Saturday, January 20, 2018

ஞாநியுடன் ஒரு சந்திப்பு: கவிஞர் தணிகை

ஞாநியுடன் ஒரு சந்திப்பு: கவிஞர் தணிகை

Image result for gnani sankaran


ஞானியின் மறைவு எனக்கும் அவருக்கும் நேர்ந்த ஒரு சந்திப்பை நினைவுக்கு கொண்டு வந்தது. அது 90 முதல் 95க்குள்ளான ஆண்டாக இருக்கலாம். டான்பாஸ்கோ இன்ஸ்டியூட்டில் சென்னையில் தான் மீடியா எக்ஸ்ப்ளாய்ட்டேசன் என்ற ஒரு இரண்டு மூன்று நாள் கருத்தரங்கம்...

இந்து என். ராம், ஆசியாநெட் சசிக்குமார், இப்போது இந்துவின் ஆசிரியராக இருக்கும் பன்னீர் செல்வம் இப்படி பலரில் சிலர் மட்டுமே என்னுள் நினைவில் இருக்கின்ற்னர் அது மட்டுமல்லாமல் பெண்பாலினத்தவரும் நிறைய வந்திருந்ததாக நினைவு.

அந்த டான் போஸ்கோ இன்ஸ்டியூட் என்னை இரண்டு முறை என்னை அழைத்திருந்தது இரண்டு முறையுமே எனக்கு  நல்லவை ஏதோ நடந்ததாக நினைவு.

அதை எல்லாம் விட அந்த கருத்தரங்கத்தில் ஞாநி ஒரு தொடர்பாளராக இருந்தார் தேவையில்லாமல் அனைவர்க்கும் பேச்சாளர்கள் பேசுவது புரிந்தே இருந்தாலும் இவர் மறுபடியும் அதை விளக்கிச் சொல்லி எங்களை பாடாய் படுத்தி எடுத்தார்.

நான் எழுந்து நின்று, நீங்கள் அமருங்கள் இங்கு வந்திருக்கும் அனைவருமே பத்திரிகையாளர்கள், படித்தவர்கள், மொழியறிவு உள்ளவரே, நீங்கள் ஒரு முறை ஒருவர் பேசியதை மறுபடியும் திருப்பிச் சொல்லி எங்களை ஏன் அனைவரின் நேரத்தையும் வீணடித்து வெறுப்பேற்றாதீர் எனச் சொல்லி அவரை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி அமரச் செய்தேன். அவருக்கு அது வியப்பாகவும், திகைப்பாகவும் தலையில் தட்டியதாகவும் அமைந்து விட்டது.

ஆனாலும் அதன் பின் அவருடைய எழுத்துகள், பலமுறை பத்திரிகை ஊடகங்களில் வெளிவந்தபோதெல்லாம் அவரைப் படித்து அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தேன்.

அந்த மனிதர் மறைந்த செய்தி அறிந்து உண்மையிலேயே வருந்துகிறேன்.சமுதாய சிந்தனை உள்ளார் எல்லாம் எண்ணிக்கையில் குறைந்து வருவது தமிழகத்துக்கு நல்லதல்ல...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment