Sunday, July 16, 2017

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்: கவிஞர் தணிகை

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்: கவிஞர் தணிகை
Related image


மோடி 73 சதவீதம் மக்களால் விரும்பப்படும் பிரதமராமே? விவசாயிகள் தலைவர் அய்யாக் கண்ணுவைத்தான் இது பற்றிக் கேட்கலாம் என நினைக்கிறேன்.

மனிதர்கள் ஒவ்வொரு செய்திக்கும் தங்கள் விருப்பப்படி கண் , காது, மூக்கு முகம் எல்லாம் ஒரு நிகழ்வுக்கு, ஒரு விடயத்துக்கு கொடுத்து விடுகிறார்,எனவே அந்த செய்தி அப்படி எப்படி இப்படி எல்லாம் திரிக்கப்படும்போது உண்மை என்ன என்பதே தெரியாமல் உறங்கி விடுகிறது காலம் அதன் மேல் ஏறிப் போய்விடுகிறது. நேதாஜி இறப்பு போல,...இன்று வரை பேசப்பட்டாலும் எவருக்குமே உண்மை தெரியாது என்பது போல சாஸ்திரி இறப்பில் ரகசியங்கள் என்பது போல, புரூஸ்லீ எப்படிக் கொல்லப்பட்டார், அவர் மகன் பிராண்டன் லீ எப்படி டம்மி துப்பாக்கி ரவைகளுக்கு மாறாக உண்மையான குண்டு கொண்டு திரைப்படம் எடுக்கும் இடத்தில் வைத்து எப்படி சுட்டுக் கொள்ளப்பட்டார், மைக்கேல் ஜாக்ஸன் சிறிது சிறிதாக விஷம் வைத்து கொல்லப்பட்டாரா, குழந்தைகளுடன் அவருக்கு  காம உறவு இருந்ததா?? டயானா மரணம் விபத்தா இல்லை திட்டமிடப்பட்ட கொலையா?

ஜெவின் மரணம் சசியின் சதியா, இயற்கை மரணமா இப்படி நிறைய கேள்விகள் அத்துடன் கார்த்திகேயன் விசாரிப்பில் இராஜிவ்காந்தி புலன் விசாரணை வீரப்பன் மரணம்...இப்படியே நிறைய விடை தெரியா முடிவுக்கு வர முடியா கேள்விகள்...

எல்லாம் அவசர கதியில் ஓடிக் கொண்டிருப்பதால் இப்போது எதை நம்புவது எதை நம்ப மறுப்பது என்றெல்லாம் சொல்வதற்கில்லை, ஏன் செய்திகள் வருவது எல்லாமே உண்மை நிகழ்வை அஞ்சலிடுபவை தானா என்ற கேள்விகளுக்கான கால ஓட்டத்துடன் நாம்...

ஊடகத்தின் நிருபர்கள் கூட ஓடும் நதி வற்றிய நதியாய் ஆகிவிட்டது போல எதையாவது இட்டு ஊற்றி மழுப்பி நிரப்புகிறார்கள்...எதையாவது திகிலூட்டும்படி ஆச்சரியப்படும்படி எழுதி படிக்க வைக்க வேண்டும் என எழுத வேண்டிய கட்டாயம்...

கமல் இந்து முன்னணிக்கு எதிராக, தம் வீட்டு முன் கூடிய கூட்டத்தினர்க்கு பதிலளிப்பது போல ஒரு பேச்சை சஸ்பென்சாக சொல்லி விட்டு இன்றைய தொடரில் பாருங்கள் என சொல்லிவிட்டு அந்த தொடரில் ஏதும் இல்லாமல் வழக்கமாக எப்போதும் போல பிக் பாஸை நடத்தி வருகிறார். எல்லாமே சுயநலப் பொருளாதாரத்தில் முடிந்து விட்டது..

ஜி.எஸ்.டி...பெரும்பணக்கார ஏமாற்றை ஏழை இந்தியக் குடிமகன்கள் ஏற்று வரி கட்டுவது போல...

ஒரு சின்ன செய்தி: தி இந்து தமிழ் மற்றும் சில நாளிதழ்கள் வெளியிட்டன: சேலம் மேக்னசைட் அருகே பால வேலைகள் நடைபெறுவதால் மேட்டூர் சேலம் பயணிகள் ரயில் இந்த ஜூலை 15,16,18 ஆகிய நாட்களில் இயங்காது எனப் பார்த்தோம் செய்தியாக. மாதா மாதம் மாதாந்திர அனுமதிச் சீட்டு பெறுபவன் என்ற முறையில் அது எந்த வகையில் என்னை பாதிக்கப் போகிறது என அறிந்து கொள்ள விழைந்தேன். நண்பர்கள் மூன்று பேர் எனக்கு முன்பே விசாரித்தறிந்தனர். மாலையில் நாங்கள் செல்லும் வேளையில் சேலம் மேட்டூர் பயணிகல் ரயில் எப்போதும் போல வழக்கப்படி இயங்கும் எனச் சொல்கிறார்கள் என்றனர்

நானும் சென்று சேலம் சந்திப்பின் விசாரணை அலுவலரிடம் விசாரித்தேன் அவரும் அதை உறுதிப் படுத்தினார். செய்தி சேகரிக்கும் நம் நிருபர்களும், செய்தி ஊடகங்களும் சந்தேகத்துக்கும் ஊகத்துக்கும் இடமின்றி உறுதியாக செய்தி அளிக்கும் காலம் போய் விட்டது.

செய்தி ஏடுகளை இனி நம்புவது எல்லாம் வீண்தாம் ... இல்லை எனில் இன்னும் ஜெவுக்கு கால் இருந்ததா சசிக்கு சமையல் செய்த அடுப்பு இருந்ததா மோடி 73% மக்களால் விரும்பப் படும் தலைவர் இப்படி எல்லாம் செய்திகள் வருகின்றன...உண்மையில் நாடு முழுதும் 73 சதம் அளவுக்கு தேர்தலில் மக்கள் வாக்களிப்பதே இல்லை என்பது தான் உண்மை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: