Saturday, August 26, 2017

விவேகம் இல்லா சர்ச்சை தேரா சச்சா சௌதாவை விடவா: கவிஞர் தணிகை

விவேகம் இல்லா சர்ச்சை தேரா சச்சா சௌதாவை விடவா :கவிஞர் தணிகை.

Image result for vivegam poster
நானூறு ஐநூறு பேருக்கு ஆண்மை நீக்கம் செய்து ஆஸ்ரம பெண்களை எல்லாம் அவர்கள் எவரும் புணர்ந்து விடக் கூடாது தாமேதாம் புணர வேண்டும் என்ற குர்மீத் ராம் ரஹீமை விட இந்த விவேகம் சினிமா போஸ்டருக்கு ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்த மடையர்களும் விஜய் மில்டனும், ராகவா லாரன்ஸும் விவேகம் படமும் தேவையில்லா சர்ச்சையை தமிழ் மண்ணில் தொங்கு சட்டசபையை மறந்து முக நூல் மற்றும் மின் ஊடகங்களில் சமூக ஊடகங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன இத்தனைக்கும் அஜித் குமார் ஒன்றும் ஐஸ்வர்யாவேதான் நாயகியாக நடிக்க வேண்டும், எமி ஜாக்ஸனேதான் நடிக்க வேண்டும் என்று கேட்கும் கிழட்டுப் புயலுமல்ல...

சினிமா விமர்சனத்துக்கு அப்புறம் வருவோம். முதலில் இந்த மடையர்களையும் மடத்தனத்தையும் முன் பார்ப்போம். அஜித் குமார் நல்ல மனிதர் அடிப்படையில் இயல்பில் நல்ல குடும்பம், நல் வாழ்வு என வாழ்ந்து வருவார் மட்டுமல்ல தம்மிடம் பணி புரியும் அத்தனை பேருக்கும் வீடு கட்டிக் கொடுத்தவர், சூட்டிங் ஸ்பாட்டில் தம் கையால் பிரியாணி சமைத்து அனைவர்க்கும் போடுபவர் எல்லாரையும் சமமாக நடத்த விரும்புவார், ஏர் போர்டில் கூட வரிசையில் நின்றே வருவார் இப்படி எல்லாம் நல்லவை அவர் பால் உண்டு.அதே போல லாரன்ஸ் நன்கொடைகள் முடியாதவர்க்கு உதவி, எல்லாம் தெரியும் இந்த விஜய்மில்டன் எடுத்த கடுகு படம் சமூகத்தின் நாடித் துடிப்பை வெளிப்படுத்தி எழுச்சி ஊட்ட முயல்கிறது அனைவரும் பாருங்கள் பாருங்கள் என பார்ப்பார் இடம் எல்லாம் எம் வட்டத்தில் சொல்லியபடியும் பேசிய கரூர் மேடையில் கூட அனைவர்க்கும் நெட்டை மரங்களென நிற்பதுவோ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும்போது கடுகு எத்தனை பேர் பார்த்திருக்கிறீர் அந்த ஒன்றுமில்லாத கபாலி லிங்கா பாபாவை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர் என கை உயர்த்த சொல்லி பார்க்கக் கூடாததை எல்லாம் விளம்பரம் நம்பி பார்க்கிறீர் பார்க்க வேண்டியதை எல்லாம் விட்டு விடுகிறீரே என கடுகு படத்தை பார்க்க தூண்டினேன். என்னால் சுமார் 300 பேராவது பார்த்திருப்பர்.

இப்படி ஊடகத்தில் இருப்பார்க்கு நல்லா இருப்பதை நல்லா இருக்கிறது என்றும் நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னும் சொல்ல உரிமை உங்களிடம் வாங்கிய பின் தான் சொல்ல வேண்டுமா மில்டன் லாரன்ஸ் ? நீங்கள் எல்லாம் எந்த ? உடன் படம் எடுக்கிறீர்களோ அதே ? நியாயம் படம் பார்ப்பாருக்கும் உண்டு. அதை நீங்கள் எந்த மேதாவித்தனம் காட்டியும் நீலச்சட்டை கறுப்புச் சட்டை காக்கி சட்டை காட்டியும் காட்டி பயமுறுத்தி விட முடியாது



நீங்களாவது கறுப்பு வெள்ளை வரி என்றெல்லாம் மாற்றி மாற்றி பேசுவீர் ஆனால் இந்த பயமில்லாத பயல்கள் வெறும்பயல்கள் எப்படி வேண்டுமானாலும் தம் வெளிப்பாட்டை செய்து விடுவார்கள். நீங்கள் எல்லாம் வைத்த வேட்டுதான் அரசியல் ஓட்டாய் மாறி மது மாது என ஆண்டுகொண்டு தமிழகத்தை இருளடித்த நிலமாய் மாற்றி உள்ளது.

கமல்ஹாசனாவது சில விமர்சனங்கள் செய்து வருகிறார். மற்ற நடிகர் எல்லாம் ஏதாவது வாய் திறக்கிறாரா இந்த இலட்சணத்தில் இதை எல்லாம் ஏன் பேசி தற்போது இருக்கும் தொங்கு சட்டசபையை, குதிரை பேரத்தை மாற்றி விடலாம் என காட்சி  மாற்றம் செய்கிறீர்? தேரா சச்சா பச்சாக்களை விடவா இதெல்லாம் பெரிய பிரச்சனை?

15 வருடத்திற்கு முன் ஒரு பெண் வாஜ்பேயி பிரதமருக்கும் பஞ்சாப் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிக்கும் எழுதிய கடிதம் இன்று அடிப்படையாய் ஆட  இங்கு ஜெயலலிதாவின் அந்த 75 நாட்களைப் பற்றி மூச்சும் விடாமல் இப்போது சர்சையைக் கிளப்புவது போல அப்போதும் எல்லாவற்றைப் பற்றியும் திட்டமிட்டே பிரச்சனையை திசை திருப்ப ஏதோ உப்பு பெறா சர்க்கரை காரணங்களுடன் பிரச்சனையை கிளப்பிக் கொண்டே இருந்த ஊடகங்களைப் பற்றி நீங்கள் எல்லாம் ஏதாவது வாய் திறந்து பேசியதுண்டா?

எனவே நல்லா இருந்தா நல்லா இருக்குதுன்னும் நல்லா இல்லைன்னா நல்லா இல்லை என்றும் தான் சொல்வார்கள் எந்த ? எதுவும் செய்து விட முடியாது. இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதவே கூடாது என்று இருந்தேன். இன்று கண்ட செய்திகள் எழுத வைத்து விட்டன.

விவேகம் : ஏண்டா விவேகம் எனப் பேர் இருந்தா போதுமா? அஜித் ரசிகர்கள் அந்த போஸ்டருக்கு விவேகமே கொஞ்சமும் இல்லாம ஆடு வெட்டி இரத்த காவு கொடுத்து அந்த போஸ்டரில் இரத்த்தை தடவுவதைப் பார்த்து இது பாலாபிசேகத்தை விட புல்லரிக்கும் விடயம் என்ற காரணத்தினால் எழுதுகிறேன்.
Related image



முதலில் ஒரு அரை மணி நேரம் படம் காதில் பூ. ஆங்கில படம் மாதிரி என்று சொல்லலாம் என்றால் அவர்கள் டெட்டனஸ், பாம் என்று முடித்துவிட்டு செல்வார்கள் ஆனால் இதில் ஒரே நபர் கைத்துப்பாக்கி , துப்பாக்கி பயன்படுத்தி ஒரு பெரும் படையை சுட்டு வீழ்த்தி தப்புகிறார். அவர்கள் குண்டு மழை இவரை ஒன்றும் செய்வதில்லை. இவரின் ஒவ்வொரு குண்டும் ஒவ்வொருவரை வீழ்த்துகிறது. சரி அதன் பின் அக்சரா கமல் ஒரு காரணமுமின்றி பெரிதான சொல்லிக் கொள்ளுமளவில்லா பாத்திரத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

தொழில் நுட்பம், வெர்ச்சுவல் , இதை ஜீன்ஸ் படத்திலேயே சுஜாதா வழியே  சங்கர் சொல்லி விட்டார். இது பற்றி சுஜாதா எழுதி பல்லாண்டுகள் ஆகிறது.
சரி கதை ஆங்கிலக் கதை அளவும் எடுத்ததும் அப்படியே அதன் பின் அதாவது அஜித் தம்மை நண்பர்கள் துரோகம் செய்து வீழ்த்தியது தெரிந்த பின் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும் இந்தக் கதையை புரிந்தவரை விட புரியாதார் அதிகம் பார்க்கக் கூடும். அவர்கள் இதை நன்றாக இருக்கிறது எனச் சொல்லப்போவதில்லை. என்ன செய்வீர்கள் ? விடுவீரா?

காஜல் அகர்வாலுக்கு ஒரு நல்ல ரோல். நன்றாகவும் நடித்திருக்கிறார். அஜித்குமார் முகம் கிழடு தட்ட ஆரம்பித்து விட்டது என பார்த்த ஒரு குடும்பப் பெண் சொல்கிறார்.  மொத்தத்தில் மிரேகில் நம்ப வழியில்லாமல் ஒரு படத்தை பிரமிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற தவறான கற்பனையுடன் எடுத்திருக்கிறார்கள் முற்றிலும் மேலை நாட்டு புதிய லொக்கேஷன்களில்.

விவேக் ஓப்ராய்,  நிழல் உலக அரசாங்கம் 80 நாடுகளால்  தேடப்படும் குற்றவாளி என ஒரே பில்ட் அப். ஆனால் எடுபடவில்லை. இந்தப் படம் அஜித் தல இரசிகர்களுக்குப் பிடித்திருக்கலாம், அட ஒரு ஆட்டுத்தலையை போஸ்டருக்கு இரத்தம் தடவ வெட்டி வீழ்த்தி விட்டார்களே என்ற எங்கள் போல் பரிதாபப் படும் நபர்களுக்கு பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது இதைப் பார்த்தே தொலைக்க வேண்டும் என சாப்பிட்டே ஆக வேண்டும் எனச் சொல்லத்தான் வேண்டுமா? பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் எந்தக் குடியும் முழுகிவிடப் போவதில்லை. எனவே பார்த்து விட்டு தமதூ கருத்துகளை எவரும் எழுதினாலோ சொன்னாலோ அவரை தூக்கிவிடவா முடியும் நீங்கள் எல்லாம் மூ...கொண்டு இருந்தால் அதுவே படத்துக்கு நல்லது அஜித்குமாருக்கும் நல்லது  . ஆடு வெட்டி போஸ்டருக்கு இரத்தம் தடவிய அந்தப் படுபாவிகளை அஜித்குமாரும் சும்மா விடக் கூடாது. அரசும் காவல் துறையும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

இது தவறான முன் உதாரணமாகிறது எனவே வன்மையாக கண்டிக்கவே இந்தப் பதிவு.

அட இதை எல்லாம் யாருக்குய்யா பார்க்க நேரம்? உங்களை எல்லாம் யாரு கண்டுக்கப் போறா , ஆக்டிங் கவர்னர் வருவாரா ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் ஓபிஎஸ் கூட்டணி மந்திரி சபை என்ன ஆகும் தினகரன் அடைத்து வைத்திருக்கும் எம்.எல்.ஏக்கள் ஏன் பெண் எம்.எல்.ஏக்கள் விநாயக சதுர்த்திக்கும் கூட வராமல் ஒன்னுக்கு போனார்களா இல்லை அங்கும் காவலா? மோடி அடுத்து எப்படி காய் பழம் நகர்த்துவார் ஸ்டாலினுக்கு எப்போதுமே இராசியே வராதா, கலைஞர் இன்னும் இருக்கிறார் இதை எல்லாம் பார்க்க பேசவே நேரம் இல்லை ஜனங்களுக்கு இதில் ஒங்க தல விவேகமா வேகமா இல்லையா என்று என்ன பார்த்து என்னய்யா ஆகப் போகிறது எப்படியோ நீங்க கல்லா கட்டப் போவது புஸ் எனப் போய்விடுமோ என பயம் கொள்கிறீர் ...பயப்படாதீர் நீங்கள் சொல்லியபடி பாலச்சந்தரும் பாரதி ராஜாவும் இப்போது சங்கர் போன்றோரும் கூட கொடி கட்டிய சினிமா எப்போதும் கட்டிய கொடியை அவிழ்க்காமல் எவருமே இருந்ததில்லை என்கிறது காலம்

தங்கத் தட்டில் சாப்பிட்ட தியாகராச பாகவதர் கடைசியில் சீந்துவாரின்றி மருத்துவத்துக்கும் கூட வழியின்றி நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் இருந்ததாக காலம் சொல்கிறது. மேலும் பாக்யராஜ், பாரதிராஜா, பாலச் சந்தர், ரஜினி கமல் எம்.ஜி.ஆர் சிவாஜி எல்லாருமே காலத்தின் முன் சுஜிபி.

இதில் நீங்கள் ஏன் விஜய் மில்டனும், லாரன்ஸும் பேரைப் போட்டு ஆட்டுக்கல்லில் உரலில் போட்டு ஆட்டிக் கொள்கிறீர்

சொல்வோம் சொல்லிக் கொண்டே இருப்போம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என நல்லா இல்லைன்னா நல்லா இல்லைதான். இந்தப் படத்துக்கு பார்க்க 50% வாய்ப்பு கொடுங்கள் . வாய்ப்பிருந்தால் பார்க்கலாம். பார்க்கா விட்டாலும் ஒன்றும் குடி முழுகப் போவதில்லை . பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. டங்கல் தசாவதாரம் விஸ்வரூபம் போன்ற பார்க்க வேண்டிய படமெல்லாம்  இருக்கும் தரம் இந்தப் படத்துக்கு இல்லை என்று சொல்லியே ஆக வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

6 comments:

  1. thanks for your feedback on this post sir. vanakkam

    ReplyDelete
  2. அஜித் ரசிகர்கள் விவேகம் சினிமா போஸ்டருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தார்களா என்ன கொடுமை இது (:
    சிந்திக்க தூண்டும் அருமையான உங்கள் அலசல்.

    ReplyDelete
    Replies
    1. விவேகம் படத்தை விமர்சித்தவரை, ராகவா லாரன்ஸ், அஜித் குமார் ரசிகர்கள் மிரட்டி பயமுறுத்தல் செய்வது பற்றி தற்போது தான் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். கடுமையாக கண்டிக்கதக்கது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.

      Delete
    2. thanks for your feedback on this post. veka nari. vanakkamm.pl.kk

      Delete