Wednesday, August 30, 2017

ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம்: கவிஞர் தணிகை

ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம்: கவிஞர் தணிகை


Related image

நேற்று மாலை 5. 43 மணிக்குத்தான் எமது மேட்டூர் பயணிகள் ரயில் புறப்பட்டது காரணம் வழக்கம் போல கோவை சூப்பர் பாஸ்ட் ட்ரெயின் அதே நேரத்தில் குறுக்கிட்டதல்ல...கார்ட் அப்போதுதான் வேகமாக ஓடி வந்து எல் வி எனப்படும் லாஸ்ட் வெயிக்கிள் போர்டை மாட்ட இன்னொருவரின் உதவியை நாடி, அதன் பின் ஓடி புறப்படலாம் என சிக்னல் கொடுத்தது.

இந்த மனிதர் ஒருவருக்காக ஒரு மத்திய ரெயில்வே பணியும் முழு ரயிலும் அதில் இருந்த அத்தனை பயணிகளும் காத்திருக்க வேண்டி வந்தது இந்த மனிதர் வந்து இவரது பணியை சுமார் 5 மணிக்குள்ளாகவே செய்து முடித்து தயாராக வேண்டியது அது மட்டுமல்லாமல் இவர் வரவில்லை வர முடியவில்லை எனில் ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டியது ...இது எல்லாம் இல்லாமல் இன்னும் கற்கால முறைகளிலியே இந்த கார்ட் வரவேண்டும் அவர் வந்தபிறகுதான் சொல்லிய பிறகுதான் ரயிலை  புறப்படச் செய்ய வேண்டும் என்பதெல்லாம்...

சரி அதை விட்டு விடலாம், வழக்கமாக மாற்றி மாற்றி 2 ரயில்கள் மேட்டூர் ரயிலுக்கு விடப்படும் அதில் ஒரு ரயிலில் கடைசிப் பெட்டி எண் 11602 என நினைக்கிறேன் அல்லது 11604 ஆகவும் இருக்கலாம். அதில் |ஸ்விட்ச் பாக்ஸ் எல்லாம் திறந்த நிலையில் அதன் கதவுகள் மூடாமல் திறந்தபடியே இருக்க அதைப்பற்றி பலரிடமும் பேசிப் பார்த்து விட்டு தொடர்புடைய ரெயில்வேத் துறையினரிடம் தாம்.

அதன் பின் ஒரு கல்லூரி மாணவரை விட்டு , நிலைய பணி இட மேலாளரை அணுகி இந்த மேட்டூர் ரயிலில் நிலை கடைசிப் பெட்டியில் மிக்க அச்சமூட்டுவதாய் இருக்கிறது என்பதை தெரியப்படுத்தினால் அவரும் உடனே இரண்டு பேரை அனுப்பினார். அவர் வட நாட்டுக்காரராக இருந்தபோதும் துரித நடவடிக்கை எடுத்தார் போனிலேயே கூப்பிட்டுச் சொல்லி இரண்டு ஊழியர்கள் வந்து அதெல்லாம் ஒன்றுமில்லை ஈரோடு லோக்கோ ஸ்டேஷன் போனால் எடுத்துச் செய்தால் மட்டுமே சரி செய்து தர முடியும் என்று சொல்லி விட்டு போய் விட்டனர். ரயில் புறப்பட ஆரம்பித்தால் போதும் அந்த கதவுகளும் அதை ஒட்டி இருக்கிற ரயில் வாயில் கதவும் அடித்து யார் இருந்தாலும் கூட எச்சரிக்கை இல்லாவிட்டால் கீழே தள்ளி விட்டு விடும்.

இந்திய ரயில்வே வடக்கே 2 பெரும் விபத்தை சந்தித்திருப்பதும் , மேட்டூர் ரயில் எப்போதும் கோவை சூப்பர் பாஸ்ட் குறுக்கிடுவதாக சொல்லி எப்போதும் தாமதித்தே புறப்படுவதும் எந்த குறையை சொன்னாலும் அதை சரி செய்யாத போக்குகளும் இந்திய ரயில்வேக்கு நல்ல பேரை விளைக்கப் போவதில்லை.

அந்த ரயிலில் கடசி ஜன்னல் என்னதான் சரியாக செய்தாலும் சற்று ஏமாந்து  எவராவது ஜன்னலில் கை வைத்தால்  கை துண்டாகுமளவு திடீரென கீழ் இறங்கிவிடும் படார் என்ற சத்தத்துடன்...

இதை எல்லாம் என்றுதான் சரி செய்வார்களோ? இதில் வேறு இளைஞர்கள் அடிக்கடி மேச்சேரி ரோடு, ஓமலூர் ரயில் நிலையப் பகுதிகளில் ரயில் அங்கேயே நிறுத்தம் இருந்தும், ரயில் நிற்கும் முன்னே இறங்க முயன்று சில நேரம் காயப்படுத்திக் கொள்வதும் தான்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment