Thursday, January 16, 2020

ரஜினிகாந்தின் தவறான பேச்சு: கவிஞர் தணிகை

ரஜினிகாந்தின் தவறான பேச்சு: கவிஞர் தணிகை

Image result for rectify the mistakes rajinikanth


செய்கிற தவறுகளை தமது சத்திய சோதனை மூலம் ஒப்புக் கொண்ட காந்திய வாழ்வையே குறை சொல்வார் உண்டு.

ரஜினிகாந்த் துக்ளக் 50 ஆண்டுவிழாவில் ஜனவரி 14 அன்று பேசியதில் நிறையப் புள்ளிவிவரங்கள் தவறாக குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டு பேசப்பட்டுள்ளன. அவரிடம் அந்த குறிப்பு கொடுத்தவர்கள் செய்தியை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். தவறான செய்திகளை உலவ விடக்கூடாது அது எவருக்குமே நல்லதல்ல.
நாம் துக்ளக், முரசொலி திமுக அறிவாளி பற்றி எல்லாம் சொல்லப் புகவில்லை. உதய நிதி ஸ்டாலின் போன்றோர்க்கும் சப்பைக் கட்டு கட்ட முற்படவில்லை.

சேலத்தில் ஜி.டி.நாயுடுவால் துவக்கப்பட்ட 1971 ஜனவரி 23  24ல்  மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்தும்போது
"1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். என ரஜினிகாந்த் பேசி இருப்பதாக செய்திகள்....

ஆனால் இராமர் சீதை படங்கள் ஆடையில்லாமல் இல்லை என்றும் அதற்கு செருப்பு மாலைகள் அணிவிக்கப்படவில்லை என்றும் உண்மையறியாமல் பேசி இருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.

அந்த செய்தி மிகவும் தவறானது என்றும் அன்றைய ஊர்வலத்தின்போது பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது என்றும் அது அவர் வாகனம் முன்னால் போய்விட அந்த செருப்பு குறி தவறி பின் வந்த வாகனத்தில் விழுந்தது என்றும் அதை எடுத்து கோபம் கொண்ட ஊர்வலத்தின் முன்னணியினர் ராமர் படத்தை செருப்பாலடித்ததாகவும் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட கலி.பூங்குன்றன் என்பவரிடம் பி.பி.சி தமிழ் நேரடிப் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.

அது மட்டுமல்ல அந்த செய்தி வேறு எந்த செய்தியிலும் இடம்பெறவில்லை என்றதற்கு மாறாக அன்றைய தினமணி அதை வெளியிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியை துக்ளக் இதழில் பெரிது படுத்தி அன்றைய முதல்வர் கருணாநிதியை அட்டையில் போட்டு ராமர் படத்தை செருப்பாலடிப்பதைப் பார்த்து கலைஞர் நல்ல அடிங்க நல்லா அடிங்க என்று சொல்வது போலவும் போட்டதால் அந்த இதழ்களை வெளியிட விடாமல் தடுத்ததாகவும், அந்த இதழ்கள் மறு அச்சிடப்பட்டு ப்ளாக்கில் உரிய விலையை விட அதிகமாக விற்றதாகவும் பேசி இருந்தது சரியாக இருக்கலாம்.

ஆனால் அதன் பின் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க இருந்த‌ 138 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாறாக 183 தொகுதிகளைக் கைப்பற்றியதாகவும் இருக்கிற செய்திகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

ரஜினிகாந்த் எந்தப்பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எல்லாம் இது போன்ற நிகழ்வுகளும் பேச்சுகளும் காட்டி வருகின்றன.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி: பி.பி.சி. தமிழ்:
ஜனவரி: 15.2020

No comments:

Post a Comment