Friday, November 15, 2019

ஒத்த செருப்பு (7) ராதாகிருஷ்ணன் பார்த்திபன்: கவிஞர் தணிகை

ஒத்த செருப்பு (7) ராதாகிருஷ்ணன் பார்த்திபன்: கவிஞர் தணிகை

Image result for otha seruppu"


ஒத்த செருப்பு என்ற ஒரு படம் வந்ததும் போனதையும் கவனித்தீர்களா? ராதாகிருஷ்ணன் பார்த்திபனை சினிமா என்னும் செல்லுலாய்ட் உலகில் காலம் எல்லாம் நிறுத்தி தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாய் இருக்கும் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்றே இந்தப் பதிவை எனது வலைப்பூவில் ஏற்றி வைக்கிறேன்.

இந்தப் படத்தை ஒரு முறை சினிமா என்ற ஊடகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது ஒரே முகத்தை வைத்து மட்டுமே சுமார் ஒன்னே முக்கால் மணி நேரத்தை எப்படி தொய்வில்லாமல் பார்க்க வைக்க முயற்சி எடுத்திருக்கிறார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

அவரே எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்து மிக அரிய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். கமல், ரஜினி போன்றோர் பாராட்டிய நிலையில்  கமலை வைத்து நடிக்க வைத்து எடுக்கலாம் என்ற முயற்சி கை கூடா நிலையில் அவரே நடித்து வெளியிட்டிருக்கிறார்.

இப்படி வேறு எந்த படமாவது ஒரே நடிகரை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இதில் இவர் மிகவும் லாவகமாக அநாயசமாக இவருக்கே உரிய சட்டையர் எனப்படும் முறையில் அரசை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

நீதி என்பதும் சட்டம் என்பதும் இந்தியாவில் பணம் படைத்தவர்களுக்கே என்றும், ஏழைகளை மட்டுமே அவை தண்டிக்கவும் தடைப்படுத்தவும் செய்யும் என்பதை நீக்கமற தெளிவுற விளக்கி இருக்கிறார்.

காவல்துறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாசிலாமணியின் வாக்குமூலம் மட்டுமே இந்த சினிமா. இதில் அரசியல், காவல்துறை, ஊழல், கட்சிகள்,மனித உறவுகள், அதை பாதிக்கும் நாகரீக கலாச்சாரம், பணத்தின் ஊடுருவல் எல்லாமே நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது பார்த்திபனின் சினிமா அறிவு ஏந்திய அட்சய பாத்திரமாகி இருக்கிறது இந்தப் படம்.

போதும் போதும் இந்த ஒரே படம் கூட போதும் இனி தமிழ் சினிமா என்பது ஒன்றிருக்கும் வரை இவரது பேரும் இடம் பெற மிக எளிமையான கதையை கொண்டு சொல்லி இருக்கிறார். ஒரு கொலை மற்றொரு கொலையை எப்படி லீட் செய்கிறது என்பதை எல்லாம் நன்றாக இரசிக்க முடிகிறது.

இந்தப் படம் இவரது சொந்த அனுபவத்திலிருந்தும் பிரதிபலிப்பாக இருக்கிறது அப்படி அனுபவித்து செய்திருக்கிறார் குரல் ஒலிகளும் பின்ணணி இசையும் படத்திற்கு பலம்.

பார்க்காதிருந்தால் அவசியம் பார்க்க வேண்டும் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இப்படியும் விரியும் என்பதை தெரிந்து கொள்ள அறிந்து சொல்ல...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை முடிவிலிருந்து மறுபடியும் மேல் கோர்ட் ஆகியவை கொண்டு சென்று பணம் படைத்தவர்களால் நடத்தி முடிவை மாற்ற முடியும் அல்லது தண்டனையிலிருந்து தப்பி நீதியை தள்ளி வைக்க முடியும் என்ற பார்வையும் கோணங்களும் உண்டு. ஆனால் இந்தப் படத்தில் ஒரு மனிதன் தவறு செய்தவர்களை தனி மனித நீதி மூலம் தண்டிக்கிறார். மேலும் சிறையிலிருந்து விடுபடவும் செய்கிறார். மாசிலாமணி ராதாகிருஷ்ணன் பார்த்திபன். முயற்சி உங்களின் முயற்சி வென்றிருக்கிறது.உங்களின் இந்த படைப்பு சினிமா உலகில் உங்களின் சாதனைதான் சந்தேகமே இல்லை.



No comments:

Post a Comment