Sunday, January 28, 2018

புகழ் பெற்ற முரண்கள்: கவிஞர் தணிகை

புகழ் பெற்ற முரண்கள்: கவிஞர் தணிகை

Image result for beautiful and famous contradictions

உள் செல்வதெல்லாம் தீட்டாகாது; வாயிலிருந்து வெளிவருவதே தீட்டாகும் என்ற ஒரு பழமொழி பைபிளில் இடம் பெற்றுள்ளது. அது 2000 ஆண்டுக்கும் மேம்பட்ட நாட்களில் யேசு சொல்வதாக உள்ளது இப்போது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. உள் செல்வதெல்லாம் என அவர் சொன்னது உணவை, உண்ணுவதை, அவை சரியாக இருந்தால்தாம் வெளித் தள்ளும் கழிவும் சரியாக இருக்கும். அவை பற்றியே உடல் நலமும் அமையும். ஆனால் அவர் தம் சீடருக்கு சொன்னது அனைவர்க்கும் பொருந்தா என்றும் கூட சொல்லி விட முடியும்.

வாயிலிருந்து வெளி வரும் வார்த்தைகளில் தாம் கவனம் இருக்க வேண்டும் அவைதாம் மற்றவரை புண்படுத்தி விடும் தீட்டானவை என்று பொருள் படவே அவை சொல்லப்பட்டுள்ளன.

அதையே தாம் வள்ளுவரும் தமது திருக்குறளில்:

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு

என்பார்.Image result for beautiful and famous contradictions

வாய் சுத்தம் என்பதும் உடல் நலம் என்பதும், நாம் வெளித்தள்ளும் கழிவு யாவுமே நாம் என்ன உள்ளே எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. எனவே பற்களும், ஈறுகளும், நாவும் , வாயின் மேலண்ணமும் அதன் கடைவாய் எலும்புகளும் மொத்தமாக வாய் என்ற மனித உடலின் வாசல் மிகவும் சுகாதாரமாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது இல்லையேல் அது தலைவலி, காய்ச்சல், அதிகபட்சம் மாரடைப்பு புற்று நோய் ஆகியவற்றைக் கூட உடலுக்குக் கொடுத்து விடும்.

இது பற்றி நான் ஏற்கெனவே வாய் சுத்தம், ஆசன வாய்சுத்தம் என்ற எமது முந்தைய பதிவுகளில் சொல்லியுள்ளதால் அதை மறுபடியும் திருப்பி பதிவு செய்ய அவசியமில்லை என நினைக்கிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த உணவு முறைகளும், அதன் தயாரிப்புகளும், பதப்படுத்தி உணவாக மாற்றி உண்ணுதலும் வேறு முறைகளில் இருந்திருக்கும். இப்போது அவை எல்லாம் வேறு வேறு. முழுக்க முழுக்க வேறு. மேட்டூரில் ஒரு வகையான சதைப் பிடிப்பில்லா முட்செறிவுடனான மீன்கள் வலைகளில் கிடைப்பதாக மீனவர்கள் துயரப்படுகின்றனர் . அவை பிடித்து மேலே விடப்பட்டாலும் அவை இறப்பதில்லை என்றும் சொல்லி உள்ளனர். அவை உணவுக்காக இல்லை.

இப்படி எல்லாமே மாற்றங்களில் ....

அதே போல யேசு ஓரிடத்தில் சொல்வார், கோயில் சுற்றி உள்ள வியாபார்களை எல்லாம் அடித்துத் துரத்தி விட்டு கோயில் ஒரு வியாபாரத் தலமல்ல என்பார்.

அது சரியானதே.

ஆனால் கடவுள் கட்டிய கோயிலில் மனிதர் குடியிருப்பதில்லை என்ற ஒரு சொல்லின் ஆட்சி பைபிளில் உண்டு.

அப்படி இருக்கும்போது ஏன் இத்தனை பிரிவுகளுக்குமுண்டான தேவாலயங்கள்?

யேசுவின் வார்த்தை அல்லது பைபிளின் வார்த்தை என்று சொல்லப்போனால் இவை போன்ற கோவில்களுக்கு அவசியமில்லை. அங்கு கடவுள் இருக்கப் போவதுமில்லை.


Related imageRelated image
ஆனால் மக்களை நெறிப்படுத்த அவர்களை மனிதக் குவியலிலிருந்து பிரித்தெடுக்க ஒரு இடம் தேவை அங்கு பேசப்படுபவை அவை சார்ந்து இருக்க வேண்டும் என்ற முறைமைகளில் அவற்றின் நம்பிக்கையாளர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன....அவ்வளவில் அதை நாம் பார்த்தால் சரிதான்.

ஆனால் அவற்றில் முன்பே சொன்னபடி கடவுள் இருக்கிறாரா என்பதெல்லாம் ஆய்வுக்குரியதுதான்.

மதங்கள் மனிதரை மாட்சிமைப்படுத்தும்போதும், நெறிப்படுத்தும்போதும் புகழ் பெறுவன பேதம் விளைத்து மனிதத்தை சிறுமப்படுத்தும்போது அவை அபின் தாம் மார்க்ஸ் சொன்னபடி...
Image result for beautiful and famous contradictions

வாழும்  வழித்தடமே
   கடவுள்

மௌனத்தின் விளைவாகும் தொழுகை
தொழுகையின் விளைவாக உண்மை
உண்மையின் விளைவாக அன்பு
அன்பின் விளைவாக சேவை
 சேவையின் விளைவாக அமைதி....அன்னை தெரஸா.
Image result for jesus christ and apj

அதை எல்லாம் விட வேறொரு முக்கியமான சொல்ல மறந்து விட்ட ஒன்று:வீட்டிலும் சொந்த ஊரிலும் தவிர இறைவாக்கினர் வேறெங்கும் மதிப்பு பெறுவர் என்ற வாக்கு உண்டு.

அதற்கேற்ப யேசுவை அவருடைய சொந்த ஊரில் எவருமே நம்பவில்லை.அங்கே எந்த விதமான அதிசய நிகழ்வையும் அவரும் நிகழ்த்தவில்லை...அல்லது அவராலும் நிகழ்த்த முடியவில்லை என்றும் சொல்லலாமா ஏன் எனில் அந்த மக்களுக்கு அவர் நம் ஊர்க்காரர் ஜோசப் மகன் தானே அவன் என்ன செய்யப் போகிறான் என்ற நம்பிக்கையின்மையாலும்தான்..

Image result for jesus christ and apj


ஆனால் கல்வியும், மனிதரின் செயல்பாடுகளும் இது போன்ற வசனங்களை கடந்து சென்று புகழ் பெற்று விடுகின்றன. அந்த வகையில் எனக்கு என்னத் தோன்றுகிறது எனில் அப்துல் கலாம் போன்ற மாமனிதர்களால் அவர் ஊருக்கும் வீட்டுக்கும் பெருமைதான், மதிப்புதான்...அவரால் ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், பேய்க்கரும்பு அவரது நினைவிடம் யாவுமே பெருமை பெற்று விட்டதே...எனவே அந்த வசனத்தை கடந்து நின்று தமது சொல்லால் பெயரால் செயலால் பெருமைப்பட வைத்துவிட்டாரே அதன் காரணம் கடுமையான உழைப்பு, உண்மை, நேர்மை,அறிவு , ஆற்றல் , கற்ற கல்வி, பெற்ற மனிதர்கள், எல்லாவற்றையும் மீறிய அவரின் பணிவு போன்றவை இது போன்ற வசனங்களையும் தாண்டிச் சென்று பெருமைப் பட வைத்து இது போன்ற வசனங்களை, சொற்றொடர்களை, பழமொழிகளை, இறைவாக்கையும் கூட மனித ஆற்றல் விஞ்சி விடுகின்றன எனத் தோன்றுகிறது.

Image result for jesus christ and apj


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment: