Friday, November 8, 2019

இளம்பிள்ளை பேருந்து நிலைய பொதுக் கழிப்பகங்களின் நிலை: கவிஞர் தணிகை

இளம்பிள்ளை பேருந்து நிலைய பொதுக் கழிப்பகங்களின் நிலை: கவிஞர் தணிகை

Image may contain: 8 people, people standing
தூய்மை பாரதத் திட்டத்தில் நாடே தூய்மை அடைந்து விட்டது என வெளி நாடுகளில் சென்று முழங்கி வருகிறார் நாட்டின் பிரதமர். நேற்று எனது சேவைப்பணியின் ஒரு பகுதியாக வேம்படிதாளத்தில் உள்ள அரசு மருத்துவ மனையில் வாரம் இரு முறை இயங்கி வந்த எமது வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்  கல்லூரியின் பல் மருத்துவப் பிரிவு நவீன வசதிகளுடன் அரசு  ஆணையுடன் செப்டம்பர் முதல் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை இயங்கி வருகிறது என்ற அறிவிப்பு துண்டு அறிக்கையை எடுத்துக் கொண்டு இளம்பிள்ளை வரை சென்று விநியோகித்து வந்தேன் பொது உறவு அலுவலர் என்ற முறையில்.
Image may contain: one or more people and people sitting
ஏற்கெனவே கடந்த செவ்வாய்க்கிழமை அச்சடித்த 1000 துண்டு அறிக்கையில் பாதியை காக்கா பாளையம் திருவளிப்பட்டி சந்தை மற்றும் பள்ளி, ஊருக்குள் எனவும் வேம்படிதாளம் பகுதியிலும் கொஞ்சம் விநியோகித்திருந்தேன்.
Image may contain: 3 people, people standing
எனவே மறுபாதியுடன் சென்று நேற்று விநியோகித்தேன். அதல்ல இங்கு சொல்லப் புகுவது. இளம்பிள்ளை சென்று விநியோகம் செய்யும்போது அதிகாலை 4 மணிக்கே எனது நாட்கள் துவங்கி விடுவதாலும் காலையில் நிறைய குடிநீர் அருந்தும் பழக்கம் இருப்பதாலும் சுமார் 10 மணிக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.
Image may contain: one or more people and people sitting

எமது கல்லூரி வாகனத்தின் ஓட்டுனர் வினோத், சார், இங்கெல்லாம் ஒன்றுமில்லை பேருந்து நிலையம் தான் செல்ல வேண்டும் என்றார். அப்படியே துண்டறிக்கையை கடைவீதியில் கொடுத்துக் கொண்டு, அதன் அருமை பெருமையை  தெரியாதவர்க்கு எடுத்து சொல்லியபடி பேருந்து நிலையத்தை அடைந்தேன் . சிறு நீர் கழிக்க சென்றேன்.

அதிர்ச்சி பேரதிர்ச்சி காத்திருந்தது. இளம்பிள்ளை மிகவும் பெரிய ஊர், அதில் வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கையும் ஏன் வருமான வரிச் சோதனையைக் கூட மத்திய அரசு நடத்தும் அளவில் நிறுவனங்கள் பல உள்ள இடம். நிறுவனங்கள் இடம் பெற்று இருக்கும்  பெரும் முதலாளிகளும் பெரு நிறுவனங்களும், பெரு வியாபாரங்களும் இருக்கும் இடம். பெரிய ஊர்.
Image may contain: one or more people, people walking and outdoor
ஏன் எனது நண்பர் அழகிரி போன்றோர் ஆண்டில் ஆறுமாதம் சீனாவில் இருப்பவர் கூட இங்கு வியாபார நிமித்தம், கொடுக்கல் வாங்கல் என இளம்பிள்ளைக்கு வியாபார நிமித்தம், பேமென்ட் விஷயமாக வந்தேன் எனச் சொல்லி வந்து இடையே எனைச் சந்தித்தது சென்றதுண்டு.  அவர் சொன்னதைக் கேட்டதுண்டு.
Image may contain: 2 people, people smiling, people sitting
 இந்தியாவை விட பெரு நாடான சீனாவில் சாலையோரங்களில் நெடுஞ்சாலை எங்குமே கழிப்பிடங்களூம் ஓய்வறைகளும் மிகவும் தூய்மையாக இலவசமாகக் கிடைக்கின்றன.ஒருவர் சென்றவுடன் பின்னாலேயே அதை சுத்தம் செய்பவரும் வந்து சுத்தம் செய்து அவ்வளவு பளிங்கு போல பராமரிப்பு செய்து பயன்படுத்த மனமகிழ்வை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக பேசியது நினைவுக்கு வர...இப்போது மறுபடியும் இளம்பிள்ளைக்கு வருவோம்
Image may contain: 1 person, standing and flowerImage may contain: 1 person, standing
அங்கிருந்து மருத்துவர்கள் கூட நிறைய எங்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள் பணியிலும் இருக்கிறார்கள்.

1. அப்படிப்பட்ட இடத்தின் பேருந்து நிலையம் சொல்லிக் கொள்ளுமளவு இல்லை. அதைக் கூட விட்டு விடலாம்.

2. சிறுநீர் கழிக்கும் இடமும், கழிவறையும் புகவும் நாதியின்றி
உண்மையில் அங்கு சென்று சிறு நீர் கழிக்க முயன்று கடவுளை நினைத்தபடியே கழிக்க வேண்டியதாயிற்று... உண்மையான நரகு என்பதும் நகர நரகல் என்பதும் நரகமும் அங்குள்ளது. புழுக்கள் ஓடி நெளிகின்றன. சுத்தம் செய்ய நீர் இணைப்போ வசதியோ ஏதும் இல்லை.  ஒரு பக்கம் கழிப்புத் தொட்டியில் காய்ந்து கிடக்க  திரும்பி பார்க்கவே முடியவில்லை. அந்த ஏரியா எங்கும் கால் வைக்கவும் இடமின்றி மனதும் நமது எண்ணமும், உடலும் உயிரும் கூசும்படியாக எண்ணவும் முடியாமல் மயிர்க்கூச்செறியும்படியான ஒரு சொல்லில் சொல்ல முடியா அசிங்க சுரங்கமாய் வார்த்தையில் சொல்ல முடியாமல் இருப்பதுவே அதன் காட்சியாய் விரிகிறது.( அதை புகைப்படம் எடுக்க நான் முயலவும் இல்லை)
Image may contain: 1 person
நமது இளம்பிள்ளை பெருத்த தன வியாபாரிகளுக்கும், பேருராட்சிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் பேர் போன ஊராய் இப்படிப்பட்ட கேடு கெட்ட‌ பெருமை பறை சாற்றி வருகிறது.

எவரிடமாவது கொடுத்தால் அவர்களாவது ஒரு நல்ல வழி செய்து அவர்கள் பேரைக் கூட போட்டுக் கொள்ளச் சொல்லலாமே அரசால் முடியவில்லை என்றால்...
Image may contain: 1 person, standing and indoor
இந்த இலட்சணத்தில் தூய்மை பாரதத் திட்டம் நாட்டை மிகவும் சுத்தம்  செய்துவிட்டதாக இந்தியாவின் பிரதமரின் பெருமை பேசும் பேச்சு வேறு...வேறு எதில் சிரிக்கத் தோன்றுகிறது என்றனர் நண்பர்கள்...ஆனால் என்னால் சிரிக்க முடியவில்லை. வேதனையும் ரௌத்ரமும் பொங்கு வருகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment