Saturday, November 4, 2017

என் வீட்டுத் தோட்டத்தில்: கவிஞர் தணிகை

என் வீட்டுத் தோட்டத்தில்: கவிஞர் தணிகை


Related image

புதிதாக சில செடிகள் தோன்றியுள்ளன, அவை என்ன செடி என விசாரித்து வருகிறேன். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இயல்பாக தாமாகவே கீழா நெல்லிச் செடிகள் நிறைய வளர்கின்றன. இதன் மகத்துவம் காமாலைக்கு நல்ல மருந்து , மேலும் சரும நோய்களுக்கு இதனுடன் மஞ்சள் அரைத்து பூசினால் அவை தீரும்.

 நான் கொண்டாடும் சோற்றுக் கற்றாழை நிறையத் தோட்டமாகவே ஆக்கி வைத்துள்ளேன். இது அன்றாடம் உபயோகிப்பார்க்கு வேறு நோய் எதிர்ப்புத் தன்மைக்காக வேறு எதுவுமே மருந்து என எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நல்ல மலமிளக்கியாக பயன்படும். ஒரு இதழை தோலை சீவி விட்டு அப்படியே சாப்பிடலாம்.

இதில் சில வகை உண்டு. ஒரு வகை துளியும் கசப்பே இல்லாமலிருக்கும், மற்றொரு வகை கசப்பாகவும் சோறு அதிகமாகவும் நன்கு மொத்தமாகவும் இருக்கும், மற்றொரு வகை சிறு புள்ளி புள்ளியாக தோலில் இருக்கும் , மற்றொரு வகை பாம்பு கற்றாழை இது வேலிக்கு மட்டும் பயன்படும். மேலை நாடுகளுக்கு நிறைய ஏற்றுமதியும் செய்யப்படும். ஆலு வேரா என்று முகப் பூச்சுக்கு, ஒப்பனை பொருட்களில் இதனால் செய்யப்படும் பொருட்களே பெண்களின் ஒப்பனைப் பொருட்களில் தலைமைப் பீடத்தில் இருக்கின்றன.

ஆனால் அப்படியே பயன்படுத்தச் சொன்னால் சீ, அது வேண்டாம் என்பார்கள் அவ்வளவு சல் ஒழுக்கும். ஆடை மேல் பட்டால் அப்படியே கறையாகி கறுப்பாகி நின்றுவிடும் எந்த அழுக்கெடுப்பானும் இதைப் போக்க முடியாது.

கற்பூரவல்லியில் ஓமவல்லி இத்துடன் சில இலவங்கம், சீரகம், மிளகு சேர்த்து அரைத்து கொஞ்சம் பாலில் கலந்து கொடுத்து விட்டால் சளி அம்பேல்தான்.

Image result for kariveppila


கறி வேப்பிலை மரம் அப்படியேதான் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கிறது. நிறைய பேருக்கு இதன் பழங்கள் விதைகளுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளன.

விதைகள் விழும் இடங்களில் எல்லாம் சிறு சிறு கறிவேப்பிலை செடிகள் நிறைய முளைத்திருக்கின்றன.

சில மணத்தக்காளி செடிகள் , சில துளசிச் செடிகள் அவ்வப்போது தாமாகவே முளைத்து வருவதும் அழிந்து படுவதுமாகி நிலையாமை வாழ்வை நமக்கு புரியவைக்கும்.

Image result for guava treeImage result for guava tree

கடைசியில் ஒரு ஓரத்தில் முருங்கை மரம். அவற்றின் காய்கள் இன்றும் கூட குழம்புக்கு அவ்வளவு சுவையுடன், நாளை முருங்கைக்கீரைப் பொறியல் செய்யச் சொல்லி வலியுறுத்தப்பட்டுள்ளது.

என்னை விட வயதில் மீறிய ஒரு கொய்யா மரம் எப்போதுமே இறந்து படும் என்ற நிலையிலும் இன்னும் சில கனிகளைக் கொடுத்து மண்ணின் மேல் எம் மேல் மாந்தரின் மேல் உள்ள ஈடுபாட்டைக் காட்டியபடி....

நிறைய இனிசுலின் செடிகள் தினம் ஒரு  கையகல இலை தின்றால் நீரிழிவு வியாதிக்கு நல்லதென...

Image result for sapota tree


வயிற்றுப் போக்கு தவிர்க்க சப்போர்ட்டா பிஞ்சுகள் ஊரெங்கும் தேடவேண்டாம் என எனது தங்கை கொடுத்த செடி மரமாக இன்றும் சப்போர்ட்டா கனியாக காய்களைத் தாங்கியபடி...
 Image result for drumstick tree

அத்துடன் சரும வியாதிக்கு பெரிதும் பயன்படும் பெருமருந்துக் கொடி இதை அவ்வப்போது வண்ணத்துப் பூச்சியாக இருக்கும் சிவப்பு கறுப்பு நிறப் புழுக்கள் தின்று கொழுத்து இலைகளே இல்லாமல் செய்தாலும் மறுபடியும் மறுபடியும் இலை துளிர்த்தபடியே இருக்கும்., ஏன் எனில் நல்ல வேர்கள் எப்போதும் தம் வேலையை செய்தபடியே இருக்கும்.

இது எங்களது மைக்ரோ லெவல் ஃபேமிலியின் தோட்டம். இந்த தோட்டத்துக்கு உரிமையாளர் என்று 3 பேர் மட்டுமே.ஆனால் எங்கள் வீடு 10 பேர் அடங்கிய மேக்ரோ லெவல் குடும்பமாக இருந்தபோது என்னவெல்லாம் இருந்தது தெரியுமா?

பூவரசு மரம் ஊருக்கே உயரமாக எங்கிருந்து பார்த்தாலும் மஞ்சள் பூக்கள் தெரியும்படியாக, எமது ஊரின் சாலைக்குள் நுழையும்போதே அவை தெரியுமாறு..

3 வகை கொய்யா மரம், வகைக்கு எற்றபடி பழங்கள் தர‌

கொழிஞ்சி மரம், பள்ளி விட்டு வந்தவுடன் ஒரு கொழிஞ்சிப்பழம்தான் டிபன், அப்படி மஞ்சளாக கொழித்தபடி, அவ்வளவு சுவையுடனான இனிப்புடனான ஒரு கொழிஞ்சிப் பழத்தை நான் என் வாழ்வில் தின்னப்போவதேயில்லை.,

கொடுக்காப் புளி மரம் என்னும் எங்கள் மொழியில் சொல்லப்போனால் கோணப்புளியாமரம் எத்தனை பழங்கள் அவை அதிகம் சாப்பிட்டால் காது செவிடாகிவிடும் என்ற தவறான அர்த்தம் தரும் பெரியவர்களின் மொழிகளுடன்..ஆனால் நிறைய பழுப்பதற்குள் காக்கைகள் அவற்றை கொத்தித் தின்ன வர, நாங்களா அவையா போட்டி, ஆனால் எந்தக் காக்கைக்கும் காது செவிடானதாகத் தெரியவில்லை...
Related image


இரண்டு புளிய மரங்கள் கூட இருந்தன பெரிதாகவே...ஆனால் நாவல் புளிய மரங்கள் இருக்கவே கூடாது வீட்டுள் என வெட்டியே தீரவேண்டும் என வெட்டிவிட்டோம் அப்போதே...

மாமரம், பலா மரம் இவை எல்லாம் கூட இருந்தன....ஆனால் மா பெரிதாக காய்கள் வைத்து பழம் தரவில்லை, பலாப் பிஞ்சுகள் சிறிதாக இருக்கும்போதே உதிர்ந்து விழுந்தன எல்லாம் கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் ஓடை பின் புறம் ஓடுவதன் தாக்கம்...

நிறைய வாழை வைத்துப் பார்த்தோம், ஒரிரு குலைகள் ஈனியபின்னே எல்லாம் குலைந்து நீர் ஏறி கசங்கிய நிலையில் பயனில்லாமல் போய்விட...விட்டு விட்டோம்.

Image result for indian flowers


எத்தனை வகையான மல்லிகை, குண்டு மல்லி, இருவாட்சி, மைசூர் மல்லி என, கனகாம்பரம் பூக்கள், அந்தி மந்தாரை என சிவப்பு சிவப்பாக ஆளை அடித்து வீழ்த்துகிற கலரில்,

பாம்புகள் சர்வ சாதாரணமாக பச்சைப் பாம்பு, கோதுமை நாகம் இப்படி ...சில நாட்களில் அந்த மரங்களில் பச்சைப்பாம்புகள் சிட்டுக் குருவிகளைப் பிடித்துக் கொண்டு தலைகீழாக தொங்கியபடி...மாட்டிக்கொண்ட குருவி கீச் கீச் என்று கத்திக் கொண்டே இருக்கும். அதை வாயிலிருந்து பிடுங்கவே முடியாது...உயரமாக மரத்தின் மேல் தொங்கியபடி இருக்க நாங்கள் கீழ் இருந்து உஷ் உஷ் எனக் கத்தியபடியே இருப்போம்...

நிறைய செடிகொடிகள் பேர்கள் மறந்து விட்டன. காலம் ஆண்டுகள் பல கடந்து விட்டதால்... என்றாலும் நினைவு இருக்கும் வரை...
Related image


பூக்கள் விற்பனைக்கு இருக்குமளவு பூக்கும்...அந்தக் காலத்திலும் தோட்டம் இருந்தது இந்தக் காலத்திலும் தோட்டம் இருக்கிறது. பெரிய மரங்கள் ஏதும் இருக்கக் கூடாது வீட்டருகே அவை வீட்டுச் சுவற்றை பாதிக்கும் வேர்கள் வீட்டுள் புகும் என...ஒவ்வொன்றாய் வெட்டி விட்டு, மதில் சுவர் எழுப்பு காம்பவுண்டு போட்டு ...இப்போது இப்படியாக மாறிவிட்ட தோட்டம்..ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு சிறிய தோட்டம் இருக்கிறது. எப்போதும் இருக்கும் ஏன் எனில் அப்படிப்பட்ட வேர்களும் அதன் விழுதுச் சங்கிலிகளுமாக...வேர்கள், விழுதுகள், கிளைகள்...இலைகள், காய்கள், பூக்கள், கனிகள் ...எங்கள் வீட்டின் பெற்றோர் வேர்கள் மறைந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன..Related imageமுருங்கைக் காய்களையும், கறி வேப்பிலையையும் சந்தைக்கு வியாபாரிகள் விலைக்கு வாங்கிக் கொண்டுச் செல்லுமளவு இருந்ததை எல்லாம் என்னே சொல்ல‌...
Related image


முதல் கிளை ஒன்றும் விழுந்து விட்டது சில மாதங்கள் முன் மூத்த சகோதரி அங்கமுத்தம்மாள் என...\

இன்று வாசனையற்ற வண்ண மலர்களை துணைவி  சாமந்தி, ரோஜா  அவற்றை ரோஜா எனச் சொல்வதே எனக்குப் பிடிப்பதில்லை..... வாங்கினாள் ஒரு 20 ரூபாய்க்கு...எனக்கு வாசனையற்ற மலர்களைப் பிடிப்பதில்லை வெறும் காட்சிக்காக அவை இருப்பதால்...

மறுபடியும் பூக்கும் வரை...


4 comments: