Sunday, October 10, 2021

அந்த இளைஞர்: கவிஞர் தணிகை

 அந்த இளைஞர்: கவிஞர் தணிகை



அவர் ஒரு மருத்துவராக பயிற்சியில் இருப்பவர், இந்திய ஆட்சியர் பணியில் தேர்வு பெறுவேன் என்றும் கூறினார். அவர் கொஞ்சம் தாறுமாறு என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அவருடன் சுமார் 20 கி.மீ காரில் பயணம் வர நேர்ந்தது. சற்று பயமாகவே இருந்தது அவரது காரை இயக்கிய முறையில்.தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்பார் நான் வீடு வந்து சேர்ந்தது நான் செய்த புண்ணியம்தான்.


கார் கியர்களை எல்லாம் ஹேக் செய்து விடுகிறார்கள். கியர் சரியாக விழவில்லை, பாருங்கள் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார். மேலும் இரு சக்கர வாகனத்தார் செல்லும் போது அவர்களை பயமுறுத்தியே சென்றார். அவரது ஓட்டும் தன்மை எனக்கு சாதாரணமாக சாதகமாகத் தெரியவில்லை.


அவர் பேருந்து பயணத்தை எல்லாம் செய்யாமல் சுமார் 70 கி.மீ தொலைவு இரு சக்கர வாகனத்தில் கல்லூரி வருபவர். அவர்கள் வீட்டில் அவருடைய பெற்றோர் அடிக்கடி அவர் பற்றி (தினமும் கேட்டால் பொறுப்பான பதில் கிடைக்குமோ என்ற அச்சத்தில் அவ்வப்போது கேட்டு விசாரிப்பார்கள்)...


அன்று அவரது தாய் பைக் ரிப்பேர் என காரை எடுத்து வந்திருக்கிறார் சற்று பாருங்கள் சார் என்றார் நான் அவரை அவர் தற்போது இருக்கும் துறைக்குச் சென்று பார்த்த போது சுமார் 7.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டவர் 9 மணி அளவில் வந்து சேர்ந்ததாகக் கூறினார். அவர் வரவேண்டிய நேரம் 8.30 மணிக்கு துறைக்குள் பணியில் இருக்க வேண்டும் என்பது வேறு.


அவர் என்னுடன் பயணம் செய்யும் போது நாட்டு நடப்பு , மஹாபாரதம் ஆகியவை முக்கியத் தலைப்புகளாக பேசப்பட்டன. குதிரை ஓட்டியும் குதிரை ஓட்டியும் தான் கடைசியாக மோதிக் கொண்டார்கள் என்றார் ஆம் கண்ணன் அர்ச்சுனனின் தேர் ஓட்டிதான் தேர் அல்லது ரதத்துக்கும் குதிரைகள் தாம் இழுக்க வேண்டும் கர்ணன் கூட ஒரு தேரோட்டி மகனாக வளர்ந்தவன் தானே...அவர் சொல்லியது சரிதான்  என வீட்டிற்கு வந்த பின் நினைத்துக் கொண்டேன்.


அவருடைய பெரியப்பா ஒரு முக்கிய அரசு அலுவலராக இருந்தவர், இலஞ்ச ஊழலில் சிக்கி கடைசியில் ஓய்வூதியம் இன்றி போனவர் என்றும் ஆனால் அவர் மிகவும் விரைவாக சிறப்பாக ஒரு கோவில் கட்டி விட்டார் என்றும் அதை விட என்ன வேண்டும் என்றார்.


 அரசு என்பதெல்லாம் மெதுவாகத்தான் நடக்கும் இவனுங்க சீக்கிரம் அவசரம் என்று இவனுங்களா கொண்டு  போய் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து விட்டு அவங்க எல்லாம் வாங்கறாங்க வாங்கறாங்கன்னா ஏன் சார் வாங்க மாட்டாங்க...?அப்படித்தான் பழக்கப் படுத்திட்டானுங்க...அப்புறம் கொடுத்தாதான் செய்வேன் என்கிற நிலைமையும் வந்து விட்டது... அப்படித்தான் என் பெரிய அப்பா வாழ்க்கையும் ஆகிவிட்டது 


இந்த பைக் ஓட்டறவனுங்களைப் பாருங்க ஒருத்தனுக்கும் ஒழுங்கா ஓட்டத் தெரியாது ஆனால் இலஞ்சம் கொடுத்து பைக் ஓட்ட லைசன்ஸ் வாங்கிடாறானுங்க...முறுக்கத் தெரிந்தா பைக் ஓட்டத் தெரியும்னு அர்த்தமா எங்க எப்ப எப்படி முறுக்கணும்னு தெரிய வேண்டுமே...


(அப்படிப் பார்க்கும் போது இவனுங்க  எல்லாம் இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என இந்திய தண்டனைச் சட்டம் சொல்வதால் மக்களில் பெரும்பாலானவர் உள்ளே இருக்க வேண்டியவரே என்பது சரியானது தானே...)


பாருங்க சார் ஹார்ன் அடிச்சாக் கூட ஒதுங்க மாட்டேங்கறாங்க ...இவனுங்களை எல்லாம் அடிச்சுத் தூக்கனும் சார் அப்புறம் நாம இல்ல மாட்டனும் என்ற எனது பதிலுக்கு மாட்டலாம் சார் அதல என்ன தப்பு...என்னை எவனுமே ஒன்னும் செய்ய முடியாது சார் நான் கண்டு பிடிச்சுக் கொடுத்த வாழ்க்கை சார் இது... இவனுங்க வாழ்க்கை எல்லாம்  என்ன பெரிய...எங்கிட்ட எல்லாம் தப்பு செய்றவன் தப்பிக்கவே முடியாது, நல்லவங்களுக்கு ஏதாவது நல்லதை நானும் செய்திருவேன்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை








No comments:

Post a Comment