில் கட்சி சார்ந்த கட்சி வேறுபாடின்றி முன்னிலையாளர்களில் சிலர் அறியாத மக்களை பெரும்பாலும் ஏமாற்றி இடைத்தரகர்களாக மாறி இவர்களும் அரசு அலுவலர்களும் பாரதி தாசன் வரிகளில் சொல்லப் போனால் பொறுக்கித் தின்றுவந்தார்கள்... பொறுக்கித் தின்றுவருகிறார்கள் அதற்கு விழுந்திருக்கிறது இந்த அறிவிப்பு அடியாக... 
எங்களுக்கு விரைவாக பணி முடிய வேண்டும் என்பதற்காக கொடுத்தோம், வாங்கிக் கொண்டு செய்து கொடுக்கிறோம் என்ற நொண்டிச் சாக்கு போக்கு எல்லாம் வெட்டி எறியப் பட வேண்டியவை..
.அதில் எல்லாம் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் படல் வேண்டும் எந்த வித சமரசமும் இருக்கக் கூடாது முதலில் வருவார்க்கு முதலில் என்ற ஒழுங்கு முறையில் வரிசையாக பணி முடிக்கப் பட வேண்டும். தகுதி உள்ளார்க்கு விதிகளைக் கடைப்பிடிப்பார்க்கு பணிகள் நிறைவடைய அரசும் அரசுப் பணியாளர்களும் உழைத்தே ஆக வேண்டும்...அதற்குத் தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதற்குத்தான் பெரும் ஊதியத்தை அரசு தருகிறது. எனவே...

இது போன்ற வேர்ப்புழு நடவடிக்கையால் சில தினங்களுக்கும் முன்பு கூட ஒரு நபர் ஒரு கிராம நிர்வாக அலுவலரையும் மற்ற ஒருவரையும் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டே எனக்கு பட்டா கொடுக்க இலஞ்சம் கேட்கிறார்கள் எனத் தற்கொலை செய்து கொண்டதும் செய்தியாக வந்திருந்தது நினைவு கொள்ள வேண்டி இருக்கிறது

கோழி முதலில் வந்திருக்கலாம் முட்டையும் வந்திருக்கலாம் ஆனால் இலஞ்சத்தை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை தடுத்து விட்டாலே அரசின் பெரும்பயன்கள் சுலபமான வழியில் மக்களைச் சென்றடைந்து விடும் என்பதை மறுப்பதிற்கில்லை...

கொடுக்கிறார்கள் அதனால் வாங்குகிறோம், வாங்குகிறார்கள் அதனால் கொடுக்க வேண்டியதாகிறது என்ற சமரசப் போக்கும் சமாதானப் போக்கும் அரசின் நிலையை அல்ல மக்களின் பொறுப்பற்ற போக்கையே காட்டுகிறது.

எனவே இது போன்ற அரசின் நடவடிக்கைக்கு தலை வணங்கி வரவேற்கிறோம் இதய பூர்வமாகப் பாராட்டுகிறோம்.

இவண்

கவிஞர் தணிகை
இணைத் தலைவர்
தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்

மறுபடியும் பூக்கும் வரை.

பி.கு: எல்லாப் பொருட்களும் சாதாரண மக்கள் எட்ட முடியாத உயர விலையில் சென்று கொண்டே இருக்கின்றன இதையும் தடுக்க மத்திய மாநில அரசு செயல்பட்டாக வேண்டும் 1. எரிபொருள் சமையல் எரிவாயு, 2.வாகன எரிபொருள்,3. கம்பி, சிமென்ட்,மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள்,3. காய்கறிகள் போன்ற அத்தியாவசிய அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருட்கள் இன்ன பிற...



No comments:

Post a Comment