Tuesday, January 21, 2020

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்.......கவிஞர் தணிகை

கேள்விப் பட்டது எல்லாவற்றையும் உண்மையென‌
எழுதவோ பேசவோ முடியாது ரஜினிகாந்த்: கவிஞர் தணிகை

Image result for RAJINIKANTH 1978 periyar protest

அவுட்லுக் பத்திரிகையில் வந்திருந்ததையும் கேள்விப்பட்டதையும் பேசினேன். அதுதான் உண்மை. அதற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறியதாக செய்திகள் இன்று வந்துள்ளன.

மன்னிப்பு கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம். ஆனால் எது சரி எது தவறு எனத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதரின் தலையாய கடமை.

சரியாக இல்லாத செய்திகள் மேல் குதிரையேறிக் கொண்டு அதுதான் சரி உண்மை எனப் பிடிவாதம் பிடிப்பது மக்கள் பணியாளர்க்கு அழகல்ல. கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என்று நம்பி விடவும் கூடாது. நம்பவும் முடியாது. அது தலைமைக்கு ஏற்புடையதல்ல.

பொது வாழ்வுக்கு  வந்து விட்டாலே நம்மை எல்லாம் எல்லாக் கண்களும் உற்று நோக்கிக் கொண்டே இருக்கின்றன என்ற உள்ளுணர்வோடு நாம் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் இருக்கும்.

நான் உண்மையை எழுதியே சரியான சார்பு சாட்சியங்களும், உறுதிப்பாடான அத்தாட்சிகளும் இல்லாமல் வெகு பாடு பட்டிருக்கிறேன்.
எனவே இதன் மூலம் தெரிவிப்பது என்ன வெனில் தலைவராக வேண்டியவர்கள் பொது வெளிகளில் பேசும்போது மிக்க கவனத்துடன் பேச வேண்டும்.
அல்லது அதற்கான தவறே செய்தபோதும் அதன் பின் நிற்கின்ற அயோக்யத்தனமான கூட்டம் வேண்டும் அப்போதுதான் எதையும் சமாளித்து நிற்க முடியும்...அரசியல் அப்படித்தான் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment