Sunday, July 19, 2020

ரெவனன்ட்: ஆங்கிலப் படம் 2015: கவிஞர் தணிகை

ரெவனன்ட்: ஆங்கிலப் படம் 2015: கவிஞர் தணிகை

The Revenant: Watch out for Leonardo DiCaprio's career-best ...

நாடு கடத்தப் பட்டு திரும்பி வந்தவர், இறப்பிலிருந்து மீண்டவர்,  மீட்சி பெற்றவர் இப்படி சில தமிழ் சொற்கள் பொருள் கொள்ளும்படி இந்த ரெவனன்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இருக்கிறது.

அதை இந்தப் படத்தைப் பார்த்தால் உணரலாம். வார்த்தைகள் பொருள் ஆகாது. வாத்து கோழி ஆகாது. இது எங்கள் சுவர் எழுத்துகள் இன்றைய நாளில். உணர்தல் மட்டுமே பொருள் தரும். புரியும் தெரியும்.

இந்தப் படத்தைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதைப்பற்றி எழுத நேரம் வாய்ப்பு இல்லை. ஆனாலும் எழுத வேண்டும் என்ற உள் விதை மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

இதன் இசையை ஒலியை காதணி இயர் போன் போட்டுக் கொண்டு இரசிக்க வேண்டும் என்றார் எனது வாரிசு, மகன் மற்றும் தோழனுமானவர். அவரால் தாம் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. இதைப் பார்க்க வேண்டுமா 156 நிமிடம் செலவிட வேண்டுமா என மலைத்திருந்தேன். கிட்டத் தட்ட 2.45 மணி அல்லது 3 மணி நேரம் நமக்குத் தேவைப்பட்டது.

அப்படியே விட்டு விட்டு ஒருநாள் பார்த்தே விட்டேன். பிரமிப்பு நீங்கவே வாரக் கணக்காகிவிட்டது அதன் பிடியிலிருந்து விடுபடாததே இதை எழுதக் காரணமும். துல்லியமான இசை நம்மை கதை நடக்கும் இடத்தில் ஒரு பார்வையாளராக்கி வைக்கிறது.இல்லை இல்லை அந்த இடம் சம்பவங்களுடனே நமது நேரம் நாமும் ஒரு பங்கெடுப்பாளராகவே நேரம் நகர்வதே தெரியாமல் படம் நகர்கிறது. இந்தப் படம் சிறந்த கதாநாயக நடிகர், சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு என 2016ன் 3 ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளது.

நடிகர் எவருமே தெரியவில்லை. டைட்டானிக் படத்தின் ஹீரோவான டி காப்ரியோ, டாம் ஹார்டி போன்றோர் நடித்துள்ளது என்று சொல்ல முடியாது வாழ்ந்துள்ளது என்றுதான் குறிப்பிட வேண்டும். இதன் இயக்குனர் அலெஜான்டரியோ இனரிட்டு என்பவரையும் தயாரித்த 5 பேரையும் பேர் ஒன்னும் வாயில் நுழையலை. ஆனால் அற்புதமான பணியைச் செதுக்கி செதுக்கி செய்துள்ளார்கள் காமிரா மூலம் .

ஒரு எல்லைப் படையில் பணி புரியும் நபர் அவரின் கலப்பு திருமணம் மூலம் ஒரு பழங்குடியினப் பெண்ணை மணந்து கொள்கிறார். அதன் வழி வந்த மகனை கொன்று விடுகிறார்கள், இவரை ஒரு கரடி பயணத்தின் போது கடித்துக் குதறி எடுத்து விடுகிறது இவரது பகையும் போட்டியாளருமான ஒருவர் இவரை இவரது அணியின் பயணத்தில் இருந்து நீக்க குழி தோண்டி உயிர் இருக்கும் போதே மூச்சுக் காற்று ஒன்றுதான் இருக்கிறது மற்றவை இயக்கமில்லை. அதுதான் சாக்கு என்று குழியில் போட்டு மண்ணை தள்ளி மூடி விட்டு அவரின் மற்றொரு நபரையும் மிரட்டிப் பணியவைத்து மற்றொரு நபரையும் கொன்று போட்டு பயணத்தை தொடருகிறார். இந்த இறந்து விடும் நிலையிலிருக்கும் மனிதர் அசையக் கூட முடியா நிலையில் இருக்கும் மனிதர் எப்படி கடைசி மூச்சு என்று இருக்கும் நிலையில் மறுபடியும் மறுபடியும் பசி, பனிப் புயல், நீண்ட பனி, காடு ஆகியவற்றின் பயணம் போன்றவற்றுடன் போராடி இலக்கை அடைகிறார் தமது எதிரியை எப்படி பழி வாங்குகிறார் என்றுதான் சிறிய அளவிலே சொல்ல முடியும் . கதை என்றால் இதுதான். ஆனால் இதை எல்லாம் சொல்ல முடியாது
அன்பர்களே...அர்ஜைண்டினாவில் சென்று எடுத்தார்களோ அல்லது சைபீரியாவில் எடுக்கப் பட்டதோ தெரியவில்லை. அத்தனையும் விறைத்துப் போகும் பனி...

Less white | The Indian Express
இதை எதற்கு எழுதி இருக்கிறேன் எனில் கடைசி மூச்சிருக்கும் வரை போராடுவது என்பார்களே அதற்கு முழுமையான பொருள் இந்தப் படத்தின் கதையில் உள்ளது நடிப்பில் உள்ளது .பார்க்கும்போது நமக்கும் அந்த தெம்பு வரும் கடைசி வரை கடைசி மூச்சிருக்கும் வரை போராடியே ஆக வேண்டும் நமது இலக்கை எட்டும் வரை...எனவே

அனுபவிக்க வேண்டும்.
இது தான் சினிமா
இது போல ஒரு சினிமாவை எப்போது நமது தமிழ் சினிமா, இந்தியா சினிமாவால் எடுக்க முடியும் என நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
The Revenant (2015) - Cinema Forensic
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை 

No comments:

Post a Comment