Thursday, May 4, 2017

பாஹுபலி மகாபாரதக் கதையின் மறு பதிப்பாகவும் அதன் அடிப்படையிலும் அமைந்ததுதான்: கவிஞர் தணிகை.

பாஹுபலி மகாபாரதக் கதையின் மறு பதிப்பாகவும் அதன் அடிப்படையிலும் அமைந்ததுதான்: கவிஞர் தணிகை.
Image result for bahubali vs mahabaratham


அந்தக் காலத்தில் ஊனமுள்ளவர் அரசனின் மூத்த மகனாகவே இருந்தாலும் அரசாளும் தகுதி கிடையாது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அந்த தகுதியைப் பெறுவார்கள்.

இந்த 6 நாட்களில் சுமார் 800 கோடி வசூல் செய்திருக்கும் இந்தக் கதையின் பிங்களதேவன் நாசர் கேரக்டர் திருதராட்டிரன் மற்றும் சகுனி கலந்த கலவை. அந்தக் கதையில் திருத ராட்டிரன் குருடன் எனவே தம்பி பாண்டுவுக்கு அரச பதவி.அதன் பின் அந்த பாண்டு புத்திரர்களுக்கு அதெப்படி தொடரலாம் என திருதராட்டிரன் புதல்வர் நூறு பேர் துரியோதனன் தலைமையில் போடும் சண்டை. இங்கு பல்வாழ்தேவனாக. அமேரேந்திர பாஹுபலி பாண்டுவாகக் கொண்டால், மகேந்திர பாஹுபலி தர்மர் பொன்ற சகோதரராக...பிங்கள தேவன் ஒரு கை ஊனமாக மாற்றிக் காண்பித்திருக்கிறார்கள். எனவே அமரேந்திர பாஹுபலி தம்பிக்கு பட்டம் ஆட்சி சென்று அதன் பின் அவர் கட்டப்பாவால் முதுகில் பொன்னியின் செல்வனில் பினாகபாணி கந்தமாறனின் முதுகில் குத்துவது போல கதை.
Image result for bahubali vs mahabaratham

அந்தமகாபாரதப் பங்காளிச் சண்டைக் கதையை பல்வேறு காது, மூக்கு முடித்து பூச்சுட்டி இருக்கிறார்கள் கிராபிக்ஸ் பலியாக.மகிழ் மதி நாடு என, சூரிய வம்சம், சந்திர வம்சம் என மஹாபாரதம் இராமாயணத்தில் வருவது போல.மேலும் கைகேயி பாத்திர வடிவமே இராஜமாதா ரம்யாவாக.நல்லவளாக இருந்து கைகாரியாக மாறுவதாகவும் கேட்பார் பேச்சுக் கேட்டு கெட்டுப் போகிறவளாகவும்... அதன் பின் இறுதிக் கட்டத்தில்
மனம் மாறுபவளாகவும்...அங்கு ஒரு ஊசி முனை நிலமும் கொடுக்க மறுத்ததால் கிருஷ்ண பரமாத்மாவால் போர் பாண்டவர் பக்கம் வெற்றி ஆகிறது.

கைக்குழந்தை மகேந்திர பாஹுபலியைக்  கையில் தூக்கி பிடித்து வெள்ளத்திடை இருந்து காப்பாற்றி விடுபவளாகவும்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். முதுகில் இருந்து குத்தும் கட்டப்பாவும் முதுகில் குத்து வாங்கும் அமரேந்திர பாஹுபலியும் பழைய கால சரித்திரக் கதைகளில் நிறைய உண்டு.

இந்தப் படம் பள்ளி கல்லூரிக் கால கோடைக்கால விடுமுறை என்பதால் தமிழகத்திலும் சினிமா பைத்தியக்காரர்கள் என்பதால் தெலுங்கானா ஆந்திராவிலும் இதிகாசம் போன்ற கதைகளில் வட நாட்டினர் பைத்தியம் பிடித்தவர்களாக அவை உண்மையா பொய்யா என்பது பற்றிக் கூட சிந்திக்காதவர்களாக இருப்பதால் நன்றாகவே ஓடும், இதற்கு முன் நல்ல கலெக்சன் படையப்பாவிற்கு இருந்ததாம்... என்னத்தை சொல்லி என்னத்தை பண்ன...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

6 comments:

 1. மகாபாரத சாயல் உள்ள கதையாகத்தான் இருக்கட்டுமே! நன்றாக இல்லையா? பாராட்ட நல்ல அம்சம் எதுவும் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post,Giraphix Bali.

   Delete
 2. கதை எப்படிப்பட்டதாய் இருந்தாலும், காட்சிப் படுத்திய விதத்தால் படம் வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. thanks sir. vanakkam. But my angle is different.We cannot encourage this kind of monopolistic competition in cinema making also

   Delete
 3. Sir, Itha Rajamouli already oru interview la solirkan.
  Epics ah pathu inspire agi edukapatadhu nu.
  And story and way of storytelling LA entha kuraiyum illai.
  Epics movies makkalku pidikakoodatha! Athenna thavara?! Avargalai pair hit a karat gal endru kooruvathu thavaru.
  People Taste differs.

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post. yes People Tastes differs. My Taste too.keep contact

   Delete