Saturday, December 10, 2016

டாக்டர் வி.சி. குழந்தைசாமிக்கு அஞ்சலி: கவிஞர் தணிகை

டாக்டர் வி.சி. குழந்தைசாமிக்கு அஞ்சலி: கவிஞர் தணிகை

இன்று காலமான இந்த அறிஞரின் வயது 87. அவருக்கு எம் ஆழ்ந்த அஞ்சலிகள்.
Image result for VC Kulandaiswamy


நல்ல தமிழறிஞர். நீர்வளம் குறித்த ஆய்வாளர், சில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராக இருந்தவர். இந்திய தொழில் நுட்பக் கழகம் கரக்பூரில் பட்டம்பெற்று இல்லினாய்ஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் அனைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் தெரிந்தவர், எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பும் தொலைபேசி வழித் தொடர்பும் இருந்தது. 2004ல் என நினைக்கிறேன். அவரும் நானும் சிகாகோவில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டுக்கு செல்ல அவர் எனை ஊக்குவித்தார். ஆனால் அப்போது எனக்கு எந்த கணினித் தொடர்பும் இணையத் தொடர்புமே இல்லை, அந்த மாநாட்டை நடத்த முனைந்த பெயர் மறந்து போன ஒரு நபர் (பிரபாகரன் என நினைக்கிறேன்) எனது வரவை சொந்த செலவாக ஏற்க வேண்டும் எனச் சொன்ன காரணத்தால் என்னால் போக முடியாமல் போயிற்று.

அது ஒரு திருக்குறள் தொடர்பான மாநாடு. அப்போதுதான் நான் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.ஆ.ப.ஜெ அப்துல்கலாம் கடிதத்துடன் எனது முன்னுரையை வைத்து "தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் 100" என்ற ஒரு பாக்கெட் சைஸ் புத்தகம் வெளியிட்டு அனைத்து பள்ளிப் பிள்ளைகளுக்கும் விநியோகித்து வந்தேன்.

எனவே இந்த நூல் அமெரிக்க வாழ் பள்ளிக் குழந்தைகளுக்கும் சென்றால் எப்படி இருக்கும் என கனாவும் கற்பனையுமாய் இருந்தேன்.ஆனால் அந்த பிரபாகரன் என்னும் இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க வாழ் இந்தியர், இந்த புத்தகங்களை அனுப்புவதும் பெரும் செலவு, நீங்கள் வருவதாய் இருந்தால் வரலாம் என விட்டேற்றியாக பதில் சொல்லி தட்டிக் கழித்தார்.

ஆனால் அப்போது இந்த தமிழறிஞர் என்னை தொடர்பு கொண்டு, கடிதங்கள் எழுதி, தொலைபேசியில் பேசி என்னை ஊக்குவித்தார் ஆனால் அவரும் இந்த நபரையே தொடர்பு கொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்து கொள்ளச் சொன்னதால் பின்னடைவாக போயிற்று
Image result for VC Kulandaiswamy


விவேகானந்தர் என்னும் பிச்சைக்காரருக்கு சிகாகோ ஒரு திருப்புமுனையாக அமைந்தது போல் அந்த மனோரதம் நிறைவேறியிருந்தால் எனக்கும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்கலாம்.

அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி கூட என்னிடம் இல்லை. அதை ஏற்படுத்திக் கொள்ள ஒரு நபர் ரூ.50 கட்டணம் பெற்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தந்தார்.

Image result for VC Kulandaiswamy


அதன் வழியேதான் இந்த பிரபாகரன் என்பவரோடு முதலில் செய்தி பரிமாற்றம் செய்தேன். அங்கு அந்த மாநாட்டில் இந்த சிறு நூலையும் வெளியிட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை பொய்யானது.

ஆனால் இந்த தமிழறிஞர் வி.சி. குழந்தைசாமி என்னிடம் ஒட்டி இருந்தார் தமது எளிமை காரணமாக.

அதன் பிறகு மற்றொரு காலம்:

அப்போதும் எனது போதாத காலம், ஒரு தோழமை என்னை கோவையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்து நடத்தி செய்த செம்மொழி மாநாட்டுக்கு பார்வையாளராக கடித வழி அழைப்பை பெற்றும் போகவிடாமல் போதித்து எனை தடுத்து விட்டது. அப்போதும் ஒரு நூலை வெளியிடும் மும்முரத்தில் இருந்தேன் . ஆனால் அதையும் அங்கெடுத்து சென்று வெளியிடவில்லை மாறாக உறவினர் ஒரு குடும்பத்தின் லீ மெரிடியன் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று.ஆனால் அந்த விழாவிற்கு அப்துல் கலாம் கூட அழைக்கப் படவில்லை. ஆனால் இந்தக் கலைஞரும் பாராட்டும் வண்ணம் இந்த டாக்டர்.வி.சி.குழந்தை சாமி இருந்தார்.


Image result for VC Kulandaiswamy

இன்று அவர் இறந்தார். அந்த பெரிய மனிதருக்கு இந்த அடையாளம் மறந்து போன நிலையிலிருக்கும் சிறியோனின் அஞ்சலி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு:Image result for VC Kulandaiswamy


 பீப்பிள் யூனியன் பார் சிவில் லிபர்ட்டீஸ் பி.யூ.சி.எல் உறுப்பினராக இருந்தபோது சோ இதன் தலைவர் அப்போது அவரும் கூட எனக்கு எழுதியதாக நினைவு. ஜெவின் ஒரு தேர்தல் வாக்கு கேட்பு கடிதம் அவர் கையொப்பமிட்டது எங்கோ இருக்கிறது, லேனா தமிழ்வாணன், விசு, சுந்தர ராமசாமி இப்படி பலருமே பல்வேறு கட்டங்களில் எனக்கு எழுதி இருக்கின்றனர் அவற்றில் சில சேமிப்பில். சில தொலைந்து போன கணக்கில்.

Related image





Thursday, December 8, 2016

சசிகலா நடராஜன்,சண்முக நாதன் கலைஞர் கருணாநிதி, வைரவன் காமராசர்: கவிஞர் தணிகை

சசிகலா நடராஜன்,சண்முக நாதன் கலைஞர் கருணாநிதி, வைரவன் காமராசர்: கவிஞர் தணிகைImage result for jayalalitha burial box picture



உதவியாளர்களாக தலைவர்களுக்கு உறுதுணையாக இருந்தோர் பெயர்களைத் தமிழக மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.நிறைய பேருக்குத் தெரியாது நினைவிருக்காது.

அறிஞர் அண்ணாவுக்கு அப்படி யார் இருந்தார் என்பதே தெரியாது. இப்போது ஜெவின் உதவியாளராக இருந்த சசிகலா என்றால் கருணாநிதி என்ற பேர் போல நிறைய இருப்பதால் சசிகலா நடராஜன் என்றே சொல்ல வேண்டியதிருக்கிறது.
இவர் அ.இ.அ.தி.மு.கவின் தன்னிகரில்லாத் தலைவியாக இருந்த ஜெவின் இடத்தை எடுத்துக் கொள்வார் என நிலவரம் .

எப்படி இப்படி?

நமக்கு நினைவு தெரிந்து: காமராசருக்கு வைரவன் என்ற உதவியாளர் ஒருவர் இவரே அவருக்கு சாப்பாடு செய்யும் சமையல்காரராகவும்..அதன் பின் ஒரு நண்பர் சொல்கிறார் அரியபுத்திரன் என்றொருவரும், எம்.சி. பச்சையப்பன் என்றொரு சிறுவனாக இருந்தாராம அப்போது இப்போது அவருக்கு வயது 74 அவர் அலுவலக ஆபீஸ் பாய் ஆக இருந்தாராம் அதல்லாமல் ஒரு அலுவலக நிர்வாகியாக குடுமி வைத்த ஒரு பிராமணர் அவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அப்போது ஐ.சி.எஸ்....ஆக இருந்தாராம். இன்று காலை பேசிக் கொண்டிருந்தோம் இது பற்றி...சரி இவர்களை எல்லாம் யாருக்காவது தெரியுமா?

அடுத்து அறிஞர் அண்ணாவின் உதவியாளராக யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்ததாகத் தெரியவில்லை. எல்லாம் அவரது கழகத்தின் தம்பிகளே கூட செய்திருக்கலாம்...

கலைஞர் கருணாநிதிக்கு சண்முக நாதன் என்னும் தனி உதவியாளர் பின்னாலிருந்து அவ்வப்போது உதவி வந்ததை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் ஒளிவு மறைவின்றி பொது நிகழ்வுகளில் எல்லாம் கூட‌

இப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் சசிகலா நடராஜனை அறிமுகச் செய்து வைத்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ். எங்கே ? அவரைத்தான் எம்.ஜி.ஆர் ஜெவுக்கு ஆரம்பத்தில் (கொ.ப.செவுக்கு) எல்லா பயிற்சியும் கொடுக்கச் சொல்லி இருந்தாராம்

 அப்போது அவர் ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் இருந்தார் என்பது செய்தி. சரி அப்போது ஆங்கில படங்களை புதுப் பிரிண்ட்டாக கிடைக்க எங்கிருந்து கிடைக்கிறது எனக் கேட்க சந்திரலேகாவின் கீழ் பணி புரிந்த மக்கள் தொடர்பாளர் நடராஜன் வழியாக அவரது மனைவி நடத்தும் கடையிலிருந்து கிடைக்கிறது என அவர் சொல்ல சசிகலாவுக்கும் ஜெவுக்கும் நட்பு ஆரம்பிக்கிறது...அது அவர் கடந்த 28 ஆண்டுகளாக ஒன்றிப் போகுமளவு...சந்திரலேகாவுக்கு நேர்ந்த கதி   எல்லாரும் மறந்து வைப்போம்.

அதன் பின் டி.என் . சேஷன், மணி சங்கர அய்யர், இந்து என்.ராம் இப்படி பல கதைகள் உண்டு மறக்கப் பட வேண்டியது. அதில் சிலர் இந்த துக்க நிகழ்வில் பங்கு கொண்டார்கள்.
Image result for jayalalitha burial box picture


காலமும் இயற்கையும் சரித்திரம் சொல்பவை. சரித்திரம் மாற்றி மடை மாற்றம் செய்பவை.

எவ்வளவு செய்திகளை தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் உருவாக்கி இருப்பார்கள், எவ்வளவு எதிரிடைச் செய்திகளை சென்னை, கடலூர் வெள்ள சோகச் செய்திகளுக்கு எதிராக உருவாக்கி இருப்பார்கள்,மக்களை திசை திருப்பி, மக்களை மறக்கச் செய்ய நிறைய ஊடகங்கள் விலை பேசப்பட்டு அரசின் ஊதுகுழலாக்கப்பட்டன, நிறைய அரசியல் தலைவர்கள், சுயநலத்துடன் விலைக்கு இரையாக்கப்பட்டனர்.,

 வெற்றி என்பதே இலக்கு அதை அடைய எதை வேண்டுமனாலும் செய்யலாம் என்பது அரசியல் மொழியாக விதி விலக்காக எதுவும் இல்லை என்ற விதிகள் பின் பற்றப்பட்டன. ஆனால் கடந்த 75 நாட்களாக செய்தியை முடக்கம் செய்து செய்தியே வெளி வராமல் செய்ததும் ஒரு சாதனைதான்.அவரைப் பார்க்காமலே எல்லா குதிரைகளும் கனைத்தன...ஒரு திரை போட்டு மறைத்திருந்தார்கள் என்பதும் செய்திதான்.

 75 நாளில் ஒரு முறை கூட அவரின் உருவம் அதாவது ஒரு மாநிலத்தின் முதல்வரின் உருவம் அவரை உருவாக்கி வாக்களித்து முதல்வராக்கிய மக்களுக்கு காண்பிக்கப் படவே இல்லை. இதற்கு மத்திய மாநில அரசுகளும், அப்பல்லோ மருத்துவ மனையும் பொறுப்பேற்று அனைவரையும் இந்த உலகையும் வல்லமையுடன் ஏமாற்றி உள்ளன.

உண்மையாகச் சொன்னால் மக்களுக்கும் இந்த ஜனநாயக ஆட்சி எனச் சொல்லப்படும் இந்த ஆட்சி முறைகளுக்கும் ஒரு தொடர்புமே இல்லை. ஒரு சிறு குழு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. காவல்துறை மந்திரி பிரதானிகள் எல்லாமே அவர்கள் சொல்லியபடி கேட்டிருக்கிறார்கள். அனைவருமே குற்றவாளிகள்தான் உண்மையை மறைத்த குற்றவாளிகள்தான். வழி வழியே செய்த பழக்கம் அப்படியே...மேலும் மத்திய அரசும் ஒரு அதிகார மாறுதல் நிகழ தம்மால் ஆன காய்களை நகர்த்த முனைந்திருக்கிறது மோடியின் தலைமையில் எனவே இந்த சிலரே தமிழகத்தின் ஆட்சி முறையை மாற்றி அமைத்து இருக்கிறார்கள் இதில் மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. வாக்களித்தது விரயமாக. அதனால்தான் வாக்குகள் விலைக்கு விற்கப்படுகின்றனவோ என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

ஒரு வேளை தாம் அதிகம் காலம் வாழமாட்டோம் என்ற அறிதலில் இரண்டாம் முறை தொடர்ந்து அரசுக் கட்டில் முதல்வராக பதவி ஏற வேண்டும் என்ற எண்ணத்தில், சாதனை நோக்கில், எல்லாம் செய்யப்பட்டு உயிர் பிரியும்போது முதல்வராக இருக்க வேண்டும் என்ற கனவு மெய்ப்பட எல்லாம் செய்யப் பட்டிருக்கலாமோ? அதற்காகவா எல்லா இடத்திலும் அம்மா அம்மா என பொறிக்கப் பட வேண்டும், எல்லா புயல் நிவாரணப் பொருட்களின் மேலும் உருவப் படம் பொறிக்க வேண்டும் என்றும் முயன்றிருப்பார்கள்? எலலவற்றிலுமே ஸ்டிக்கர் ஒட்ட முயன்றிருப்பார்கள்?

Image result for jayalalitha burial box picture

அப்படி எல்லாம் செய்தவர்கள் அம்மா என பேரை நிலை நாட்ட வேண்டும் என்று எண்ணியவர்கள் அவரது உடலை வைத்த  சந்தனப்பேழையில் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா என்றுதானே பொறித்து வைக்கப் பட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் என்று போட்டுக் கொள்ளக் கூடவில்லையே... விதி எழுதிய சரித்திரம் தமிழகத்தில் நிரந்தரம் என்பது ஏதும் கிடையாது என மறுபடியும் இயற்கை தமது விதியை எழுதி முடித்து விட்டது. இதை எல்லாம் சொல்லாமல் நாம் காலத்தை நகர்த்தவே முடியாது...

இவர்கள் செய்த தந்திரம் எல்லாம் பார்த்தால், எங்கே   clowning  செய்து இன்னொருவரை ஜெ நலம் பெற்றார் எனக் கொண்டு வந்து விடுவார்களோ என்ற சந்தேகம் வந்தது, மேலும் சசிகலா நடராஜனை ஒப்பனை செய்து அவரை காணாமல் செய்து விட்டு அவருக்கு பதிலாக இவர்தான் உங்கள் முதல்வர் ஜெ என்றெல்லாம் சொல்லி விடுவார்களோ என்ற எண்ணமும் வந்து விட்டது.

பேஸ்மேக்கர் கருவியின் வேலை, எம்பால்மிங்   embalming  முறையில்    4 புள்ளிகள் முதல்வரின் கன்னத்தில் உள்ள 4 புள்ளிகள்,இவை அவரது உடல் பதனிடப்படல் முறை அந்த உடலில் பயன்படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் வந்து விட்டன. மேலும் இந்த முறை மூலம் இறந்த பின் உடலை    6  மாதம் முதல்   2   ஆண்டு வரை கூட‌ காத்து வைக்கலாம் என்கிற செய்திகள் இருக்கின்றன.

ஆக எல்லாத் தேவைகளும் முடித்துக் கொண்டு  உடலை நறுமணமூட்டி பாதுகாத்து முதல்வர் இறந்து விட்டார் என‌எம்.எல்.ஏக்களை எல்லாம் கூட்டி அதன் பின் அறிவித்து விட்டார்கள்...அறிவித்த ஊடகத்தை எல்லாம் ஒரு பக்கம் மிரட்டி மறுபடியும் நள்ளிரவில் அறிவித்து கதையை முடித்து விட்டார்கள். இது வரை 77 பேர் அதற்காக இறந்துள்ளனராம். அவர் தம் குடும்பத்துக்கு எல்லாம் 3 இலட்சம் நிதி உதவி உண்டாம். ஜெவின் காலியான தொகுதியில் சசி நிற்பாராம்.

இப்படியே காலம் தமிழகத்தின் காலம் போய்க் கொண்டே இருக்கிறது...

Image result for jayalalitha burial box picture



ஒரு உதவியாளராக இருந்த ஜெவின் சசிகலா நடராஜன் இனி தமிழ் நாட்டின் அரசியல் முதுகெலும்பாகி விட்டார்கள் மோடி தலை தடவி ஆறுதல் தர ..அடுத்த அம்மா அவர்தான் எல்லா தமிழக மக்களும் சோகத்தில் தலை சாய்க்க ஒரு மடி வேண்டுமல்லவா அது தான் தாய் மடி, அந்த தாய் மடி இனி இவருடையதுதான்.. மந்திரி முதன் மந்திரி எல்லாமே இந்த அம்மாவிடம் தான் உத்தரவு கேட்க ஒடுங்கி நிற்கிறார்களாம்...

Image result for jayalalitha burial box picture

 ஒன்று டாஸ்மாக் நெடி வேண்டும் இல்லையேல் ஒரு தாய் மடி வேண்டும் அவசியம் ... மேல் மருவத்தூர் அம்மா தமக்கு போட்டியாக வரும் அம்மாக்களை எல்லாம் மாயவலையில் வீழ்த்தி விடுகிறாரோ, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய வேலைகள் நிறைய இனி நிறைய நிறைய‌ அம்மாக்களிடம் உண்டு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Sunday, December 4, 2016

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பற் பரிசோதனை முகாம் கல்பாரப் பட்டி ஜீவா பப்ளிக் ஸ்கூலில்: கவிஞர் தணிகை.

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பற் பரிசோதனை முகாம் கல்பாரப் பட்டி ஜீவா பப்ளிக் ஸ்கூலில்: கவிஞர் தணிகை.
Jeeva Public School, Salem  - Students Playing


மறக்க முடியா முகாம் அது. கல்பாரப்பட்டி சேவாம்பாளையம் என்ற இடத்தில் உள்ள ஜீவா பப்ளிக் ஸ்கூல் உள்ளது. இது ஒரு சிபிஎஸ் ஈ பள்ளியாகும். எல் கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 290 மாணவ மாணவியர்க்கு தற்போது இது ஒரு வசந்தத் தரு நிழலை வழங்கி வருகிறது. பள்ளி இராஜாஜி தொழில் நுட்பக் கல்லூரி வளைவிலிருந்து ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் அம்புக்குறியுடன் அடையாளப்படுத்தி வழி எல்லாம் எந்தவித சந்தேகமும் வழியில் ஏற்படாமல் பள்ளியை அடையும் வரை லேன்ட் மார்க் செய்திருந்ததிலிருந்தே அவர்களின் அக்கறையும் பொறுப்பும் நன்கு விளங்கும்.முதன்முறை இந்தப் பள்ளிக்கு செல்வாரும் கூட எந்தவித தடம் பற்றிய தடுமாற்றமும் இன்றி செல்ல முடியும்.

Displaying 20161202_120656.jpg


நாங்கள் எங்கள் குழந்தைகள் திருவிழாவிற்கு, குழந்தைகள் தினமன்று அருகாமையில் இருக்கும் பள்ளிகளை எல்லாம் கலந்து கொள்ளச் செய்ய நேரடியாக அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது ஒரு மின்னல் அடித்தது.நீங்கள் ஒரு முகாமை எங்கள் பள்ளியில் நடத்திக் கொடுங்கள் என இந்தப் பள்ளியின் முதலவர் மின்னல்கொடி வேண்டுகோள் வைத்தார்.இவர் குஜராத் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை ராஜஸ்தானா, அஸ்ஸாமா என்று...அங்கு ஒரு கருத்தரங்கம், பணிமனையில் பங்கு கொண்டு நமது தமிழ் நாட்டின் புகழை பறை சாற்ற வாய்ப்பு பெற்றவர்.

Jeeva Public School, Salem  - School Bus

சிறந்த முதல்வர் என இவரின் எண்ணம் சொல் செயல் எல்லாம் நிரூபிக்கின்றன இல்லையெனில் பள்ளி ஆரம்பித்து 3 ஆண்டுகளில் இந்தளவு முன்னேறியிருக்க முடியாது.அதற்கு உறுதுணையாக கர்த்தாக்களாக இந்தப் பள்ளியின் தலைவர்: அங்கமுத்து முன்னால் காவல்துறையில் பணி புரிந்தவர் விநாயகா மிஷன்ஸ் நிறுவனர் மறைந்த சண்முகசுந்தரத்தை நன்கு அறிந்தவர், இவரின் மகன் பள்ளியின் தாளாளராய் உள்ளார். இவர்களின் கூட்டு முயற்சி பள்ளியை மேலும் உயரச் செய்யும்.தந்தையும் மகனும் முகாம் முடியும் வரை எங்களுடனே இருந்து முகாமை நிறைவு செய்ததில் எமக்கு மட்டற்ற மகிழ்வு. தலைவர் அங்கமுத்து ஒரு சில நிமிடம் வினாயகா மிஷன் நிறுவனர் சண்முக சுந்தரத்துடன் தமக்கிருந்த நெருக்கத்தை நினைவு கூர்ந்து தலைமையேற்று தலைமை உரை செய்து முகாமை சிறப்பு செய்தார்.


Displaying 20161202_112129.jpg

இதில் படிக்கும் பிள்ளைகள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்வார்கள்.
கஞ்ச மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை சூழலும் எழில் கொஞ்சும் அழகுமுடைய பள்ளியில்
Displaying 20161202_104620.jpg


பற்பரிசோதனை முகாமை நடத்த கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜா.பேபிஜான் அவர்கள் அனுமதித்ததன் பேரில் சமுதாய மேம்பாட்டுத் தலைவர் என்.சரவணன் வழிகாட்டுதலின் பேரில் முகாம் அற்புதமாக நடைபெற்றது
Jeeva Public School, Salem  - Eden Garden


எனது ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த முகாமில் மரு. பரத் எம்.டி.எஸ்
கோபால் நாயர், மூகாம்பிகை, அபிதா, அபிநயா, சத்யராணி, நர்ஸ்: ஜமுனா  ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த சேவையாற்றினர்.

Displaying 20161202_120134.jpg


எமது சிற்றுரையில் பல்லின் முக்கியத்துவம் பற்றியும், எமது முதல்வர், துறைத்தலைவர் பற்றியும் குறிப்பிட்டேன். மரு.பரத் பல் பராமரிப்பு பற்றி அறிவுரை வழங்க, மூகாம்பிகை பள்ளிப் பிள்ளைகளுடன் கலந்தளாவ, அபிதா அவசியம் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் பட்டியலை படித்தார்.முகாம் முக்கியத்துவம் அதில் பரிசோதிக்கப் பட்ட அனைவர்க்கும் கல்லூரி மருத்துவ மனை எப்போதும் தம்மால் ஆன சேவையை வழங்கத் தயாராய் உள்ளது பற்றியும் குறிப்பிட்டேன்.

Displaying 20161202_115315.jpg


இந்த முகாமை உற்சாகமான விழாவாக மாற்றி இருந்தனர் நல்ல ஆசிரியப் பெருமக்களும், அங்கு பணியில் உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் பள்ளி அலுவலர்களும், ஒரு தடையுமில்லை, இது போன்ற முகாம் நடத்துவதாக இருந்தால் நாள் எல்லாம் ஒரு பள்ளிக்கு நம்மால் சென்று நல்ல ஒரு முகாமை நடத்திக் கொடுக்க முடியும் அவ்வளவு ஒத்திசைவுத் தன்மை. நாங்கள் செல்லும் முன்பே முகாம் நடக்கும் அறை அதற்கான ஏற்பாடுகள் ஆசிரியர்களும் முதல்வரும் காட்டிய உற்சாகமும் பாரட்டதகுந்ததாய் இருந்தது.
Jeeva Public School, Salem  - Students in Fancy Dress


பள்ளிப் பிள்ளைகளும் அப்படித்தான். அவ்வளவு சீராக இருந்தனர். எனக்கொரு பள்ளிப் பயிலும் நிலையில் ஒரு மகவிருந்தால் தற்போது அந்தப் பள்ளியில் சேர்த்து விடலாம் என நினைக்குமளவு மிக நன்றாக இருந்தது அந்த அனுபவம். நாங்கள் முகாம் முடித்து வந்த போதும் எங்களின் மனம் அங்கேயே ரீங்காரித்தபடியே இருக்கின்றன.
Displaying 20161202_124616.jpg


முதல்வர் மின்னல் கொடி பள்ளி ஆண்டுவிழாவிற்கு அழைப்போம் தவறாமல் கலந்து கொள்க என பந்தம் விட்டுப் போகாமல் இருக்க இப்போதே ஒரு அழைப்பை கொடுத்து மேலும் ஆர்வமூட்டினார் மறுபடியும் அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: புகைப்படம் பின்னர் இணைக்கப்படும்.



சைத்தான் பார்த்த அதிர்வலைகள்: கவிஞர் தணிகை

சைத்தான் பார்த்த அதிர்வலைகள்: கவிஞர் தணிகை

Image result for spirits without body but soul living

இது சினிமா விமர்சனம் அல்ல. உண்மையிலேயே உடலை இழந்த ஆவிகள் பற்றியும் இந்த துறையில் எனக்குள்ள அனுபவ அறிவையும் அசை போட விரும்பும் பதிவு இது.

எனக்கு எப்போதுமே ஒரு கேள்வி உண்டு. உடலை இழந்த உயிர் அதான் ஆன்மா, அல்லது ஆவி எவ்வளவு நாட்கள் இந்த நிலையில் இருக்கின்றன, அதன் பின் என்ன நிலைக்கு அவை போகின்றன என்பது பற்றியது. ஆனால் இந்த கேள்விக்கு எந்த மதமும், எந்த கடவுளும், எந்த முனிவரும் அறுதியிட்டு உறுதியான பதிலை பகிர்ந்ததில்லை. அப்படி சொல்லவும் முடியாது. அதை முற்றிலும் அறிந்தவர் என்பது எவருமே கிடையாது. இது ஒரு ஆய்வுக்குட்பட்ட கேள்வி. இதற்கு முடிவே இது வரை மனித சமூகத்திற்கு கிடைக்கவில்லை.

ஆனால் உடலை இழந்த உயிர், ஆவி அல்லத் பேய் பிசாசு, சைத்தான் எனப்படுவது உண்டு அவற்றுடன் எனக்கும் சில தொடர்பிலான அனுபவமும் உண்டு.
 அதில் ஆவி, பேய், போன்றவை நல்லவை கடவுளைப் போன்ற நல்ல நிலையிலும், பல தீய நிலையிலும் உள்ள அவை பிசாசு அல்லது சைத்தான் எனப்படும் நிலையிலும் உள்ளவை.

இந்த பிசாசு, சைத்தான் அல்லது கெட்ட ஆவி, கெட்ட பேய் என்பன பெரும்பாலும் பயந்த சுபாவத்தினரை, எளிதில் வாய்ப்பு கிடைக்கும்போது பிடித்த்துக் கொள்கிறது என்பது உண்மைதான்.அவை சரியான கிறுக்கல் முறுக்கல்களுடன் இவர்களை கதிகலங்க வைத்து அளவற்ற முறையற்ற எல்லையற்ற செயல்களை புரியவைத்து மானிடத்தை கேலிக்குரியதாக்கிவிடும்.

Image result for spirits without body but soul living

என்னடா இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் நிரம்பிய இந்த உலகில் இந்தியா 83 செயற்கைக் கோளை ஒரே நேரத்தில் ஒரே ஒரு ராக்கெட் மூலம் அனுப்பி வரும் நேரத்தில், இதெல்லாம் எப்படி என்று கேட்கலாம். ஆனால் அவை ஒருபக்கம் நடக்கின்றன. ஆனால் இவையும் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. விண்ணுக்கு ஏவுவோம் விண்கலங்கள் ஆனால் மண்ணில் இருக்கும் கடல் அதிசயங்கள் முற்றிலும் நாம் அறியோம் என்கிறது அதே அறிவியல்.

அப்படித்தான் இந்த சைத்தான் , பேய், பிசாசு: எனது அனுபவத்தில் எனது தாயை, ஒரு மைத்துனரை, ஒரு பக்கத்து வீட்டு குடியிருந்தாரை அவர்கள் இறந்த பின்  சந்தித்து பேசி இருக்கிறேன். தியானத்தில் 32 ஆம் ஆண்டில் இருக்கிறேன் எனவே இந்த ஆவி உலக சந்திப்புகளும் இதனுள் இருக்கின்றன.

ஒரு ஆவி என்னை தியானம் செய்ய விடாமல் நச்சரித்து கொண்டிருந்ததும், அதை அதற்குத் தேவையான விருப்பத்தை நிறைவு செய்து முடித்தவுடன் மறுபடியும் தியானம் அமர அமைதி கிடைத்த அனுபவமும், ஒரு மைத்துனர் என்னதான் நாங்கள் முயற்சி செய்த போதும் திரும்பவும் அவர் இருக்கும் இடம்  திரும்பு வந்தமர்ந்த கதையும் இந்த ஆவிகள் கூட சுயநலமிகளாய் தம்மை சார்ந்தாரை எந்த ஊறு வகை செய்யாமலும் அதே நேரத்தில் தமக்குப் பிடித்த ஏமாந்த நபர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி விடவும் செய்து விடுகின்றன.
Image result for good spirit evil spirit


 சமயத்தில் ஒரே உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவிகள் குடியிருக்க ஆரம்பித்து அவற்றினால் இந்த உடலை உடைய நபர் தாறுமாறாக குணநலன்கள் வெளித் தெரிய ஆரம்பித்து அவரைச் சுற்றி இருப்பார்க்கு விசித்திரமான அனுபவங்களைக் கொடுத்து அதனால் அவர்கள் அவற்றிடம் இருந்து இந்த உடலை உடையவருக்கு அந்த ஆவிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தர முனையும் நடவடிக்கைகளும் மேற்கொள்வதுமுண்டு.

இதற்கு எல்லாம் சில நேரங்களில் மனோவசியமும் மனோதத்துவ நோய், மருந்து எல்லாம் செய்வாரும் உண்டு. அவற்றிற்கு எல்லாம் அடங்காமல் நோய் நீங்காமல் பிணி நின்று போவதுமுண்டு.விடை கிடைக்காத கேள்வியாய் வாழ்வு இருப்பதுமுண்டு.

எனது அருமைத் தாய் என்னை விட்டுப் பிரிந்த போதும் சில ஆண்டுகள் எங்களுடன் இருந்த உண்மை அனுபவங்களும் எம்மிடம் உண்டு. சரி இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் எனில் : ஆவிகள் தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள மீடியம் அல்லது தமது ஆளுகைக்கு உட்பட்ட உடலை உயிரை எப்படி வேண்டுமானாலும் சொற்களுக்கு படிய ஆரம்பித்து விட்டால் அடிபணிய வைத்து ஆட்டம் கட்டுவதுண்டு. அதை அப்படிப்பட்டதையே நாம் சைத்தான் என்கிறோம் முகமதிய மொழியில்

இவற்றின் இறுதி நடவடிக்கை என்னவாக இருக்கும் எனில் பற்றி இருக்கும் உயிரைக் கூட மாய்த்து எந்த வழியிலாவது, அதாவது தூக்கு, மருந்து, விபத்து, மின்சாரம், ரயில், பேருந்து, மாடியிலிருந்து கீழ் விழுதல் இப்படி எந்த வகையிலாவது நிறைவேற்றி வீழ்த்தி விடுவதுண்டு...அதனால் அவற்றுக்கு என்ன பயன், ஏன் அப்படி தூண்டுகின்றன என்பதெல்லாம் ஆய்வுக்குரியன.

பூமியில் மட்டும்தானா? மனிதர்க்கு மட்டும்தானா? இவை போன்ற கேள்விகளுக்கும் நம்மிடம் தெளிவான விடை இல்லை. இவை அறிந்தார் என சொல்லி ஏமாற்றுவாரும் உண்டு.

இவற்றைக் கட்டுவார் என்போர் துரத்துவார் என்பார், இவை ஏன் பயம் கொள்கின்றன இவை விடைபெற்று எங்கு செல்கின்றன, எங்கு இருக்கின்றன, இவற்றின் உணவு முறைகள்  நடவடிக்கைகள், பண்பாடுகள் உடை, இயங்கும் முறைகள் இவை பற்றும் உடலோடு ஏன் அவை தங்கும் வரை அந்த உடலோடு அந்த மனிதரோடு ஏன் எதிரொலிக்கின்றன எதிரொளிக்கின்றன என்பன போன்ற கேள்விகளும் அப்போது இந்த உயிரும் உடலும் இருக்கும் நபரின் நிலை என்னதான் ஆகிறது என்பது போன்ற கேள்விகளும்

இவை பல சமயங்களில் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட உடலை ஆக்ரமித்தபடியும் சில நேரங்களில் நீங்கி மறுபடியும் பிடித்துக் கொள்வதாகவும் விளங்குகின்றன.

ஆனால் இவை அனைத்துக்கும் அடிப்படை இருளடைந்த இடங்கள், பயமுடைய மனிதர்கள், அதிக ஆசையுடைய நபர்கள், மலர்களின் மணங்கள், நேரம் கெட்ட நேரம் இப்படி பல காரணங்கள் எல்லாவற்றையும் விட உயிர் பிரியும்போது நிறைவேறாத ஆசை ஏதேனும் இருப்பது இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

இவற்றில் சில நாம் அறிந்து கொண்டவை. பல அறிந்து கொள்ளத் தோன்றுபவை தூண்டுபவை, பல அறிய முடியாமலே போய்விடுபவை. அவற்றைப் பற்றிய பல படங்களாக: இப்போது: தேவி, இளமி, சைத்தான்,காஷ்மோரா,மாஸ், இடைக்காலத்தில் சந்திரலேகா அந்தக் காலத்தில் நெஞ்சம் மறப்பதில்லை இப்படி எவ்வளவோ படங்கள் எதை எல்லாமோ சொல்ல முயன்றுள்ளன. இதற்கு மொழி எல்லாம் இல்லை எல்லா மொழிகளும், எல்லா நாடுகளும் எல்லையில்லாமல்

ஆனால் இவற்றுள் சில செய்கைகளைப் பொறுத்து கடவுளாகவும் ஆகிவிடுகின்றன. வணக்கத்துக்குரிய வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக கருதப்பட்டு வணங்கப் படுகின்றன.

Image result for good spirit evil spirit

முதியோர் , மூத்தோர், இறந்தார் , குல சாமி, தாய் தந்தை, பாட்டி, தாத்தா, உற்றார் உறவுகள் இப்படி எல்லா விதமான காலம் சென்ற உயிர்களையும் இதற்காகத்தான் இப்படித்தான் வணங்குகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. மறப்பதற்கில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பணப் பரிவர்த்தனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முன்: கவிஞர் தணிகை

பணப் பரிவர்த்தனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முன்: கவிஞர் தணிகை


Image result for modi ke app

மோடியின் செயல் : அரசியல் வியாதிகள், பெருமுதலாளிகள் ஒரு அணியில் ஏமாற்றுகிற வர்க்கமாகவும் தமது ஊதியத்தைக் கூட பெற இயலாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மற்றும் ஒரு ஏமாறுகிற வர்க்கம் மற்றும் ஒரு அணியாக இந்திய மக்கள் கூட்டம் மாறி வருகிறது‍ இதை செய்திருப்பது மோடியின் சிந்தனையற்ற செயல். என்றாலும் இதை தொலை நோக்குப் பார்வையில் பார்த்தால் இந்தியாவில் வர்க்க பேதம் தோன்றுவதற்கான துளி அடையாளம் தென்படுகிறது. இது கண்கூடு.ஒரு கூட்டத்தில் மாட்டிக்கொண்ட பிஜேபி எம்.எல்.ஏ துவைத்து எடுக்கப் படுகிறார் காவல் துறையும் அடி வாங்குகிறது அவரை காக்க முனையும் பணியில்.

லெனின் சொல்வார்: கோடிக்கணக்கான மக்கள் இனியும் ஒரு நொடியும் பொறுக்க முடியாது என வெகுண்டு எழுவதுதான் புரட்சி என்பார்.

அதன் ஆரம்ப விதைகள் தூவப்படும் அறிகுறிதான் இந்த அம்பானி,அதானி,ஜிந்தால், ஸ்டெரிலைட்  பெருமுதாளிகளின் கைப்பாவையாக பிரதமர் மோடியின் செயல்பாடு.

பாரதிய ஸ்டேட் வங்கியின் கடனுதவி  வழங்கப்பட்ட பணத்தை ரிலையன்ஸ் வைத்து வாங்கிக் கொள்ளலாம் என ஒரு பக்கம், விஜய்மல்லையாவின் ஒரு சொத்தைக் கூட ஏலம் விட்டு அவரின் கடன் தொகையை வசூல் செய்ய முடியா நாட்டின் மாபெரும் வங்கி

அடுத்து சுப்ரமண்யம் சாமி சொல்வது போல வெளி நாடுகளில் உள்ள 70 இலட்சம் கோடி இந்தியப் பணத்தை கொண்டு வர ஒரு நடவடிக்கையும் உருப்படியாக செய்யாமல் ,இந்த பெருமுதலாளிகளிடம் வரவேண்டிய 7 இலட்சம் கோடியைப் பெற முனையாமல் இதை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமாம்.

இப்போது கள்ளப் பணத்தையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்க ரொக்கப் பணத்தை அதன் புழக்கத்தைக் குறைத்து கடைசியில் அழிக்க இந்தியாவின் சுமார் 100கோடி பேருக்கும் மேலானவர்களை தமது பணத்தை ஊதியத்தை அவர்கள் பெற முடியாமலே பிச்சைக்காரர்களாக அல்லாட வைத்திருக்கிறார் ஒரு நள்ளிரவிலே சொன்ன ஒரு வார்த்தை மூலம்.

அரசின் கணக்குபடி 14.6 இலட்சம் கோடி பணத்தில் 500, 1000 நோட்டுகளில் 9 இலட்சம் கோடி மதிப்புடைய நோட்டுகள் வந்து சேர்ந்து விட்டன. இன்னும் டிசம்பர் 30க்குள் 10% வரலாம் எப்படியும் இன்னும் 3.5 இலட்சம்கோடிகள் வராமலும் போகலாம் என கணக்கு உள்ளதாம்.

ஆனால் காரணமாகவே பணப்பற்றாக்குறை ஏற்படுத்தவே புது நோட்டுகளை குறைவாக அச்சடித்து வெளி அனுப்பி அனைவரையும் ரொக்கப் பணப் பரிவர்த்தனையிலிருந்து வெள்யேற்றி கணக்குகள் பரிமாற்றம், பிளாஸ்டிக் பணப் புழக்கம் போன்றவற்றில் ஈடுபட வைக்கவும் திட்டம்.இது ஒரு பேச்சு

ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த திட்டம் பலனளிக்காது என்றும் கருத்துகள் உள்ளன.

இந்நிலையில்: அடுத்து தங்கம் , ரியல் எஸ்டேட் எனப் பாயும் முன் பொருள் சேவை வரி ஜி எஸ் டி கூட்ச் அன்ட் சர்விஸ் டேக்ஸ் பற்றி குழப்பி வருகிறதாம்.
Image result for modi ke appImage result for modi ke app


இந்நிலையில்: 13,860 கோடி குஜராத்தில் அரசியல், மற்றும் பணக்காரர்களின் பணம் கணக்கை ஒருவர் தாமே வெளி இட்டிருக்க, அவரை ப் பிடித்திருக்கிறார்கள், ஏழுமலையான் இனி இந்த 1000 , 500 நோட்டே வேண்டாம் என மறுதலளித்திருக்கிறார். சேலத்து பி.ஜே.பி நாயகன் ஒருவனிடம் 20 இலட்சத்துக்கும் மேல் புது 2000 நோட்டுகள், பெங்களூரில் புது நோட்டுகள் 5 கோடி, பி.ஜே.பியில் மேற்கு வங்க பிரிவு வங்கியில் இந்த திட்டம் வருமுன்னே 2கோடியை இரவு 8 மணிக்கு வங்கிக் கணக்கில் வரவு வைத்திருக்க...
Image result for modi ke app


நான் ஒரு மக்கள் நலப் பணியாளர், தற்போது கூட ஒரு நிறுவனத்தில் சேவை செய்து வருகிறேன் குறைவான ஒரு ஊதியம் என் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது எனது மாதச் செலவுக்கு ஒரு வங்கியில். மாதத்தில் முதல் சனிக் கிழமைதான் எனக்கு விடுமுறை.

வங்கிக்கு சென்று பார்க்கிறேன், செக்புக் வேண்டுமானால் எழுதிக் கொடுத்துப் போங்கள் குறுஞ்செய்தி உங்கள் செல்பேசிக்கு வரும் வந்த பின் பெற்றுச் செல்க, அதற்கு முன் பணம் வேண்டுமெனில் காலை 7 மணிக்கு வந்தால் முதலில் வரும் 100 அல்லது 120 பேருக்கு டோக்கன் தருவோம் அவர்களுக்கு பணம் எங்களுக்கு தருவதை வைத்து 2,000 வரை பட்டுவடா செய்கிறோம் என்றனர். முன்பாக இருந்திருந்தால் எமது வல்லமையை சொல்லி பணம் பெற முயன்றிருப்பேன்.ஆனால் 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம், டாஸ்மாக்கில் வரும் பணச் சில்லறை எல்லாம் அரசியல் வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மாலையில் பணமூட்டைகளாகி போக இந்த வங்கிப் பணியாளரும் உடந்தைதான்...எனவே இந்த நாட்டில் எங்குமே எதிலுமே பணக்காரனுக்கு ஒரு நீதி, ஏழைக்கொரு நீதி, வர்க்கம் இரண்டாகிறது நன்றாக எம் கண்களுக்குப்புலப்பட...எதுவும் பேசவில்லை வந்து சேர்ந்தேன்..

 எல்லாவற்றுக்கும் இனி சேவை வரி உண்டு அது அப்புறம் (இவனுங்க அப்பன் வீட்டுப் பணமல்லோ, எங்க உழைப்புடா உழைப்பு, நரிக்கு நாட்டமை,,, கேடுகெட்ட ஜனநாயகமும் ஓட்டு முறைகளும் இவர்களுக்கு வேலையில்லாதார்க்கு வேலை கிடைக்க வைக்க வக்கில்லை, செய்த வேலைக்கான பணத்தை இவர்கள் பிடித்து வைத்துக் கொண்டு அதை மாதம் கொஞ்சமாக தினம் கொஞ்சமாக வாரம் கொஞ்சமாக எடுத்துக் கொள்க என கட்டளை விதிப்பார்களாம்) ஏண்டா கட்டணத்தை எடுத்துக் கொண்டு வேலை செய்தால் அதுக்குப் பேர் சேவையாடா? சம்பளம் வாங்கிக் கொண்டு ஆள்கிறீரே அதற்கு பதவி ஒரு கேடா அதற்கு பேர் ஆட்சியாடா? மக்களின் வேலைக்காரர்தானே நீங்கள் எல்லாம். மக்களுக்கு  வேட்டு வைக்க பணக்கார முதலாளிகளிடம் கைக்கூலி பெற்றுக் கொண்டு ஆள்கிற ஆண்டவர்கள்... தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை எனில் சம்பளம் கொடுக்கும் முதலாளிகளுக்கு வேலைக்காரரை நீக்கி விட்டு வேறு வேலைக்காரரை நியமித்துக் கொள்ள அதிகாரம் உண்டுதானே?)


Related image

இவை எல்லாம் இப்படி இருக்க... சில புள்ளி விவரங்கள் எனக்கு கிடைத்தன அவற்றை தருகிறேன் அவற்றைப் படிக்கும் முன் மக்களே நிலை உணருங்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: மக்கள் கொண்டு சென்று கோடிகளாய் கொட்டி சாலையில் உள்ள கடைகளை பாதுக்கச் சொன்னார்கள். பணத்தைப் பெற்ற கொஞ்சகாலம் வேலை நடைபெறவில்லை. அது தேர்தல் காலம். எல்லாம் முடிந்தது. இப்போது கடைகள் அத்து மீறல்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன..ஆனால் அதிலும் பாரபட்சம், கட்சிக்காரர், முதலாளிகள் என விதி மீறல்கள் எவருமே வீறு கொண்டு ஏன் என்று கேட்க இல்லாமல்...
Related image

ஒரு நாட்டில் ஒரு ராஜாவுக்கு மனைவி குழந்தைகள் இல்லை. ஊர் ஊரா சுற்றி வந்தார். ஆனால், அவர் மனதில் நிம்மதியே இல்லை!. அவர் வருத்தத்தோடு உள்ளதைப்பார்த்த மந்திரி, ' ராஜா ஏன் வருத்தமா இருக்கீங்க?' என்றான். அதற்கு ராஜா, நானும் எங்கெங்கோ போய் வர்றேன்; எனக்கு சந்தோசமே இல்லை; ஆனா, எங்கும் போகாமல் இங்கயே இருக்கிற மக்கள் எல்லாம் மனைவி, குழந்தை, குடும்பமுனு குதூகலமா இருக்காங்க. அதெல்லாம் பார்க்க பார்க்க மனசு பத்திகிட்டு எரியுது' என்றார். அதற்கு மந்திரி, 'அவர்கள் மகிழ்ச்சியை எல்லாம் பறித்து கண்ணீர்விட்டு கதற வைப்பது ரொம்ப சுலபம்' என்றார். ராஜா, 'அது எப்படி?' என்றார். 'அவுங்க கையில் பணம் இருப்பதுதான் அவர்கள் மகிழ்ச்சிக்கு காரணம். அந்த பணத்தை எல்லாம் செல்லாதுன்னு அறிவிச்சிட்டா பணம் பணமுன்னு அலைஞ்சே செத்துடுவாங்க!' என்றார் மந்திரி. 'பணத்தை ஏன் செல்லாதுன்னு அறிவிக்கிறீங்க என்று கேட்டா, என்ன சொல்றது' என்று ராஜா கேட்டார். வெளிநாட்டு சதி, உள்நாட்டு குழப்பன்னு ஏதாவது சொல்லி விடலாம்.' என்றார் மந்திரி. மகிழ்ச்சியான ராஜா மந்திரி ஆலோசனைபடி பணம் செல்லாது என்று அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சியை இழந்து நாயா பேயா அலைந்தனர். மக்கள் படும் கஷ்டத்தைப்பார்க்க பார்க்க ராஜாவுக்கு பயங்கர மகிழ்ச்சி ஏற்பட்டது. மனைவி, குழந்தை, குடும்பமுன்னு கும்மாளம் போட்டீங்கல்ல, எல்லாம் சாவுங்கடா!' என்று குலுங்கி குலுங்கி சிரித்து சிரித்து சிரித்து பைத்தியமானார். [11/21, 21:48] Another view on De Monetization* *Dr. K.C. Chakrabarty, Deputy Governor of the Reserve Bank of India from 2009 to 2014*, is not anti-Modi, anti-BJP person. He is explaining in simple, coherent language the social and economic impacts of Demonetization. Following are the excerpts: 1. The economic *benefit is less* and the *cost is more*. 2. I think (the Prime Minister) has not been properly briefed on the subject. 3. Currency *notes are not black money*, all currency notes are white money. 4. When it (the currency) reaches a *person who is not paying tax* it becomes black money. 5. When the currency reaches a *person who is paying tax it becomes white money.* 6. The process and the person are the culprit, but you are destroying the notes. 7. If the *process and people are not changed,* a person can use currency, gold, *other assets for black money generation.* 8. Government’s understanding is that [black] money is with the rich, whereas on the contrary more cash money is lying with the poor. 9. 90% of the poor’s *liquidity is in cash*, so (now) they have no cash. 10. All your trade and commerce is likely to be affected. 11. The total cost of replacing the notes will be Rs 10,000 or 15,000 crore. That is a *direct loss.* 12. Banks will be doing only this job for the next two months: exchanging the note, managing the cash, managing the crowds. People will be more busy with these things. All this will have an adverse effect on the economy. 13. There will be a *liquidity crunch,* volume of transactions will go down, sometimes it may totally collapse, depending on the situation. 14. *Inflation* will come down because *people have no money.* If you withdraw the money from the people all *prices will collapse*, but people will not be able to eat vegetables also. Prices are collapsing because medium of exchange is not there. 15. If the economic growth comes down, the government’s tax collection also comes down…. If a person goes with black money and spends it in the malls, restaurants or cinema hall then government gets a part of the tax. 16. Demonetisation is a very *blunt instrument* and it has to be used very judiciously and in a very very critical situation. Generally, in a normal situation it doesn’t give any results. [11/22, 11:03] ராமன்: அரசு கருப்பு பணத்தை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது நன்றே! ஆனால், சமூக நிலைகளை நன்குணர்ந்துச் சற்று நெகிழ்வான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்! நமது சமூக அமைப்பு பணம் வாழ்க்கைக்கு அவசியம்; பணம் உள்ளவனே வெற்றியாளன்! ஆதலால், அதை எப்படியாவது தேடு என்றுதான் இவ்வளவு நாள் நமது சமூகம் சொல்லிக்கொடுத்து வந்தது! எல்லாவிலும் பணந்தான் தேவைப்பட்டது! எல்லாவையும் பணந்தான் தீர்மானித்தது! தேர்தலில் நின்று ஜெயிக்க பணம் தேவை என்பதிலிருந்து படிக்க, வேலை தேட, வீடுகட்ட, திருமணம் செய்ய என்ற எல்லாவிற்கும் பணம்தான் தேவையாக இருந்தது. பணம் வைத்து உள்ளவர்களை எல்லாம் திருடனைப்போல் நடத்தும் பா.ஜ.கட்சியனர் யாரும் தேர்தலில் பணம் செலவு செய்யவில்லையா? அவர்கள் செலவு செய்த பணமெல்லாம் கருப்பு பணமல்ல என்று உறுதியாக சொல்லமுடியுமா? ப.ஜ.கட்சியினர் தேர்தலுக்கு செலவு செய்ய பெரு முதலாளிகள் கொடுத்த பணமெல்லாம் கணக்கு காட்டப்பட்ட பணந்தானா? அவர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற உத்தமர்கள்தானா என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்! இப்படியான சமூக சூழலில் எல்லோரும் பணத்தை தேடித்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள்! பணக்காரனைத்தான் உயர்ந்த மனிதனாக சமூகம் மதித்தது! ஆதலால், வாய்ப்புள்ளவர்கள் வாய்ப்புள்ள வழியிலெல்லாம் பணம் சம்பாதித்தார்கள்! இதனை சரியென்பதோ, தவறு என்பதோ இப்போது பயனற்றது! நடுதரவர்க்கத்தினர், மேல்தட்டு வர்க்கத்தினர் அப்படி இப்படி என்று கூடக்குறைய பணம் சம்பாதித்துதான் இருப்பார்கள்! அதில் பெரும்பகுதி கருப்புபணமாகத்தான் இருக்க
BJP MP BABUL SUPRIYO attacked by angry public Tod…: http://youtu.be/BwNHj9JDRC4
[11/26, 19:38] JKK: BJP MP Harsh Wardhan got Beaten up in Delhi by an…: http://youtu.be/3iE5gX83IxU
[11/27, 20:43] JKK: சேலம்: சேலம் அருகே பாஜக பிரமுகர் காரில் கொண்டு சென்ற 20.55 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
[11/29, 06:50] JKK: வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,
" சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க "

" ரெண்டாயிரம் நோட்டா இருக்கே அதையாவது வாங்கிக்குவீங்களா ? "

" சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க , சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க "

எனக்கு பின்னால் நின்ற பெரியவர்,
" சார் என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு அதையாவது வாங்கிக்குவீங்களா "

" இல்ல சார் அதெல்லாம் வாங்கமாட்டம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா "

மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.
இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும். நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது.

வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.
இருந்த போதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.

இரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

"ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார்.
வேண்ணா பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். "

" சரி பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.
இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க "

" ஏன் சார் அப்டி சொல்லுதிய ?
நீங்க மொதத்தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க.அப்புறமா பணத்த குடுங்க.நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய. அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா ? நூறு எரநூறு வேணும்னா நா தரவா ? வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் "

தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்
Thank you for using Debit Card ending xxxx for Rs.475.00 in CHENNAI at Reliance Fresh ...!

வாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த Relaiance எங்கே !

வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி எங்கே !..

*Relaiance கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.!*

ஆனால் நம் மக்களின் கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி, வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு இருக்கும் !
[11/29, 06:51] அருமை! கொஞ்ச காலத்திற்குபிறகு இதெல்லாம் அருங்காட்சியக பொருளாகிவிடும்! இனி உறவும் உணர்வும் போய்விடும்! நுகர்வும், வார்த்தை பகிர்வும்மட்டும் இருக்கும்!
[12/3, 21:43] குருடனை நம்பி ஒரு கூட்டம்....
1. முகேஷ் அம்பாணி தன் தொலை தொடர்பு நெட்ஒர்க் ஐ விரிவு படுத்தும் விதமாக கடந்த 2 வருடமாக அணைத்து இடங்களிலும் optic fibire கேபிள்கள் பதிக்கப்பட்டது....
2. ஜூலை5. டிஜிட்டல் இந்தியா என்று கொண்டாட்டம்...
3. செப்.4 jio சிம் விற்பனை துவக்கம்... அதற்க்கு விளம்பர Ambassador ஆக, அதன் விளம்பரங்கள் அனைத்திலும் மோடியின் படம்.
4. செப்.6 relaince ல் பணிபுரிந்த ஊர்ஜித் பட்டேல் RBI GOVERNER ஆக அறிவிப்பு...
5. NOV8. RS.500,1000ம் முடக்கம்
6. NOV15. கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யமாட்டோம் என்று சொன்ன RBI, ரிலையன்ஸ் குழுமத்தின் BIGBAZZAR ல் DEBIT/CREDIT கார்டு ஸ்விப் செய்து RS.2000 பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு.
7.NOV்.25: கள்ளப்பணம் கருப்புபணத்துக்
கு என்று கூறப்பட்டது... அப்படியே டிஜிட்டல் கேஷ் என்று விளம்பரம்...
8.DEC1.. முகேஷ் அம்பாணி JIO சிம் இலவசங்களை 2017 மார்ச் 31 வரை நீட்டிப்பு.. மற்றும் JIO MONEY MERCHANT APP. என்கிற புதிய APP அறிமுகம்...( இதன் மூலம் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் மொபைல் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்...) இவற்றை அறிவித்து விட்டு முகேஷ் அம்பானி மோடியின் 500, 1000 ஓழிப்புக்கு புகழாரம் சூட்டி, JIO சிம்மின் அடுத்த கட்ட பரிமாணத்தை எடுத்து சென்றது..
இப்பொழுது கொஞ்சம் யோசித்து ஒப்பிட்டு பாருங்கள் மோடியின் செயலையும், அதற்க்கு ஏற்றார் போல் பின் வரும் முகேஷ் அம்பானியின் செயலையும்....
இப்பொழுதும் உங்களுக்கு இந்த பணப்புழக்க தட்டுப்பாடு யாருக்காக உருவாக்கப்பட்டது என்பது புரியவில்லை என்றால் ........... ?
கடந்த 3 மாதத்திற்கு முன் நடந்த ஸ்பெக்ட்ரம்(2G,3G4G) ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட பணம் 14.5 லட்சம் கோடிகள்..... அதில் 4G க்கு மட்டும் எதிர் பார்க்கப்பட்டது 11 லட்சம் கோடிகள்... ஆனால் கிடைக்க பெற்றது வெறும். 65,870 கோடிகள் மட்டுமே, இதற்க்கு சொன்ன காரணம் யாரும் ஏலத்தில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது... அதே 20

BJP MP BABUL SUPRIYO attacked by angry public Today 25th NOV
BJP MP from Asansol frozen punished the people of Babul Supriyo peers. The country is really changing Please Do subscribe for more.. About Eluts India ______...
youtube.com

Saturday, December 3, 2016

மாவீரன் கிட்டு சுசீந்தரன் தமிழ் சினிமா: விமர்சனம்: கவிஞர் தணிகை

மாவீரன் கிட்டு சுசீந்தரன் தமிழ் சினிமா: விமர்சனம்: கவிஞர் தணிகை

Image result for maaveeran kittu

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளில் தலைவராக இருந்த ஒருவரின் பேரை வைத்து இருக்கும் இந்தப் படம் நேற்று டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதைப் பற்றி சில நெருடல்கள் இருந்த போதும் பார்க்கலாம்.

சாதியப் பிரச்சனையை மையமாக வைத்து அதற்காக போராடும் பிரச்சாரப் படமாக வெளி வந்துள்ளது. இந்த சாதியப் பிரச்சனை சமுதாயப் பிரச்சனையாக இன்னும் இருக்கிறது ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை எனவே சிலருக்குத் தொடர்புடையதாக இல்லை எனினும் பலருக்கு இந்தப் படம் தொடர்புடையதாகவே இருக்கும் என்பதால் அதை வரவேற்கலாம் இப்போதும்...

சினிமாத்தனமாக ஆரம்பத்தில் சிமென்ட் பூசப்படாத பள்ளி கல்லூரி காதல் என்று ஆரம்பித்து ஆரம்பத்திலிருந்தே சாதிய வன்முறை எப்படி அழுத்தமாக விழுகிறது எனச் சொல்ல ஆரம்பிக்கிறது.

பாம்புகடித்த இடத்தை யாராவது கடித்து உறிஞ்சி வழக்கப்படி துப்புவார்களா என்று தமிழ்ப் பட எதிர்ப்பார்ப்புக்கு மாறாக தூக்கிக் கொண்டு தொடர் ஓட்டமாக ஓடுகிறார்கள் அன்று எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்து மறைந்த தினம் எனவே கல்லூரி விடுமுறை ஆதலால் பேருந்துகள் இல்லை என்றும் அது பழனி முருகன் கலைக்கல்லூரி என பழனி அருகே உள்ள கிராமத்திடை சொல்லப்பட்டிருப்பதான கதை. கடைசியில் கிட்டு அதாங்க நம்ம கதாநாயகன் விஷ்ணு விஷால் (கிருஷ்ணமூர்த்தி என்று பேர் சுருக்கம்) அந்த பாம்பு கொத்திய கல்லூரி மாணவியை தொட்டு தூக்கி காப்பாற்ற முனைந்ததற்காக தீண்டத் தகாதவன் எப்படி எங்கள் பெண்ணை எங்கள் சாதிப் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம் என மிரட்டல்...இவர் தெரியாமல் பண்ணிட்டேன் மன்னிச்சிக்குங்க என விலகி பிரச்ச்னையை மேற்கொண்டு வெட்டு குத்து எனப் போக விடாமல் தாங்கிக் கொள்கிறார்.

Image result for maaveeran kittu

ஆனால் இந்தப் படம் முழுதுமே ஆர். பார்த்திபன் தோளில் தாங்கியே சொல்லப்பட்டிருக்கிறது.விஷ்ணு கடைசியில் தம் இன முன்னேற்றத்திற்காக தமது உயிரைக் கொடுத்து தியாகம் செய்து மாவீரன் ஆகி விடுகிறார் எனச் சுசீந்தரன் கதையை முடிவுக்கு கொண்டு வருகிறார்.

ஸ்ரீதிவ்யா அவருக்கு அளிக்கப் பட்ட பங்கை சரியாகவே செய்திருக்கிறார். ஆனால் இந்தப் படத்தின் மூலம் சுசீந்தரன் என்ன சொல்ல வருகிறார்,என்பதுதான் கேள்வி. இது போன்று தியாகம் தான் தாழ்த்தப்பட்ட இனத்தை மேலுக்கு கொண்டு வர முடியும் என்கிறாரா?அல்லது மேல்தட்டு மக்கள் செய்யும் சூழ்ச்சிக்கு எதிராக தாழ்த்தப் பட்ட இனமும் சூழ்ச்சி பொய் என்று எதிர் விளையாட்டு விளையாடி வெல்லலாம் என்கிறாரா? இவை தெளிவுபடுத்தப் படவில்லை.

இது சினிமா என்று சாதாரணமாக விட்டு விட்டால் இதை எல்லாம் பதிவு செய்ய அவசியமில்லை. ஆனால் சர்ச்சையும் விவாதமும்  செய்ய வேண்டிய படமாய் இருக்கிறது.

 ஆரம்பத்தில் செயற்கையாய் காட்சிகள் ரெடிமேடாய்  ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தாலும் போகப் போக இன்வால்வ் ஆக டெப்த் ஆக செல்கிறது. ஆனால் அந்ந கிட்டு பாத்திரம் சாகடிக்கப்பட்டிருக்காமலே இன்னும் சில நாட்கள் கழித்து திட்டமிட்டபடி வெற்றி அடைந்தவுடன் வெளித் தோன்றி இருக்கலாம். அல்லது காலம் கழிந்த பின்னே வெற்றி நாயகனாய் தோன்றி இருக்கலாம். எப்படியும் கலெக்டர் ஆவது தடையாக முடியாத கனவாகவே போய்விட்டது சின்ராசுக்கு.
Image result for maaveeran kittu


மொத்தத்தில் சாதிய வேறுபாடுகள் உள்ள வரையில் இது போன்ற படங்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கும் அதை நாமும் பார்த்து கொண்டுதான் இருக்க வேண்டும். சாதிய பிரச்சனை தனி மனித மேம்பாட்டுடன் சமுதாயப் பிரச்சனியாகவும் பின்னிக் கிடப்பதால்.

இளமியே பரவாயில்லை இறந்தும் வாழ்கிறார்கள், இருந்தவர் கதையை நாயகர் நாயகி பாவத்துடன் கை கால்கள் இழந்தும் இறப்பில் கலந்து ஒன்றாக இருந்து காதலுக்கு காதலருக்கு நன்மை செய்கிறார்கள் கடவுளாக இருந்து மதுரை வீரன் சாமி போல...ஜல்லிக் கட்டு நம்பிக்கைத் துரோகம் என..எங்கும் சூழ்ச்சி நம்பிக்கைத் துரோகம் என சினிமா நம்மை எல்லாம் நமது எண்ணத்தை எல்லாம் புகுந்து கெடுத்து விடும் போல நிறைய சினிமக்கள்



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு: ஆனால் இது போன்ற சினிமாக்கள் சாதிய உணர்வைத் தூண்ட பயன்படுகின்றதா சாதிய உணர்வை மக்களிடையே இருந்து அகற்ற பயன்படுமா என்ற இருப்பக்க கேள்விகள் எழாமல் இல்லை.





Friday, December 2, 2016

சைத்தான் (கி பச்சா):விமர்சனம்: கவிஞர் தணிகை

சைத்தான் (கி பச்சா):விமர்சனம்: கவிஞர் தணிகை


Image result for Saithan

 ஹேலுசினேசன்,டெம்பரரி இல்லியூசன் என வார்த்தைகளில் ஆரம்பிக்கும் ஒரு காம்ப்ளிகேட்டட் ஆன குழப்பமான‌ சிக்கலான கதை. இந்தக் காலத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு சினிமா எல்லாம் பார்க்க நமது சினிமா இரசிகர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இசையும் அவரே. நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்களில் இருந்த அளவு தெளிவான கதையைத் தேர்வு செய்யாதது இந்தப் படத்தில் ஒரு குறைபாடு.

டைட்டில் டிசைன் பிச்சைக்காரன் என்பதை நினைவு படுத்துவது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல டிசைன். வித்தியாசமான கதைக்கேற்ற வித்தியாசமான கதை தயாரிப்பு.

குரல் கேட்கிறது, மண்டையில் இருந்து ஒரு குரல் கேட்கிறது என  மாடி ஏறி கைப்பிடிச் சுவரிலிருந்து எல்லாம் விழுந்து சாகத் தயாராக இருக்கும் ஒரு  கணினி வல்லுனர் குழப்புகிறார். குழம்புகிறார். கணினியிலிருந்து ஒரு கை வந்து அடித்து வீழ்த்துவதாக, குரல் கேட்டு பொறுக்க முடியாமல் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் நண்பர் சாக காரணமாகிறார்.

இப்படி எல்லாம் ஆரம்பிக்கும் தினேஷ் கதை கிட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி நெடு நாளைக்கும் பின் ஒரு மனோதத்துவ மருத்துவராக வந்து தினேஷுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறார்.சிகிச்சை அளிக்கிறார். நீண்ட காலம் கழித்து ஒய்.ஜி. மகேந்த்ரா வேறு அவரின் பங்குக்கு கம்பெனி பாஸ் ஆகவும், இவரின் குடும்ப நண்பராகவும் இருந்து உதவுகிறார். இவற்றை தெளிவாக சொல்லலாம். அதற்கு மேல் ஒரு மனைவியாக நடித்து ஒரு மருந்தை உடலில் செலுத்த அது பழைய கால நினைவுக்கும் ஏன் போன ஜென்ம நினைவுக்கும் இட்டுச் செல்கிறதாம்.

அதில் தமிழ் தற்போதைய வழக்கப்படி ஆவி, போன ஜெனமக் கதை,சர்மா, ஜெயலட்சுமி, நடராஜன் கள்ளக் காதல் என...

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு.

என்ற குறளையும் இன்னொரு குறளையும் கருத்தாக வைக்கிறார். கதைதான் எங்கெங்கோ சுழல்கிறது. எவருமே விரும்பி பார்க்க முடியாமல். ஒரு வகையில் பார்த்தால் பார்ப்பாரை நோகடிக்கிறது. இரண்டு மணிக்கும் மேல் ஓடி சலிப்பு ஏற்படுத்துகிறது. இவரும் பாலா போல் போய்விடலாம் எதிர்காலத்தில்.


Related image
இதெல்லாம் சைத்தான் கடைசியில் வலுவாக இவருள் இருந்து தினேஷை வெளிக் கிளப்பி ஷர்மாவாக மாறி நாட்டுக்கும் அனைவர்க்கும் நல்லது செய்வாராக மாறுகிறார்.

ஜெயலட்சுமிக் கிழவி கடைசியில் மன்னிப்பு கேட்டு இறக்கிறார். கால் தடுக்கி தவறி விழுகையில் கையில் இருந்த குழந்தை கிணற்றில் விழ அதை இவர் வேண்டுமென்றே தகாத உறவால் பிறந்த குழந்தை என கொன்று விட்டார் என வெகுண்டு எழும் ஜெயலட்சுமி தமது கள்ளக் காதலன் நடராஜனுடன் சேர்ந்து ஷர்மாவைக் கொல்வதாகவும் அவர் வளர்த்த வளர்ப்பு மகன் கோபாலையும் கொன்றுவிடுவதாகவும் கதை.

இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கதை சுற்றி சுழன்று அனைவரையும் கலங்கடித்து செல்கிறது சாதாரண ஒரு கள்ளக் காதலை அடிப்படையாக வைத்து ஆவி,போன ஜென்மம், தற்காலம், மனோவசியம், அறிவியல் ஆய்வு, உடலின் உறுப்பு கடத்தல் கொள்ளை விற்பனை, வேசித்தனம் இப்படியாக இதில் சொல்லப் பட்டிருப்பதை எல்லாம் பார்த்து பயந்தால், குலம் , கோத்திரம், அப்பா அம்மா பெற்றோர் பார்த்து மனைவியை கணவரை வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் ,முகநூல் வாட்ஸ் அப் எல்லாம் இப்படி தாறுமாறாக இருந்து விடலாம் என்பதும் கதை சொல்கிறது.


இந்தக் கதை தற்கால மருத்துவ ஆராய்ச்சி, உடல் உறுப்பு கொள்ள என்றெல்லாம் பயணிக்கிறது.

மொத்தத்தில் பார்க்க தெம்பு வேண்டும். சுஜாதா கதை வேறு பாதி என்றும் அதன் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் ஆனால் பார்ப்போரையும் கஷ்டப் படுத்தி இருப்பது இதன் மைனஸ் பாயின்ட். நல்ல முயற்சி ஆனால் ஏன் இவ்வாறாக பார்க்க முடியாமல் இருக்கிறது கதை சொன்ன திருக்கல்களின் காரணமா, இவ்வளவு கனமான அழுத்தத்தை எல்லாம் தாங்கி படம் பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பதே எம் கருத்து. எனவே இதற்கு 35 மதிப்பெண்கள் நூற்றுக்கு என்றே சொல்ல முடிகிறது. கதையை எப்படியோ கடைசியில் சமுதாய முன்னேற்றம், அறிவியல் கதைப்படி நேரக்கூடிய மருத்துவ சுரண்டலை ஒழிப்பது என வந்து சேர்ந்து கொண்டார்கள்.

தியானத்தில் ஒரு கட்டத்தில் , இது போன்ற குரல் கேட்கும்.என்றும் இந்த அக்கப் போர் பொறுக்க முடியாமல் சுவரை செருப்பால் அடித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பற்றி எமது மறைந்த நண்பர் ரகுபதி தற்போது இருக்கும் ஜோஸ்யர் அய்யப்ப பக்தர் ஒருவரான வேலுவும் அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொண்டு எனது தியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுண்டு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.