பி எஸ்.என்.எல்(BSNL) தகவல் தொழில் நுட்பச் சுரண்டல்: கவிஞர் தணிகை
பி.எஸ்.என்.எல் உட்பட அனைத்து செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களுமே சுரண்டலின் வர்க்கங்கள். இலவசமாக சிம்களை வழங்கினார்கள். இன்று சொல்லாமலே அறிவிக்காமலே கோடிகளில் சுரண்டுகிறார்கள் நுகர்வோரின் அத்தியாவசியத் தேவைகளைக் காரணம் காட்டி 24 மணி நேரமுமே பகற்கொள்ளை அடித்து பணத்தைப் பிடுங்கி வருகிறார்கள்.
கேட்டால் டேட்டா என்பார் டாக் டைம் என்பார், கஸ்டமர் கேரில் அதை அழுத்தவும் இந்த எண்ணை அழுத்தவும் என ஒரே ஒப்பாரி. எளிதில் மேலதிகாரிகளிடம் புகாரைச் சொல்லவே முடியாத வாடிக்கையாளர் சேவையும் மையமும் தகிடுதத்தங்களும்.
முதலில் மாதமொன்றுக்கு 107ரூ கட்டி வந்தேன், அதை கூகுள் பே முலம் செலுத்த அவர்களுக்கு ரூ.1.90 இடைத் தரகு. ஆக 108.90ரூ. 28 நாள் அத்துடன் ஒரு வாரம் கருணைக் காலமாம் மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள...திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி 28 நாள் 20 நாளாக மாறியது. இப்போது 107க்கும் மாறாக 147 கட்டிக் கொள்ளுங்கள் என தகவல் செல்பேசி வழி... எனவே இனி என்னைத் தொடர்பு கொள்ள வேண்டி எவராவது விரும்பின் வாட்ஸ் அப் அழைப்பு ஒன்றே வழி .இவர்கள் சொல்லியபடி எல்லாம் ஆடிக் கொண்டிருக்க யாமொன்றும் அடிவருடி அல்ல.
ராஜ்யசபாவிலேயே ஒரு உறுப்பினர் உங்களுக்கு மட்டும் எப்படி வருடத்திற்கு 13 மாதம்? எனக் காறித் துப்பியும் இவர்களுக்குள் எவ்வித மாற்றமும் வரவில்லை. நெட் கால் எல்லாம் இலவசம் என்பார் நெட் இணைப்பு உள்ளார்க்கு...ஆனால் ஒரு அழைப்பு கூட செய்ய யோக்யதை இல்லை.
இதில் செல்பேசிக்கு டேட்டா இலவசம் என்பார் காசு கட்டவில்லை என்றால் அன்றே டேட்டாவும் கிடைக்காது, நெட்டும் கிடைக்காது, பேசவும் முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி மக்களை நிர்பந்தித்து வருகிறார்கள். இவர்கள் மக்களிடம் இருந்து அடிக்கும் கொள்ளைக்கு ஒரு அளவுகோலை நியமித்து ஆராய வேண்டும் என்று அரசுகளை அணுக:
அவற்றின் நிலை என்ன எனில், இலவச எரிவாயு , விறகு வேண்டாம் என்று எல்லாரும் வாங்கிக்கங்க, என்று பாடி விட்டு இன்று பெட்ரோல் ,எரிவாயு எல்லாமே விலை ஏற்றம்...எல்லா விலையுமே பெட்ரோல் பம்ப்பினால் விலை ஏற்றம்.இவை ஏழை மேலும் ஏழையாகி பணக்காரர் மேலும் பணக்காரராகும் சமூக அமைப்பின் நோய் அல்லவா?எல்லாமே உலகெலாம் கீழிருப்போரை இல்லாரை சுரண்டி மேல் எடுத்துச் சென்று கொண்டு அனுபவிக்கும் அமைப்புகளாகி பல்லாண்டுகள் ஆகின.மாற்ற வழி இல்லை. ஜென்மம் போதவில்லை. மக்களிடம் மாயை நிலவிட...
எல்லொரும் ஒரு வங்கிக் கணக்கு என்று சொல்லி விட்டு, வீட்டுக்கொரு மரம் என வீடில்லாரிடம் சொல்வது போல, தண்ணி வராமலேயே தண்ணி விட்டு செடி கொடி மரங்களை காப்பாத்துங்க எனச் சொல்வது போல காசில்லாதார் கணக்குகளிடம் கூட குறைந்த பட்சம் காசு இருக்க கெடுபிடி... வங்கிகள் கட்டுப் படுத்துவது போல...
ஏழைப் பெண்களிடம் இருக்கும் சிறுவாட்டுத் தங்கத்தை எல்லாம் 916 செய்க ஹால்மார்க் என்றெல்லாம் சொல்லி ஏழை பாளைகளிடமிருந்த தங்கம் அப்படியே இருந்தால் செல்லாது எனச் சொல்லி இன்று ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என தலைமை...விலையோ என்ன என சொல்ல அவசியமே இல்லை....
நுகர்வோர் நீதிமன்றம் செல்ல வேண்டும்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment