Thursday, November 17, 2016

நவம்பர் 18 வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் மட்டுமல்ல எம் தந்தை சுப்ரமணியம் தாய் தெய்வானை நினைவு நாளும் கூட: கவிஞர் தணிகை

நவம்பர் 18 வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் மட்டுமல்ல எம் தந்தை சுப்ரமணியம் தாய் தெய்வானை நினைவு நாளும் கூட: கவிஞர் தணிகை





செக்கிழுத்த செம்மல், கப்பல் கை விட்ட பின்னும் இல்லை இல்லை இந்திய மக்கள் கை விட்ட பின்னும் வக்கீல் தொழில் புரிய விடாமல் எவ்வளவோ சூழ்ச்சிகள், அவரின் வாரிசுகள் மிகவும் கீழ் தட்டில் வாழ்ந்தது வரலாறு,சூரியன் எமைக் கேட்டுத்தான் எழும் விழும் என்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்த மாமேதை மாபெரும் துணிச்சல் பேர்வழி. எம் தந்தை 4 விசைத்தறியின் பிரேக் தள்ளி இரவு பகல் சிப்ட் பாராமல் உழைத்து எமது குடும்பத்தில் அப்போது இருந்த 10 பேரின் வாயும் வயிறும் நிறையக் காரணமாயிருந்தார். இருவருக்குமே சொல்லிக் கொள்ள ஏதும் கிடைக்கவில்லை. கடமை முடிந்ததும் காடு சென்றேகினார்கள். அவர்கள் இருவரையும் வணங்குகிறேன் உடன் என் தாய் படிக்காத தெய்வானை பெரும் குடும்பத்தை நிர்வகித்து அனைவரையும் மேலுக்கு கொணர்ந்த தமிழன்னை அவருடனும் சேர்த்து.

Image result for very huge trees

கவிதை ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. உழைத்து விட்ட வந்த உடல் அயற்சி.என்றாலும் நாளையை நான் நினைத்துப் பார்க்கிறேன். பிரார்த்தனை செய்வதன்றி பெரிதாக வேறு ஏதும் செய்ய இல்லை. வழக்கப்படி இப்போதும் சொல்கிறேன், எனது தந்தையின் உடல் வீடு வந்து சேர ஒரு வாடகைக் காருக்கு பயன்பட்ட எனது அப்போதைய சேமிப்பு வெறும் 750 ரூபாய் மட்டுமே நான் அவருக்காக செலவு செய்தது இல்லை இல்லை அவர் உடலை வீட்டுக்கு கொண்டு வர நான் செலவு செய்தது.

காலம் தான் எவ்வளவு விரைவாக போய்விட்டது. நான் பிறக்கும்போது அவர் வயது தோராயமாக 40 .1986ல் அவரது 65 வயதுடைய‌ மறைவு எனக்கு அவ்வளவுதான் என்ற பேருணர்வைக் கொடுத்தது. அதற்கும் மேல் என்ன செய்ய வேண்டும் அவரது மறைவுக்குப் பின் என்ற உணர்வு பொறுப்பை, கடமையை எப்பாடுபட்டாவது அவரது துணையான எனது தாயை அவரது , எனது தந்தையின் கோணத்திலிருந்து காத்து செல்ல வேண்டும் கண்ணும் கருத்துமாக போற்ற வேண்டும் என.

Related image

அதை நிறைவேற்றி விட்டதாகவே நம்புகிறேன். தந்தை இறந்து 30 ஆண்டுகள் ஓடி விட்டன. தாய் இறந்து 10 ஆண்டுகள்.ஆம் அவர் மறைவு 2006.

எனது தாயுடன் தாம் எத்தனை மன்றாடல்கள், அவரை அவ்வளவு சாதாரணமாக எவருமே நிறைவடைய வைத்து விட முடியாது. அவ்வளவு பேராசை உடையவர் என்றா பொருளில்லை இதற்கு தாம் என்ன எண்ணுகிறாரோ அதன் வழி செல்ல வேண்டும், அதன் வழி மட்டுமே செல்ல வேண்டும் என்ற குணாம்சம் நிறைந்தவர்.



அவர்களின் இருவரின் கலவை தான் நாங்கள் அனைவரும். சமுதாயத்தின் நல்ல மரங்களாக கிளைவிட்டிருக்கிறோம். வேர் ஊன்றி இருக்கிறோம்.அனைவருக்கும் பயன்படும் வண்ணம் .பூமிக்கு பாரமாக அல்ல புனித பூமியின் புதல்வராகவே. அந்தளவுக்கு படிக்காத பாமரத் தனம் உடைய பெற்றோர், இந்த அளவுக்கு எம்மை உருவாக்கியமைக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டாமா? எப்படி நன்றி சொன்னாலும், எத்தனை நன்றி சொன்னாலும் அதற்கெல்லாம் ஈடாகுமா?

தந்தையின் மறைவுக்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகள் எம் தாயுடன் இருந்த வாய்ப்பு எமக்கு. இதை பாக்யம் என்று சொல்லமா எனத் தெரியவில்லை. ஏன் எனில் பெரும் குடும்பத்தின் அத்தனை பூசல்களும் அதில் அடக்கம் என்பதை சொல்லாமல் விட முடியாது. எனக்கு மூடி மறைத்து பேச எப்போதுமே பிடிக்காது. பேசாமல் இருந்து விடுவேன். பேச ஆரம்பத்தால் அத்தனையும் உண்மை வரவேண்டும், வெளிப்படையாக வேண்டும்...

Related image

ஆனால் இதெல்லாம் மனித குலத்திற்கு சற்று அல்ல பெரிதும் இடைஞ்சலானவை அது பிறர்க்கு இடைஞ்சலாகிறதோ என்னவோ எமது வளர்ச்சிக்கு பெரிதும் முட்டுக்கட்டைகளே.

அந்த அந்த காலத்தின் உண்மை உணர முடியாமல் போய்விடுவதுதான் வாழ்க்கை என நான் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. இதே வீட்டில் சற்று மாறுபட்டு காட்சி அளிக்கும் இதே வீட்டில் பிறந்தவன் இன்றும் இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இதே சூழலில் வளர்ந்தவன். எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட வாய்ப்பு கிடைக்கும். எனது வீட்டின் கூரை ஓடுகள் மேல் விழாத குறை ஒன்றுதான் மற்றபடி எதற்கும் குறை சொல்ல முடியாது.

இங்கேதான் சிறுவர்களாக சண்டையிட்டு,விளையாடி, கோடை,குளிர் என பருவ காலம் மாறி மாறிச் செல்ல, பருவம் அடைந்த பெண்கள், திருமணமாகிய பெண்கள், பிள்ளைபேறு பெற்ற பெண்கள், பெயரன் பெயர்த்தி எடுத்த பெண்கள் இப்படி சென்று கொண்டே இருக்கிறது...
Related image


எத்தனை மர வகை, எத்தனை செடி வகை, எத்தனை மனித வகை என எத்தனை தொடர்புகள்..எத்தனை பாம்புகள், எத்தனை தேள்கள், எத்தனை பூச்சி இனங்கள், எத்தனை பறவை இனங்கள் எல்லாவற்றுடன் வளர்ந்தோம். காடு, மாடு, பதநீர், கடலைக் கொடி, கடலைச் செடி,கொட்ட முத்து எனும் ஆமணக்கு,அரப்புத் தூள் கொடுக்கும் அரப்பு மரம், சீத்தாப் பழம், எத்தனை விளையாட்டு எல்லாம் எப்படி சொல்ல முடியும்? ஆனால் சொல்ல வேண்டும்

எந்தையும் தாயும் மகிழ்ந்தது இந்நாடே என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப கடன் , பொருளாதாரப் பிரச்சனைகள் எத்தனை வந்துற்ற போதும் வயிறுகள் முழுதாக நிறையாத காலக்கட்டஙக்ள் எப்படி இருந்த போதும்..வளர்ச்சி இருந்து கொண்டே இருந்து...



சிட்டுக் குருவியை வாயுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும் பச்சைப் பாம்புகள் தலை கீழாய் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? எமது சிறுவயதில் அந்த வாய்ப்பெல்லாம் எமது வீட்டின் புழக்கடைத் தோட்டத்தில் எமது மரத்திலேயே எமக்கு கிடைத்தது குருவி உயிர் போகும் மரண அவஸ்தையுடன் கீச் கீச் எனக் கத்தியபடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் பாம்பின் வாயுள்...அதற்கு இரை வேண்டுமே....அதுதான் நிதர்சனமான வாழ்வின் தடம்.

எல்லாம் மனிதம் என்று சொன்னாலுமே மிருக குணம் இல்லா மனிதமே இல்லை. குறைந்தபட்சம் அப்படி பிறந்து இருக்க வாய்ப்பில்லை என்று கூட சொல்லி விடலாம்.  அதிலிருந்து மேல் எழும் ஆன்மாவின் பயணம்தான் இந்த வாழ்க்கை.
Image result for very huge trees


நான் உங்களை எங்கோ இட்டுச் செல்கிறேன் அது எம் நோக்கமல்ல. குமுதம் வாங்கி படித்த அப்பா,(இவர் மில் தொழிலாளியாக பியர்ட்செல் நிற்வனத்தில் இருந்து தொழில் முறையில் கல்வி கற்றவர் சுமார் 5 ஆம் வகுப்பு வரை படித்த  அளவில் சான்றிதழ் அந்த தொழிலாளர்க்கு கல்வி அளித்த நிறுவனமே சான்றிதழும் அளித்திருந்ததை பல்லாண்டுகள் எமது சுவரில் சட்டமிட்டு பிரேம் செய்து மாட்டியிருந்தோம். அது இப்போது கூட எங்கோ இருக்கிறது. அது எங்கிருக்கிறது எனத் தேடி எடுக்கத்தான் இப்போது நேரமில்லை.

கோபத்தில் உடல் எல்லாம் கிடு கிடுவென நடுங்கும் அப்பா, இரத்த அழுத்தம், மாரடைப்பால் இருதய அடைப்பால் இறந்த அப்பா, நாங்கள் அண்ணன் என்று அழைத்த அப்பா, அதிகமாக கோபம் வந்தால் எமை அடித்த அப்பா, அன்பாக செல்லமாக பால் டீ வாங்கிக் கொடுத்த அப்பா,தொண்டைப்புண் வாய்ப்புண் நீக்க விட்டா கெக்ஸ்ட், பிலாஸம் என்ற ஒரு டானிக்கை, தூள் மருந்துப் பொடியை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்து வாங்கிக் கொடுத்த அப்பா, மறுபடியும் அதை வாங்கிக் கொடுத்து தொடர முடியாமல் பொருளாதாரம் இடம் கொடுக்காதப்பா,நான் ஆண்பிள்ளைகளில் கடைசி.

கடைசியில் எமது இப்போது உங்களுக்கு இந்த செய்திகளை பரிமாறும் அதே அறையில் கிடத்தி வைக்கப் பட்ட உடலாகியிருந்த அப்பா,24 வயதில் 4 வயதிலிருந்து நினைவு என எடுத்துக் கொண்டாலும் நான் அவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். தாயுடன் சுமார் 40 ஆண்டுகள் அனுபவத்துடன் வாழ்ந்திருக்கிறேன்.

நாமெல்லாம் யார், விவேகானந்தர் சொல்வது போல ஒரு அலையின் தொடர், மறு அலையாக, நமது மக்கள் சொல்ல வேண்டும் இதே போல...

ஆமாம் நீ பெரிய காந்திதான் என ஒரு முறை அவர் எனைச் சொன்னாலும், எனது வளர்ச்சியில் பொறுப்பான மருத்துவர்கள், எனது பதிவேட்டில், எனது வேலை மகாத்மா காந்தி, மதர் தெரஸா வேலை போன்றிருக்கிறது என ஆதாரத்துடன் பறை சாற்றி சென்றிருக்கிறார்கள்...ஆக தந்தை சொல் மிக்க மந்திரமில்லை வெறுப்பில் சொன்னாலும் அதில் பலிக்கும் முகாந்திரங்கள் அமைந்து விடுகின்றன.

அதிலும் திருமணம் என்ற கட்டத்தில் ஒவ்வொரு தந்தையின் பங்கும் தலையானது உச்சக் கட்டமானது. ஆனால்  தாய் தவிக்கிறார் மகனானானல் எங்கே எமை விட்டு விடுவானோ என, ..

எம் வீட்டு பூவரசு டைனிங் டேபிள் கால்களாகி இன்னும் பேர் சொல்கிறது.கொய்யா மரங்கள் இல்லை . அடையாளமாக நரை விழுந்த, முடிந்து போன எச்சமாக அத்தனைக்கும் சாட்சியாக ஒரு மரம் மட்டும் இன்றோ நாளையோ எனக் கதை முடிய கரணமாயிருக்கிறது. ஆனால் எத்தனை கதைகளைப் பார்த்த சாட்சியாய் இருக்கிறது.

மலையாக மண்ணாக கோயிலாக, மரமாக ஆகியிருக்க வேண்டும் நமது ஆயுள் அதிகமாக...
வரலாறுகள் மாறுகின்றன. மனிதம் சுருக்கமாக சேதி சொல்லி சென்று விட...நிறைய பேர் எதுவும் செய்யாமல் சொல்லாமல் பூமிக்கு பாரமாக இருந்தே சென்று விட...அப்படிப்பட்ட பிறப்பு இல்லை நான் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளது. நாட்டுக்கும் வீட்டுக்கும் எதை எதையோ எத்தனையோ பகிர்ந்துண்டு வாழ்ந்து சென்றிருப்பது. தியாகத்தின் திருவுருவமாய்.. ஒரு மனிதன் தனக்கு கிடைத்த கூட்டுறவு சங்கத்தின் வழியே கிடைத்த ஒரு சிறு பாக்கெட்ட, அதில் சில இனிப்புகள் மட்டுமே இருக்கும் கொஞ்சம் மிக்சர் இருக்கலாம் அதைக் கூட தம் குடும்பத்தாரிடம், பிள்ளைகளிடம் பகிர்ந்தளிக்க வேட்டியில் வைத்து எடுத்து வந்து வளர்ந்த கதை எங்கள் குடும்பக் கதை. ஆனால் அது இப்போது இருக்கும் மது அடிமைகள் கதையை என்றும் பிரதிபலிக்காது.

Related image


சுருக்கமாக் சொல்ல வேண்டும்: அவர்கள் சிகரத்தில் எமை ஏற்றி வைக்க ஆழ ஆழ புதைந்து போனார்கள்...அவர்களுக்கு என்றும் எமது தலை தாழ்ந்த வணக்கம். அஞ்சலி. தாய் மண்ணே வணக்கம். என்பது போல அவர்கள் வாழ்ந்த உண்டு உறங்கி, நடந்து உயிர்த்து, மரித்த அதே மண்ணில் வாழ்ந்து வருகிறேன் என்ற ஒரு பிடிப்புடன் என்றும் எம் இணக்கம். இந்த வணக்கம். பதிவு. இசைவு.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Wednesday, November 16, 2016

மோடி மஸ்தான் பை.Black Magician bag(back)

non removable ink touches to slaves
Democracy lies and manipulation of rights

Image result for 500 1000 2000 notes and black magics

500,1000 - 2


Image result for 500 1000 2000 notes and black magics

அழியாத மை அடிமை நாய்களுக்கு
ஜனநாயகப் பொய் உரிமை பேய்களுக்கு
Image result for 500 1000 2000 notes and black magics

ஐநூறு ஆயிரம்- 2.

Sunday, November 13, 2016

நதி நீர் இணைப்புக்கு இந்தப் பணத்தை விரயமாக்காமல் பயன்படுத்த அரசு திட்டமிடலாமே? :‍ கவிஞர் தணிகை

நதி நீர் இணைப்புக்கு இந்தப் பணத்தை விரயமாக்காமல் பயன்படுத்த அரசு திட்டமிடலாமே? :‍ கவிஞர் தணிகை

Image result for Indian money 500 1000 burned out

தொப்பூர் கணவாய்ப் பள்ளத்தாக்கில் 12.5 கோடி பணம் தூக்கி விசிறப்பட்டது, உ.பி கணக்கிலடங்கா பணம் எரிக்கப்பட்டது, காடு விற்ற பணத்தை 45 இலட்சத்தை வைத்துக் கொண்டிருந்த பெண் தற்கொலை செய்தார் மாற்ற முடியாதோ செல்லாது என உறவுகள் எல்லாம் சாட‌, ஏ.டி.எம் மில் பணம் எடுக்க க்யூ வரிசையில் நின்ற 2 பேர் சாவு, இரண்டாயிரம் புது நோட்டை (ரூ.2000 )செலுத்த முடியாமல் கூலித் தொழிலாளி அதை சாலையில் கிழித்து எறிந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் சொல்வது போல ஏற்கெனவே பாரதிய ஜனதாக் கட்சியினர்க்கு ஏற்கெனவே இந்த நிகழ்வு தெரிந்ததால் கடந்த செப்டம்பர் முதல் வங்கிகளில் இருப்பு உயர்ந்தது, உதாரணமாக மேற்கு வங்கம் கொல்கொத்தாவில் அந்தக் கட்சிப்பணம் வங்கியில் போடப்பட்டுள்ளதாகவும் அந்த நாள் மட்டும் அந்த வங்கி இரவு 8 மணி வரை செயல்பட்டதாகவும் ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.

எங்கு பார்த்தாலும் ஒரே களேபரமாக காணப்படும் சூழல், அஞ்சலகத்தில் தபால் வில்லைகள் கூட வாங்க முடியவில்லை தபால் அனுப்ப(போஸ்டல் ஸ்டாம்ப்ஸ்) ஏகக் கெடுபிடி. காவல்துறையும் வங்கித்துறையும் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படுகின்றன என்ற தோற்றம்.

ஆனால் ரயில்வே நிலையம், மருத்துவமனை, அரைகுறையாக பெட்ரோல் பங்குகள், எல்லாம் வாங்கி வருகின்றன.மேலும் இந்த பழைய நோட்டுகளை த.நா.மி.வாரியம் மின்சார கட்டணத்துக்காகவும்‍‍ பில்லுக்காகவும், பி.எஸ்.என்.எல் பில்லுக்காகவும் வாங்குவதாக அறிவித்து வாங்குகின்றன.ஊராட்சி ஒன்றியங்கள் குடிநீர் கட்டணத்துக்காக இந்த பழைய நோட்டுகளை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Image result for merger of Indian rivers

இப்படி எல்லாம் அரை குறையாக இருப்பதற்கு மாறாக எல்லா அரசு அலுவலகங்களுமே பெற்றுக் கொள்ளலாம் என்று விதி சட்டம் இருப்பின் பொதுமக்கள் அவதி பெரிதும் தீர்ந்திருக்கும் வியாபாரிகள் தவிக்கிறார்கள். எங்கும் வியாபாரம் இல்லை. கறிக்கடைக்காரர் வெட்டிய கறி வீணாகக் கூடாதே என கடனுக்கு கொடுத்து விடுகிறார். உணவகம், ஒன்றில் செய்து வைத்த பொருட்கள் வீணாகிடக் கூடாதே என இலவசமாகவும் கொடுப்பதை கொடுங்கள் எனப் பயணிகளுக்கு வாரி வழங்குவதாக புண்ணியம் கட்டிக் கொள்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Image result for merger of Indian rivers

200 சதம் வரி, அதையும் மீறி வரி தண்டனை என்றெல்லாம் பயமுறுத்துவதை விட இந்தப் பணம் செல்லாதுதான் ஆனால் நதி நிர் இணைப்புக்கு பயன்படுத்தப் படும் என்றும் வரிவிலக்கு உண்டென்றும் அப்படி வழங்குவோர்க்கு அவரவர் அளவுக்கேற்ப பரிசு, விருது , கௌரவம் அளிக்கப்படும் என்றும் அந்த திட்டம் நிறைவேற்றும்போது அவர்கள் பெயர்கள் பொறிக்கப்படும் என்றும் சொல்லி எல்லாப் பணத்தையும் அரசு திரட்டி இருக்க வேண்டும், நதி நீர் இணைப்புக்கு பயன்படுத்த வேண்டும், அந்த அரிய பெரிய வாய்ப்பை இந்த மோடி அரசு நழுவ விட்டு விட்டு கோட்டை விட்டு விட்டு ஏதோதோ சொல்லி பயமுறுத்தி பொதுமக்களுக்கு அல்லல் செய்து வருகிறது.
Image result for merger of Indian rivers


காசு வைத்திருக்கும் மகாப் பிரபுக்களும் இந்த வாய்ப்பை வரி கட்டி பயன்படுத்தி வெள்ளையாக்காமல் எரித்தும், கரைத்தும், விரயம் செய்து இந்தியாவின் செல்வ வளத்தை கேலிக் கூத்தாக்கி வருகிறார்கள்

பெரும் மோசடியாக, எண்ணற்ற 130 கோடி மக்கள் தொகைக்கும் மேலான உள்ள நாட்டில் சரியாக திட்டமிடாமல் பொதுமக்களின் வாழ்க்கையை தமது வாழ்வின் ஆதாரத்துக்காக தாம் ஈட்டிய  தமது செல்வத்தையே பெற விடாமல் மக்களாட்சி என்ற பேரில் முதலாளித்துவ ஆட்சியாக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

Image result for merger of Indian rivers

Image result for merger of Indian rivers



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அச்சம் என்பது மடமையடா: கவிஞர் தணிகை

Image result for acham enbathu madamaiyada
அருமையான பாரதி வரிகள் : அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே...எனச் சொல்லும் கண்ணதாசன் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா..வரிகள் மன்னாதி மன்னனில் எம்.ஜி.ஆர் பாடலாக வரும்...ஆனால் இந்த அச்சம் என்பது மடமையடா :சிம்புவுடன் வாசு தேவ் மேனன் ஆக்கத்தில்.ஆனால் சிம்புவுக்கு கடைசியில் ஐ.ஏ.எஸ் வேடம், கமலுக்கும், சூரியாவுக்கும் பொருத்தமாகிய அளவு கதையில் ஊட்டம் இல்லாமல்...


அச்சம் என்பது மடமையடா: கவிஞர் தணிகை

அருமையான பாரதி வரிகள் : அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே...எனச் சொல்லும் கண்ணதாசன் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா..வரிகள் மன்னாதி மன்னனில் எம்.ஜி.ஆர் பாடலாக வரும்...ஆனால் இந்த அச்சம் என்பது மடமையடா :சிம்புவுடன் வாசு தேவ் மேனன் ஆக்கத்தில்.ஆனால் சிம்புவுக்கு கடைசியில் ஐ.ஏ.எஸ் வேடம், கமலுக்கும், சூரியாவுக்கும் பொருத்தமாகிய அளவு கதையில் ஊட்டம் இல்லாமல்...

மஞ்சிமா மோகன் என்னும் புது முகமும் சிலம்பரசன் என்கிற சிம்புவும் கொஞ்சம் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தைப் போல காதலில் பறக்கிறார்கள். சில பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இராசாளி, தள்ளிப் போகாதே போன்றவை. மேலும் இடம் தேர்வு எல்லாம் நன்றாகவே இருக்கின்றன்.

கதை சிறிது நேரத்தில் த்ரில்லர் இரகமாக மாறுகிறது என்ன ஏது என்று தெரியாமலே அட்டாக் செய்யப்பட்டு கொலை முயற்சி நடக்கிறது. கடைசியில் மஞ்சிமா மோகனின் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் என்றும் அவரது எதிரிகள் எவ்வளவோ தடுக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சிக்குப் பின்னும் அவர்களைக் கொன்று விடுகிறார்கள், சிம்புவின் நண்பர் சிம்பு மற்றும் மன்ஞ்சிமாவையும் கொன்றுவிடத் துடிக்கிறார்கள்.கொன்று விட்டார்கள் என நினைக்கும்போது மஞ்சிமா மறுபடியும் உயிரோடு வருகிறார்.

கடைசியில் சிம்பு கதை சொல்கிறார் இரண்டரை வருடம் தலைமறைவாக இருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, கிடைத்த ஐ.ஏ. எஸ் தகுதியையும் வேண்டாம் எனச் சொல்லி விட்டு ஏற்கெனவே பழி வாங்கிய எதிரிகளின் எச்ச மிச்சத்தை கொன்று தீர்க்க அதே மஹாராஷ்ட்ராவுக்கு போஸ்டிங் வந்து விட்டதாக.

மற்றபடி சொல்ல பெரிதாக ஏதுமில்லை, எல்லாமே ஒரே துப்பாக்கி சண்டை, கைகலப்பு, கொஞ்சம் லவ் , கொஞ்சம் குடும்பம்.ஏனோ பின்னால் கதையில் அழுத்தம் வலு குறைவாகி விடுவதால் முதலில் பார்க்க இருக்கும் நமது ஆர்வம் நீர்த்துப் போய் விடுகிறது.

ரஜினிகாந்த் என்ற தமது பேரை வைத்துக் கொண்டு அதான் தமிழகத்துக்கே நமைப் பற்றி தெரியுமே என தற்பெருமை பேசுகிறார் சிம்பு. கொஞ்சம் கௌதம் வாசுதேவ மேனம் படமாகவும் கொஞ்சம் சிம்புவின் படமாகவும் பாலும் டிகாசனுமாக கலந்ததால் சிம்பு இரசிகர்களுக்கு படம் பிடிக்கலாம். நமக்கும் பாதிவரை நன்றாக இருப்பது போன்றும் குறிப்பிட்ட நேரத்துக்கும் பின் ஏற்றுக்    கொள்ள முடியாமல் போகிறது.

அச்சம் என்பது மடமை என திரும்பி, திருப்பி எதிரிகளைத் தாக்குவேன் என காதலை விட்டு விட்டு , காதலியை எங்கு செல்ல வேஎண்டுமோ அங்கே இறக்கி விட்டு விடுவதாக சொல்லி பைக்க திருப்பி கதையை திருப்புகிறார். காதலி இவருடனே வருவதாகவே சொல்கிறார்.

கதை, பின்னால் சொன்ன விதம் எல்லாம் கொஞ்சம் விரைவாக அடிப்படை இல்லாமல் இருப்பதால் இந்தப் படம் சிம்புவுக்கு எப்படியோ ஆனால் வாசுதேவ மேனனுக்கு சறுக்கல்தான். சட்டென்று மாறுது வானிலை என 2013ல் பேர் வைக்கப் பட்டு வெளிவந்திருக்க வேண்டிய படம், டீசர் 2014ல் ட்ரைய்லர் 2015ல் என  வெளியிடப்பட்டு எப்படியோ டிசம்பர் 11ல் இந்த ஆண்டு 2016ல் வெளியாகிவிட்டது.

நிறைய சிரமப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு நிறைவில்லை. இளைஞர்களுக்கு இதன் பாடல் பிடிக்கிறது. படம் முழுதாக பிடிக்க வாய்ப்பில்லை.
Image result for acham enbathu madamaiyada


நூற்றுக்கு முப்பத்தைந்து  கொடுக்கலாம். சிம்புவும் மஞ்சிமாவும் நன்றாகவே இருக்கிறார்கள். 3 வருடத்துக்கும் முன்பா தற்போதா எனத் தெரியவில்லை. நிறைய பேருக்கு காப்பி டீ எல்லாமே சூடாக இருந்தால் பிடிக்கும். இது ஆறிவிட்ட காப்பி, டீ எனைப் போன்றவர்க்கு அதிகம் சூடாகவும் அதிகம் கூலாகவும் சாப்பிடக்கூடாது என்ற நிலை எனவே உங்களுக்காக பார்த்து வைத்து  சொல்லி விட்டேன் பார்ப்பது பார்க்காததும் உங்களின் முடிவு. பார்க்காததால் இழப்பு இருப்பதாகவும் இல்லை. பெரும் சுக இழப்பு ஏதுமில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Thursday, November 10, 2016

பணக்கற்றைகளை எரிக்காதீர் நற்சேவைக்கு பயன்படுத்துவோர்க்கு வரி விலக்கு...கவிஞர் தணிகை

பணக்கற்றைகளை எரிக்காதீர் நற்சேவைக்கு பயன்படுத்துவோர்க்கு வரி விலக்கு...கவிஞர் தணிகை

Image result for burning 1000 and 500 rupee notes lump


பணக்கற்றைகளை எரிக்காதீர் , விரயம் செய்யாதீர்,குழி நோண்டி புதைக்காதீர், ஆற்றில் வீசி எறியாதீர் நாட்டின் ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொண்டால் அதற்கு உங்கள் பேரை வைத்துக் கொள்ளலாம், உங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும், உங்கள் மேல் அரசின் பழி வாங்கும் நடவடிக்கை அல்லது தண்டனை பாயாது என மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பணக்கற்றைகளை பெரும் எண்ணிக்கையில் பெரும் மதிப்புடைய நோட்டுகளை எரிக்கும் செய்தி, படிப் படியாக சிறுகச் சிறுக வர ஆரம்பித்துள்ளன. இது 50 நாட்களுக்கும் பிறகு அல்லது ஜனவரி 2017 வாக்கில் அதிகமாகலாம்.

எப்படி இவர்களுக்கு எல்லாம் இப்படி மனசு வருகிறது? ஒன்று இல்லாதவர்க்கு கொடுத்து விட கொடுத்து உதவ வேண்டும் பயமாக இருந்தால் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என எண்ணினால் எவருக்கும் தெரியாமல் எங்காவது வைத்து விட்டால் கூட அது எப்படியாவது பிறருக்கு உதவியாக சென்று சேர்ந்து விடும். பிறரின் வயிற்றைக் கட்டி, பிறரின் வயிற்றில் அடித்து சம்பளம் கூட சரியாக கொடுக்காமல் இப்படி சேர்த்த பணப் பாவத்துக்கு புண்ணியம் தேடிக் கொள்ளலாமே...ஏன் இந்த குரூரம்? ஏன் இந்த வஞ்சனை? மனிதமே நீ மிருகத்தை விட கேவலாமாகவே இருக்கிறாயே?

இருக்கவே இருக்கிறது எத்தனயோ கோடிக் குடும்பங்கள் இந்தியாவில் மிகவும் ஏழ்மையாக அவர்களுக்கு நேரடியாக உதவ முடியாமல் போனாலும் வேறு நபர்கள் மூலம் தெரியாமல் முகம் அகம் அடையாளம் தெரியாமல் உதவலாமே...அல்லது அரசிடமே ஒப்படைத்து விடலாமே..அப்படி ஒப்படைத்து விட்டால் அவர்களை துன்புறுத்துவதும் கூடாது அல்லது நன்கொடை அளித்து விடலாம் என்றெல்லாம் ஊக்கப்படுத்தும் சட்ட திட்டங்கள் அறிவிக்கப் படவேண்டியது அவசியம்.

அதை எல்லாம் விடுத்து இப்படி எரிப்பது அவர்களுக்கும் நாட்டுக்கும் பெருத்த நஷ்டம்.

எனவே மத்திய அரசும் நிதித் துறையும் பிரதமர் மோடியும் ஒரு உத்தரவாதம் தர வேண்டும் எவர் மீதும் எந்த சட்டமும், பாயாது அவர்கள் அதை நல்ல நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் அதற்கு வரி விலக்கும், அவர்கள் பேரையும் அதற்கு வைத்துக் கொள்ளலாம் என இந்த நேரத்தில் அறிவித்து திட்டம் வகுத்துக் கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கும் தேச நேசர்களுக்கும் அவசியம் உண்டு.


Image result for burning 1000 and 500 rupee notes lump
எப்படியாவது இது போன்ற செயல்கள் நடைபெறாமல் காக்க வேண்டும் மாற்று ஏற்பாடு செய்து. அவர்களை 200 சதவீதம் அபராதம் மற்றும் வரி என்றெல்லாம் சொல்லி எதற்காக இந்த அதிரடித் திட்டத்தை நள்ளிரவு முதல் அறிவித்ததோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடக் கூடாது....

அதென்ன இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நள்ளிரவில், இப்படிப் பட்ட திட்டங்களின் அறிவிப்பும் நள்ளிரவில்...தூங்கும்போது தாக்குவது கோழைத்தனமல்லவா?


இது போன்ற பெரும் தொகையை எல்லாம் சேர்த்து நதி நீர் இணைப்பு,இயற்கை பேரிடர் போன்றவற்றிற்கு அரசு பயன்படுத்த வேண்டியதவசியம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, November 9, 2016

இந்தியப் பிரதமர் மோடிக்கும் அரசுக்கும் சில கேள்விகள் மட்டும்: கவிஞர் தணிகை

இந்தியப் பிரதமர் மோடிக்கும் அரசுக்கும் சில கேள்விகள் மட்டும்: கவிஞர் தணிகை.
Image result for 500 and 1000 modi

500, 1000 என்பதே பேச்சு ஆயிரம் தொலைஞ்சி போச்சி 2000 புழக்கத்துக்கு வரலாச்சு. 1. ஆயிரம் ரூபாயே வேண்டாம் என்னும்போது எதற்கு 2000 ரூபாய்?

2. 500 ரூபாய் புது நோட்டுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே?

3. இந்த அதிரடியால் சரி பாகிஸ்தான் கள்ள நோட்டை சரி செய்கிறோம், உள் நாட்டில் கறுப்புப் பணத்தை பிடிக்கிறோம் செயலற்றதாக்குகிறோம் என்பதெல்லாம் சரி,ஸ்விஸ் வங்கியில் பிடிப்பதாக சொல்லி ஆட்சிக் கட்டில் ஏறியதை மறந்து இந்த செயல் மூலம் நல்ல பேர் வாங்க முடியுமா?

4. கள்ள நோட்டையும், கறுப்புப் பணத்தையும் கருவறுக்க, வேரறுக்க இது ஒன்றுதான் வழியா? வேறு எதுவுமே இல்லையா? அப்படி பணவீக்கத்தை சரி செய்து பொருளாதாரம் சரி செய்ய வேண்டுமெனில் எதற்கு இந்த அதிக மதிப்புடைய நோட்டுகள்? 100 ரூபாய் வரை கூட போதாதா?

5. ரிலையன்ஸ் குருப்ஸ் வங்கிகளில் தேசத்திடம் வாங்கியுள்ள ஒன்னேகல்\/ ஒன்னேகால்
 இலட்சம் கோடியை எப்போது கட்டப் போகிறது?

Image result for 500 and 1000 modi

6. வாராக் கடனாக வங்கி வைத்திருக்கும் முழுத் தொகை எவ்வளவு அதை எப்போது எப்படி வங்கிகள் வசூல் செய்யப் போகின்றன?குறு முதலாளிகளை இதன் மூலம் அடக்குகிறீர் சரி.பெருமுதலாளிகள் கொடுத்த தேர்தல் நிதி மூலம் தானே நீங்கள் பதவிக்கு வந்ததே? அவர்களுக்கு எல்லாம் எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்?

7. விஜய் மல்லையா, லலித் மோடி, இன்னும் எங்கள் நினைவில் இல்லாத எத்தனையோ பெரு வியாதிகள் பெரு ஊழல்களில் இந்தியப் பணத்தை கொள்ளையடித்த கதையில் உங்கள் நடவடிக்கை ஏன் பலிக்கவே இல்லை? நடவடிக்கை எடுக்கவே இல்லையா?

8. இப்படி அதிரடியாக நள்ளிரவிலிருந்து 500 , 1000 ரூபாய் பழைய நோட்டை முடக்கும் உங்களால் வெறும் சனி ஞாயிறுகளில் மட்டும்தான் வங்கிகளை செயல் பட வைக்க முடியுமா? ஏன் வங்கிகளின் 24 மணி நேரச் சேவை வழங்கி வேலை இல்லா இளைஞர்க்கு வேலை கொடுத்து இந்தப் பண பரிமாற்றத்தை சுலபமாக பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் மாற்றம் செய்திருக்க முடியாதா? புது நோட்டுகளை நாட்டில் இறக்கி விட முடியாதா?

9. ஒரு அரசு என்றால் அது பெரும்பான்மையான எண்ணிக்கையாளர்களுக்கு  தொல்லை தருவதாக இருக்கக் கூடாது அது பெரும்பான்மையானவர்க்கு வாய்ப்பு தருவதாக இருக்க வேண்டும். சிறுபான்மையானவர்க்கு நன்மை செய்ய பெரும் அளவிலான  அதுவும் கீழ்த் தட்டு, நடுத்தர மக்களை பாதிப்பதை மட்டுமே இந்திய அரசு இதுவரை செய்திருக்கிறது அதிலிருந்து உங்களிடமும் மாற்றம் இல்லையே ஏன்?

10. எரி வாயு, ஆதார் கார்ட், பெட்ரோல் டீசல் விலை இப்படி அதிகம் எதை பொதுமக்கள் பயன்படுத்துகிறார்களோ அதை வைத்து அதில் கை வைத்து ஆட்சி நடத்துவதை தவிர  வேறென்ன பொருளாதர கொள்கையை உங்களது அரசுகள் இதுவரை சுதந்திரம் அடைந்ததிலிருந்து செய்திருக்கின்றன?

11. ரயிலுக்கு இனி தனி பட்ஜெட் இல்லை என்றீர், சரி எம்.பிக்களுக்கும் மந்திரிகளுக்கும், குடியரசு தலைவர் வரை சம்பளம் இரட்டிப்பு எனச் சொல்லியிருக்கிறீர்கள், மின் கட்டணம், எரிவாயு, குடிநீர், செல்பேசி, வெளி நாட்டுப் பயணம், சமையல்காரர்கள்,உதவியாளர்கள், கார்கள், ஓட்டுனர்கள்,பாதுகாவலர்கள்,எடுபிடிகள், தோட்டக்காரர்கள், வேலையாட்கள் இப்படி அனைவரையும் அரசுப் பணத்தில் அதாவது பொதுமக்கள் பணத்திலிருந்து பயன்படுத்திய பிறகும் எதற்கு உங்களுக்கு எல்லாம் சம்பளம்?

மக்கள் பணியாளர்களாக , அரசியலில் தேர்தலில் வெற்றி பெறும் நபர்களில் ஊராட்சி கவுன்சிலர்கள், உறுப்பினர்களிலிருந்து குடியரசுத் தலைவர் வரை எவருக்கும் அரசின் சம்பளம் இருக்கக் கூடாது என்ற ஆணை பிறப்பிக்க உங்களால் முடியுமா? அப்படி இருந்தால் எங்களைப் போன்றவர் பணி செய்ய சேவையாற்ற முன் வரத் தயாராய் இருக்கிறோம்...ஏற்றுக் கொள்வீரா? சோறு, நீர், எல்லாமே அரசிடம், பொதுமக்களின் பணத்திலிருந்து பெற்றுக் கொண்டு உங்களுக்கு எதற்கு இலட்சங்களில் சம்பளம் இலட்சியம் இல்லாமல் அதை முதலில் உங்களால் சரி செய்ய முடியுமா?

11. நதி நீர் இணைப்பு உங்களால் கையால் ஆகுமா?

12. 40 அடி மட்டுமே தண்ணீர் இருக்கும் மேட்டூர் அணையின் நீர் அளவு தமிழகத்துக்கு எதிர்காலத்தில் பல கேள்விகளை எழுப்பும்போது ஒரு பிரதமராக தமிழக மக்களுக்கு குடி நீருக்கும், பாசன நீருக்கும் என்ன செய்திருக்கிறீர்.

13.எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான கேள்வி: உங்களால் வந்து நேராக எங்க நோய்வாய்ப்பட்டிருக்கும் அம்மாவை அப்பல்ல்லோவில் நேராக பார்த்து உண்மை நிலவரத்தை நாட்டுக்கும் ஆவலுடன் காத்திருக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்த முடியுமா? உணர்த்த முடியுமா இப்படி இப்படியாக....எல்லாவற்றுக்கும் நன்றி வணக்கம்.

14. டொனல்ட் ட்ரம்ப் ட்ரம்ப் ஆக வெற்றி அடைந்து விட்டார் அங்கிருக்கும் இந்தியர்களை துரத்தாமல் தக்க வைத்த்து அமெரிக்க வாழ்க்கைக்கு அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க அவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்?
Image result for 500 and 1000 modi



இப்படி இன்னும் பல கேள்விகள் இந்த முக்கியமான தருணத்தில் கேட்க எமக்கு அவா....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Monday, November 7, 2016

ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் விமர்சனம் சுரேந்திரன் நிதர்சனம்: கவிஞர் தணிகை

ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் விமர்சனம் சுரேந்திரன் நிதர்சனம்: கவிஞர் தணிகை

சேலம் மாவட்ட மருத்துவ மனை அப்போது. அங்கு உள் நோயாளியாகச் சேர இலஞ்சம் கேட்ட அரசு மருத்துவரை செருப்பால் அடித்து விட்டு சிறை புகுந்த சசிபெருமாளை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செல்பேசி கோபுரம் ஏறி மதுவிலக்குக்காக உயிர் விட்ட சசிபெருமாளைப் பற்றி கூட விவரம் அறிந்த சிலருக்கே தெரிந்திருக்கிறது.

Image result for sasi perumal with me



உலகில் இதுவரை வெளிவந்த மிகச் சிறந்த 100 திரைப்படங்கள் என அமெரிக்கன் திரைப்பட நிறுவனம் பட்டியலிட்டதில் ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் என்னும் இத்திரைப்படத்திற்கு 8 வது இடம் கொடுத்துள்ளது ‍ 2007ல்.ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 12 பிரிவுகளில் 7 ஆஸ்கார் பரிசை அல்லது அகடமி அவார்டை பெற்றது. இது வரை தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மிகச் சிறந்த படம் என்று புகழப்படுகிறது.

Image result for schindler's list

1993 நவம்பர் , டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தைப் பற்றி இப்போது ஏன் எழுதுவானேன் எனக் கேட்கிறீர். காரணம் இருக்கிறது.
முதலில் சில காட்சிகள், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர் போலந்தில் உள்ள யூத இன மக்களை சுமார் 60 இலட்சம் பேரை கொன்று குவிக்கின்றனர் காரணமில்லாமலே பொட்டு பொட்டு என சுட்டுத் தள்ளுகின்றனர். பிணக்குவியலை பெரும் அகழிகள் வெட்டி அதில் எந்திரம் கொண்டு தள்ளி புதைக்கின்றனர்

சிறுவர், குழந்தை, முதியோர், பெண், ஆண் என வேறுபாடு இன்றி பின்னந்தலையில் அல்லது நெற்றியில் சுட்டு ஒரே குண்டில் சாய்க்கின்றனர் மண்டையிலிருந்து இரத்தம் பீறிட்டு குருதி மண் சிவக்கிறது...அதிலும் பீங்கான் குளியல் தொட்டியை ஒரு சிறுவன் சுத்தம் செய்கிறான், வழவழப்பாக  பள பளப்பாகவும் செய்ய முயல்கிறான். எஜமான கோத் வந்து பார்க்கிறான். சற்று சொர சொரப்பாக இருக்கிறது. சிறுவன் முறையிடுகிறான் இது போன்ற வேலைகள் செய்து பழக்கமில்லாத காரணத்தால் முழுதும் நிறைவடையவில்லை என.
Image result for schindler's list


அவனை அனுப்பி விடுகிறான். ஒருவேளை இவன் திருந்தி விட்டானோ ஆஸ்கார் ஷின்ட்லரைப் பார்த்து என நாம் ஐயப்படும்போது சிறுவன் ஒரு மைதானத்து வழியே சென்று கொன்டிருக்கும்போது குண்டுகள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் வெடிக்கிறது சும்மா பயமுறுத்துகிறான் என நாம் நினைக்கும்போது குண்டு அந்த சிறுவனை இட்சக் ஸ்டென்(பென் கிங்க்ஸ்லி) முன்னிலையில் துளைக்கிறது காரணம் இவன் வந்த பிறகு அந்த கொடுமைக்கார கோத் கண்ணாடியை தடவிப் பார்த்ததுதான். அந்த பளபளப்பை இவன் குளியல் தொட்டியில் உணராதது தான். இது பரவாயில்லை எந்தவித காரணமும் இன்றியே வேலை செய்து கொண்டிருப்போரை காலையெழுந்து வார்ம் அப் செய்வதற்காக துப்பாக்கிக்கு சிலரை இரையாக்குகிறான். இப்படி படம் முழுக்க யூதர்கள் வேட்டையாடப் படுகிறார்கள். காரண காரியமின்றியே.

இதனிடையே வருகிறார் ஆஸ்கார் ஷின்டலர் என்னும் ஒரு வியாபாரி அல்லது முதலாளி. இவரும் ஒரு ஜெர்மானியர் என்னும்போதும் இட்சக் ஸ்டென் இவனது கணக்குப்பிள்ளை அல்லது அக்கவுண்டன்ட். இவனது உதவியுடன் இவன் சுமார் 1000 யூதர்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை.

ஆஸ்திரேலியாவின் தாமஸ் கின்லி என்னும் எழுத்தாளர் எழுதிய உண்மை சரித்திரமான ஷின்ட்லர்ஸ் ஆர்க் என்னும் நாவலை படமாக்கியுள்ளார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவர் எடுத்த படங்களில் இதுதான் இவருக்கு மிகவும் பிடித்ததாம் ஜுராஸிக் பார்க் போன்றவை எல்லாம் இல்லை என அவரே கூறியிருக்கிறார்.
Image result for schindler's list


22 அமெரிக்கன் மில்லியன் டாலர் செலவளிக்கப்பட்டு எடுத்த இப்படம் 321.2 அமெரிக்கன் டாலர்களை ஈட்டியுள்ளதாக செய்திகள்.பாக்ஸ் ஆபிஸ் ஹிட். உண்மையில் இதைப் படமாக பார்க்கவே முடியாது  ஒரு சரித்திரப் பதிவு. ஆவணப்படுத்தலாகவே காணமுடிகிறது.

லியாம் நீசன் என்பவர் ஆஸ்கார் ஷின்டலராக வாழ்ந்திருக்கிறார் இவரும் பென் கிங்க்ஸ்லீயும் தயாரித்து காப்பாற்றியோர் யூதர்களில் பட்டியல்தான் ஷின்டலர்ஸ் லிஸ்ட். ஆனால் அதற்குள்தான் எப்படி அந்த  ரயிலானது தடம் மாறிப் போகிறது? அதை எப்படி இலஞ்சம் கொடுத்து இவர் திருப்புகிறார்,

எவ்வளவு கொடுமைக்கார, கொடூரமான, படு கண்டிப்பான நாஜிக்களின் ஹிட்லரின் படையில் ஆஸ்கார் ஷின்ட்லர் டைரக்டர் என அழைக்கப்படுகிறார் எல்லாருக்கும் ஒரு விலை கொடுத்து தமது காரியத்தை சாதிக்கிறார், வாட்ச், மோதிரம், பணம், வைரக் கற்கள் இப்படி எல்லாம்.

ஒரு கம்பெனி எனாமல் பாத்திரங்கள், நாம் அலுமினியம் அல்லது ஈயம் என்று சொல்லலாமா? அப்படி ஒரு கம்பெனி நடத்துவதாக சொல்லி இந்த போலந்தின் யூத அடிமைகளை எல்லாம் விலைக்கு வாங்கி காப்பாற்றுகிறார் கடைசியில் இவரிடம் பணம் ஏதும் அறவே இல்லை ரஷியா போரில் வெற்றி பெற்று இந்த அடிமைகளை விடுதலை செய்கிறது ஜெர்மனியின் கை தாழ்கிறது. இவர் வழியாக காப்பாற்றப் பட்ட யூதர்கள் பல்கிப் பெருகி பல்லாயிரமாக மாறுவதாகவும்( ஒன்பதாயிரம் எனச் சொன்னதாக பார்த்ததாக நினைவு ) மற்ற யூதர்கள் வெறும் 4ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும் ஒரு புள்ளி விவரம் தருகிறார்கள்.

Image result for schindler's list


66 ஆண்டு வாழ்ந்த ஷின்டலர் ஒரு சதுக்கத்தில் மரம் நட அழைக்கப்படுவதாகவும் எல்லா மனிதர்களின் பெருமதிப்பைப் பெறுவதாகவும், கோத் தமது மனிதாபிமானமற்ற செய்கைகளுக்காக் தூக்கிலிடப்பட்டதாகவும் படம் நிறைகிறது. ஷின்டலர் மணவாழ்வில் தோல்வியும், கம்பெனி நடத்துவதில் எந்த வெற்றியும், இலாபமும் ஈட்டாமல் ஆயிரம் மனிதர்களை காப்பாற்றிய பெருமையை பெறுகிறார். ஒரு மனிதரின் வாழ்வை காப்பாற்றினாலே நீங்கள் உலகை காப்பாற்றிய பெருமை பெற்றவராவீர் என்ற நிறைவு மொழிக்கேற்ப...அவரது கல்லறையில் வண்ணப் படமாக மாறி வரிசையாக வந்து ஒரு சிறு கல்லை வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள் படத்தில் ஷிண்ட்லராக நடித்த லியாமி நீசன் வந்து வைப்பதுடன் படம் முடிகிறது.

சரி இதை நான் ஏன் சொல்லி இருக்கிறேன் எனில், கண்ணதாசன் ஒரு இடத்தில் சொல்வார், குழந்தை பிறக்கும்போதே கையை விரித்தபடியே பிறக்கிறது அது  பெறத் தயாராக இருக்கிறது என எனவே இலஞ்சத்தை ஒழிக்க முடியாது என்பார். மதுவை ஒழிக்கலாம் என்பார் எல்லாவற்றையும் தாமே குடித்து முடித்துவிடுவதாக இருந்தால் என்பார். அது போல  ‍ஹெரால்ட் ராபின்ஸ் ஒரு கதையில் எ ஸ்டோன் பார் டேனி பிசர் என நினைக்கிறேன் இறந்த மனிதரின் உடலில் இருந்து கல்லறையில் அல்லது இடுகாட்டில் சுடுகாட்டில் இருந்து அந்த உடலை கடைசிக்கு இட்டுச் செல்லும் ஒரு நண்பர்கள் சிலர் தங்கப் பல்லை எரியும் சிதையிலிருந்து எடுத்துக் கொள்வார்கள், மேலும் என்ன என்ன எல்லாம் உபயோகப்படுமோ அதை எல்லாம் எடுத்துப் பிழைப்பார்கள் அவ்வ்வ்வ்ளவு வறுமையிலிருந்து கதை ஆரம்பிக்கும்.Image result for schindler's list


அது போல மனிதர்களை காக்க இந்த ஷிண்ட்லர் இலஞ்சம் கொடுத்து நாஜி படையின் தலைவர்களை விலைக்கு வாங்குகிறார் எனில் எமது சேலம் மாவட்டத்து சுரேந்திரன் என்னும் இளைஞர் தொழில் முனைவோர் ஆக எவ்வளவு பேரிடம் சுமார் 15 பேரிடம் இலஞ்சம் கொடுத்த காட்சிகளை படப்பதிவு செய்து வெளியிட்டு அதனால் 4 மின்வாரிய ஊழியர்கள் இடைநீக்கம் செய்ததாக செய்தி. இவர் போன்ற இளைஞர்கள் இந்த இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவர்கள். எனவே எமது சுவர் எழுத்துகளில் கூட அவர் பற்றி எழுதியுள்ளோம் இவர் போல இன்னும் முன் வர மாட்டார்களா என, சேலம் மாவட்ட மாரியப்பன் தங்கவேலு செய்தது ஒரு சாதனைதான் என்றாலும் அது போல இதுவும் சாதனைதான். இது போன்ற சாதனைகளால் தான் சமுதாயத்தின் முதுகெலும்பு நிமிரும்.

Image result for schindler's list



எனது சொந்த அனுபவத்தில் நான் ப்யூஸ் மனுஸ் போல் கட்சி சார்ந்த மனிதக் கூட்டத்திடை அகப்பட்டு விழிக்க ஆரம்பிக்கும் வரை எமது பேர் ஒரு பயமுறுத்தும் ஆய்தமாக பயன்படுத்தப்பட்டது எல்லா இடங்களிலும்.ஊராட்சி அலுவலகத்திலிருது, தேசிய உடைமயாக்கப் பட்ட வங்கிகள், மின்வாரிய அலுவலகங்கள், வட்டாட்சியர், நகராட்சிகள் எல்லாம் நிறைய இலஞ்ச எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சில ஆண்டுகள் கூட இதன் விசாரணைகள் நடந்தன. முதல்வர் வரை கொண்டு செல்லப்பட்ட மக்கள் குறை தீர்க்கும் பிரிவுகள் மூலம் சில நல்ல முடிவுகள் ஏற்பட்டன, அப்போதெல்லாம் செல்பேசி போட்டோ வசதிகள் எல்லாம் இல்லை எல்லாம் கடிதத் தொடர்புகள் மூலம் நடக்கும் போராட்டங்கள்தான். ஆதாரங்கள் சாட்சிகள் எல்லாம் மனிதர்களும் உண்மைகளும்தாம்.

அந்த ஆபத்து  வளையத்தில் இருந்து வெளி வந்து எனைக் காப்பாற்றிக் கொண்ட கடிதமாகவே அப்துல் கலாம் அவர்களின் கடிதமும்  இருந்தது

ஆனால் இப்போது தம்பி சுரேந்திரன் செய்திருப்பது தெ‍ஹல்கா செய்தது போல அளவில் மிகப் பெரிய இலஞ்ச ஒழிப்பு முயற்சி இல்லாமல் போனாலும் தனிப்பட்ட மனிதராய் நாட்டுக்கு நாட்டை அதன் இழிவை காட்டும் முயற்சி.

சங்கர் திரைப்பட இயக்குனர் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற படங்களை இலஞ்ச ஒழிப்பு செய்திகளை அடிப்படையாக வைத்தபோதிலும் இந்த நாட்டில் எவருமே தமது வாழ்வில் பயன்படுத்த முன்வருவதில்லை. ஆனால் இதுபோன்று செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமே இருக்கின்றன. அங்கு அவர் கைது, இங்கு இவர் கைது என. ஆனாலும் இலஞ்சமும் ஊழலும் இன்னும் பெருகியபடியே இருக்கிறதே ஒழிய குறைந்தபாட்டைக் காணோம். காரணம் ஆள்வோர்.

பிறநாட்டில் சட்டத்தை மீறுவதற்காக இலஞ்சம் பேசுகிறது என்பார், இங்கு சட்டப்படி தமது வேலையை செய்வதற்கே இலஞ்சம் வேண்டிய நிலை. துர்ப்பாக்கியம், வாங்கினேன் பிடித்துச் சென்றார்கள், கொடுத்தேன் விட்டு விட்டார்கள் என ஒரு கவிஞர் சொல்லியபடி அதைப் பேசப் போனால் கூட அந்தப் பேச்சரங்கில் இவனை விட்டால் மீறிவிடுவான் என ஒரு புல்லுருவியை பக்கத்தில் வைத்து நாம் பேசியதை எல்லாம் அவனை பேச கற்றுக் கொள்ள வைத்து நம்மை கழட்டி விட்டு விட்டு அவனை எடுப்பார் கைப்பிள்ளையாக, தேவையானபடி வனைந்து கொள்ளும் மண் பொம்மையாக ஒரு  அரங்கம் செய்து கொண்டது எல்லாம் என் நினைவில் ஏன் நிழலாடுகிறது என்றுதான் புரியவில்லை.

நாளை மறுபடியும் எனது நாள் அதிகாலை 4 மணி முதல் ஆரம்பிக்கிறது என்பதால் உங்களுடன் இது வரை தான் பேசமுடிகிறது.

https://www.youtube.com/watch?v=HmoLhL5Gdg4
https://www.youtube.com/watch?v=5YX9_3tRxV0

இந்தியாவில் இலஞ்சம் கொடுக்கும் தொடர்கதை முடியாத சிந்துபாத் கன்னித் தீவு ஆதலால் பொறுக்க மாட்டாமல் பாம்புகளை அவிழ்த்து அலுவலகத்தில் விட்ட கதை எல்லாம் உண்மைச் சம்பவமாக நடந்தேறியதுதான்...
நன்றி
வணக்கம்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.