Sunday, November 19, 2017

தீரன் (திருமாறன்)அதிகாரம் ஒன்று: கவிஞர் தணிகை

தீரன் (திருமாறன்)அதிகாரம் ஒன்று: கவிஞர் தணிகை
Image result for theeran adhigaram ondru

Image result for theeran adhigaram ondru


ஹெச். வினோத் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் பவாரிய கொள்ளைக்காரர்களை எப்படி தமிழக காவல்துறை பிடித்து அவர்கள் கொலை கொள்ளையை அடக்கி வெற்றி கண்டது என்ற உண்மைச் சம்பவத்தை உண்மையாகவே நன்றாக படமாக்கியுள்ளனர். படக்குழுவினர் அனைவர்க்கும் வணக்கமும், நன்றியும் , வாழ்த்துகளும்.

தீரன் அதிகாரம் ஒன்று  எ போலீஸ் ஸ்டோரி.

சோலே இந்திப் படத்தை தொட்டுச் சென்றிருக்கும் கதாபாத்திர கொடூரமான தேர்வுகளும் முக ஒப்பனைகளும் ஆள் பலமும்.

ஓநாய் ஒன்று துரத்த மற்றொன்று எப்படி எதிர்பாராமல் வேட்டையாடும் மற்ற மிருகங்களை என்று  திட்டமிட்ட கொலைக் கொள்ளைக் கூட்டம், இராஜஸ்தான் கிராமங்களில் இருந்து நாட்டுக்குள் எப்படி கம்பளி விற்பாராக ஊடுருவி அவர்கள் உதவியுடன் அவர்கள் தரும் அந்த வீட்டைப்பற்றிய தகவல் முழுதையும் திரட்டிக் கொண்டு ட்ரக் லாரிகளில் சென்று  தனியாக இருக்கும் மாபெரும் வீடுகளுள் நுழைந்து  அவர்களை கொடுரூரமாக கொன்று, அது குழந்தையா, பெரியவ்ர்களா, பெண்களா, முதியவரா என்றெல்லாம் காரண காரியம் பார்க்காமல் அடித்தே கொன்று நகைகளை பணத்தை கொள்ளை கொள்ளும் கும்பல்.

குற்றப்பரம்பரையில் எப்படி உருவாகி இந்தியாவெங்கும் ஊடுருவி கடைசியில் தமிழகத்தில் கால் பதித்து, கொலை, கொள்ளை செய்துவிட்டு எப்படி தப்பித்து ஒரு மாநிலம் விட்டு மறு மாநிலம் மாறிச் செல்கிறார்கள், அவர்கள் இராஜஸ்தான் பாலை நிலக் கிராமங்களில் எப்படி வாழ்கிறார்கள் எனத் துல்லியமாக தெளிவாக படம் வரலாற்றுப் பதிவான கதையை நன்கு விளக்கி இருக்கிறது.

படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயிண்டாக கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங். இயல்பாக புகுந்து விளையாடி இருக்கிறார்கள். கார்த்தியின் டாக்டர் மனைவிக்கு இதையெல்லாம் பார்க்க நேரம் இருக்கிறதா? எங்களுக்கு இது சினிமாத் தொடல்கள் படப்பிடிப்புகளாகத் தோன்றவில்லை.

வாழ்ந்திருக்கிறார்கள். கணவனும் மனைவியுமாக, காதலும், காதலுருமாக‌

 தந்தை சிவகுமார், அண்ணன் சூரியா ஆகியோரை தம் குறைந்த பட்ச பட எண்ணிக்கையிலேயே  கார்த்தி மிஞ்சி விட்டார்.

Related image

சிறுத்தை படத்தை அடுத்து இவருக்கு இது இப்போது அதையும் மிஞ்சி வெளிவந்து வெற்றியை புகழை பேரை ஈட்டித் தந்திருக்கும் படம். காற்று வெளியிடை தோல்வியை வெற்றி ஆக்கி திருப்பு முனை ஆக்கியுள்ள படம்.

இயக்குனர் மனோபாலா நகைச்சுவைத் தந்தையாகவும் குணச் சித்திர தந்தையாகவும் நன்றாகவே செய்துள்ளார் தமது பெண் அடிக்கும் லூட்டிகளுடன் தாமும் சேர்ந்து.

தயாரிப்பு, இசை, எடிட்டிங், காமிரா இப்படி சினிமாவின் பல துறைகளும் இத்துடன் கை கோர்த்து ஒரு முழுமையான படமாக உருவாகி உருவாக்கி 163 நிமிடம் நம்மை எல்லாம் கதையுடன் காலத்தை பயணிக்க வைக்கிறது.

மெர்சல் ஏதோ மெசேஜ் சொல்கிறேன் என வந்து வசூல் அள்ளிய படம் அதை எல்லாம் விட சமீபகாலத்தில் வந்த படங்களில் இதை நல்ல படம் என்று சொல்லலாம்.

துப்பறிவாளனை விட இது நன்றாகவே இருக்கிறது.
Image result for theeran adhigaram ondru

அருமையான வசனமும் திரைக்கதையும் படம் போவதையே நமக்கு நேரம் காலம் தெரியாமல் ஆக்கி விடுகிறது. அதே நேரத்தில் சமூகத்தாக்கமும், நல்ல செய்திகளையும் பதிவு செய்துள்ளது. சதுரங்க வேட்டைக்கும் பின் அதிகாரம் ஒன்று தீரன், வீரன், திருமாறன்.

ஏண்டா தமிழகத்தில வந்து இப்படி ஈவு இரக்கமே இல்லாம கொள்ளை அடித்துக் கொலை செய்றீங்க என்ற கேள்விக்கு:




தமிழகத்துப் பெண்கள் கழுத்தில் போட்டுள்ள நகையைப் பார்த்தா வீட்டுள் எவ்வளவு இருக்கும் என்ற காரணத்தாலும்

உ.பி போலீஸாரிடம் துப்பாக்கி உண்டு ஓடினாலும் சுட்டு விடுவான்கள், தமிழகத்துப் போலீஸாரிடம் துப்பாக்கி எல்லாம் இல்லை, செக் போஸ்டில் கூட ஒரு 50 ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவார்கள் என்றும் உண்மையை சொல்லி உள்ளார்கள்...ஆனால் மெர்சல் படத்துக்கு மருத்துவர்கள் வெகுண்டு எழுந்தது போன்று இதில் எந்த காவல்துறையும் போராட முன்வரவில்லை ஏன் எனில் போலீஸ் ஸ்டோரி ஈஸ் கிரேட்.

ஒரு விசாரணையின் போது காவல்காரர் சொல்கிறார், எம் பொண்டாட்டி, நகைக்காக உயிரே போனாலும் போகட்டுங்க என்று சொல்வதாகவும் கேலியாக நகை போட்டு வெளியில் செல்வாரைக் கேலி செய்துள்ளார்கள்.

குழந்தை கழுத்தில் நகை இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை உயிர் தெரியாது, நகை மட்டும்தான் அவர்கள் கண்ணுக்குத் தெரியும் என்ற வசனம் ஒன்றே போதும்..


திருடுவது, கொலை செய்வது, கொள்ளை அடிப்பது யாவுமே குற்றம்தான். திருடத் தூண்டுவதாக இது போன்று நிறைய நகையை அணிந்து சென்று குற்றம் புரியத் தூண்டுவதும், ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதும் மனித இயல்பின் அறியாமை, குறை, தவறு குற்றம்தான். உணர்ந்து கொண்டால் சரி.ஆனால் இது போன்ற நல்ல செய்திகளை உணர்த்தினாலும் யார் திருந்தப் போகிறார்கள் என்பதுவே கேள்வி.

மேலும் சாதாரண மனிதர்க்கு இது போன்ற சம்பவங்கள் நேரும்போது வாளாவிருக்கும் அரசு, எம்.பி, எம்.எல்.ஏக்கள், பெரிய மனிதர்கள், அவர்களுக்கு என்று நேரும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது இல்லையா என நல்ல கேள்விகள்...
Image result for theeran adhigaram ondru

மிகவும் ஈடுபாட்டுடன் பணி செய்வாருக்கு எல்லாம் சமூக அரசு அந்தஸ்து எல்லாம் கிடைப்பதில்லை என கடைசியில் இவருக்கு ஒரு அதாவது தீரன் திருமாறனுக்கு அந்த ஐ.ஏ.எஸ் அலுவலருக்கு ஒரு சிறு அறைக்குள் தமது சேர் டேபுளுக்கும் கூட அரசு அனுமதித்து அப்புறம் தான் கிடைக்க வேண்டிய சூழல் , சிறு பதவியில் போட்டு உள் கட்டி வைத்து விடுவார்களி, விடுகிறார்கள் என்று நிதர்சனமான உண்மையுடன் ஆரம்பிட்து உண்மையுடன் முடித்து அதனிடையே நமக்கு ஒரு நல்ல சினிமாவை வழங்கி இருக்கிறார்கள்.

போஸ் வெங்கட் துணைக் கதாநாயகராக நன்றாக நடித்திருப்பதை சொல்லாமல் விட்டால் இந்தப் பதிவு நிறைவு பெற்றிருக்காது.டிங் டிங் டிங்கானா சோலேவின் ஹெலன் மெஹ்பூபா பாடலுக்கு சமம்.

தெலுங்குப் பதிப்பில்  காக்கி தி பவர் ஆப் போலீஸ் என்று வெளியான இந்தப் படம் தமிழில் 17 நவம்பரில் வெளியாகி 163 நிமிடங்கள் நமையெல்லாம் உள் வாங்கிக்கொள்கிறது.

Related image

தாராளமாக 60+ கொடுக்கலாம். எந்த இடத்திலும் குற்றம் குறை காண முடியாததால்.
அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். பார்க்க வேண்டிய படம். பாருங்கள்


தமன்னா, கேத்ரின் தெரஸா அப்புறம் ரகு ப்ரீத் சிங் எல்லாமே கார்த்தியுடன் ஒட்டி உறவாடவே விரும்புகிறார்கள் டாக்டர் மிசஸ் கார்த்தி நோட் திஸ் பாயின்ட்.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments: