Sunday, July 9, 2017

பிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.

பிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.


Image result for physiotherapy


கடந்த வாரத்தில் கழுத்து சுளுக்கு, கழுத்தை திருப்பவே முடியவில்லை, வலது பக்கம். ஒரே பக்கம் குக்கிப் போய் கழுத்தை புதைத்துக் கொண்டு அலுப்பில் உறங்கியதன் பரிசாக படுக்கையிலிருந்து எழுந்து புதிய நாளை ஆரம்பிக்கும்போதே தோன்றி இருந்தது.

ஒரிரு நாள் அப்படியே கழிந்தது. உடன் உடல் வலி, சளி பிடிக்கும் அறிகுறியுடன் தொண்டை எரிச்சல், சற்று உள் காய்ச்சல், காய்ச்சல் வருவதன் அறிகுறி எல்லாம் தோன்றியது.

செவ்வாய் கிழமை அன்று கொஞ்சம் வேம்படிதாளம் அரசு மருத்துவமனையில் கொஞ்சம் நிலவேம்புக் குடிநீர்  ஒரு டம்ளர் குடித்ததாலோ, அல்லது என்னிடம் இருக்கும் கழுத்து வலிக்கான நேட்மர் ஹோமியோபதி  மாத்திரை எடுத்துக் கொண்டதாலோ அல்லது நண்பர் ஒருவர் எப்போதோ விலைக்கு வாங்கிக் கொடுத்த ரேபிட் ரெமிடி ஆர் ஆர் மாத்திரை போட்டுக் கொண்டதாலோ நிலை சுமாராகி இருக்க அப்படியே விட்டு விட்டேன்

ஆனால் அதிலிருந்து சில நாட்கள் கழித்து கழுத்து வலி அதிகமாகி பின் மண்டையிலிருந்து தோள் பட்டை வரை நன்றாக வலிக்க ஆரம்பித்து கழுத்தை திருப்ப முடியா வலி.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமார் அக்கறை எடுத்துக் கொண்டு இந்த வயதில் எல்லாம் கழுத்தில் சடக்கு என்றெல்லாம் போட்டுக் கொண்டிருக்காதீர் உள்ளபடியே மற்றவர்க்கு நன்றாக கழுத்து சுளுக்கு எடுக்கும் எனக்கு யாரை வைத்து சுளுக்கு எடுக்கலாமா சரியாகிவிடுமா என்றெல்லாம் யோசித்து வந்த எனக்கு

விநாயகா மருத்துவக் கல்லூரியில் உள்ள பிஸியோதெரபி துறைக்கு அழைத்து சென்றார். அங்கே பெருமாள் என்னும் மருத்துவர் விசாரித்து விட்டு கவிழ்ந்து பெட்டில் படுக்க வைத்து சுமார் 20 நிமிடம் இருக்கலாம், வைப்ரேட்டர் வைத்து மசாஜ் செய்தார். அது மிகவும் நன்றாக கழுத்துப் பகுதியில் இருந்த சுளுக்கை ஒரே சிட்டிங்கில் சீர் செய்துவிட்டது. மறுபடியும் வலி இருந்தால் வாருங்கள் என்றார். ஆனால் போகுமளவு வலி எல்லாம் இல்லை.அது ஒரே முறையில் சரியாகிவிட்டது.

அந்த மருத்துவர் பெருமாளுக்கும், உடற்கல்வி இயக்குனர் செந்தில் அவர்களுக்கும் விநாயகா பிஸியோதெரபி துறைக்கும் நான் கடமைப்பட்டவனாகிவிட்டேன். அதற்கே இந்தப் பதிவு.

அதை அடுத்து உடல் வலி, காய்ச்சல், மூட்டு வலி ஆகியவை இருப்பதாக சொல்லி வேம்படிதாளம் அரசு மருத்துவ மனையில் மருத்துவர் ராஜேந்திரன் அவர்களிடம் சில வேளைக்கு மாத்திரைகளும் ஒரு ஊசியும் போட்டுக் கொண்டு காய்ச்சலையும் விரட்டி விட்டேன். உடற் வலிக்கு ஏதும் மாத்திரை வேண்டாம் ஏன் எனில் உங்களுக்கு அல்சர் இருக்கிறது. எனவே சளிக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவம் செய்து கொள்ளலாம், உடல் வலியை அப்படியே பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என அந்த மருத்துவர் பக்குவமாக எனக்கு வழி நடைப்படுத்தினார்.

பல் மருத்துவர்  ஒருவர் 3 வேளைக்கு நில வேம்புக் குடிநீர் குடித்திருந்தாலே காய்ச்சல் போயிருக்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும், இல்லாவிட்டாலும் 7 நாளுக்குள் உடலுக்கு ஏற்படும் இது போன்ற சில பிணிகள் எல்லாம் போய்விடும் என்றும் சொன்னது எனக்கு காந்திய சிந்தையை மறுபடியும் கிளறி விட்டது. சில நாட்களில் சில யோசனைகள் சில பயன்பாடுகள் சில உதவிகள். சிலர்க்கு நன்றிகள்.

ஒரு பைசா செலவின்றி வேம்படி தாளம் அரசு மருத்துவமனையும், விநாயகா பிஸியோதெரபியும் என் உடலுக்கு வந்த பிணிகளை போக்கியதற்கு நன்றிக் கடன் தீர்க்கவே இந்தப் பதிவு.

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. உடல் நிலை சீரடைந்தமை அறிந்து மகிழ்ந்தேன் நண்பரே

    ReplyDelete
  2. thanks sir vanakkam for your care on my health aspect.

    ReplyDelete