கண்டேன் சிவலிங்கத்தை. வயது 72 1952ல் பிறந்த இவர் கர்நாடகத்தின் மாட்டேலி எனப்படும் இடத்தில் கிறித்தவப் பள்ளியில் பல மொழிகள் பயின்று படித்தவர். மேலும் நமது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேருந்து நடத்துனர். அவர் தொடர்பு எண்களை கேட்பார்க்கு தரத் தயாராக இருக்கிறேன்.
எதற்கு என்கிறீர்களா? விஷக் கடி எதுவாக இருந்த போதும் அது பாம்புக் கடியாக இருந்தாலும், தேள், பூரான் இப்படி எதுவாக இருந்த போதும் இந்த ப்ளாக் ஸ்டோன் கொண்டு விஷம் நீக்கி இலவசமாக தம்மை அணுகுவார்க்கு உயிர் காத்து வருகிறார்.
இந்தக் கல்லை தமக்கு தாம் படித்த பள்ளியின் தலைமைப் பொறுப்பினர் தம் மேல் அன்பு கொண்டு, தமது குணநலம் பார்த்து தாம் கிறித்தவராக இல்லாதிருந்த போதும் கொடுத்தனர் என்று அன்பு ததும்ப நன்றியுடன் குறிப்பிட்டார்.
மேலும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை இருக்கும் கிராமத்தின் இடங்களில் வீட்டுக்கு ஒரு கல் இலவசமாக கொடுத்ததைக் கூட வறுமை காரணமாக வணிக நோக்கில் விற்று விட்டனர் என்பதையும் அவர் வழியே கேட்டேன்.
கடிவாயில் இந்தக் கல்லை வைத்தால் ஒட்டிக் கொள்ளும் என்றும் தேவைப்பட்டால் கட்டிவிடலாம் என்றும் ஏன் எனில் கல் கீழே விழுந்தால் உடைந்தும் போகலாம் என்பதற்காக, சிறு இரத்தக் கசிவு செய்து ஒட்டி விட்டால் அந்த விஷம் இறங்கும் வரை அல்லது இந்தக் கல் அந்த விஷத்தை உறிஞ்சிக் கொள்ளும் வரை அந்த உடலில் ஒட்டி இருந்து விஷத்தை முறித்த பின் தாமாக ஒட்டி இருப்பதிலிருந்து விடுபடும் என்றும் உயிர் பிழைத்து விடுவர் என்றும் ஆனால் அதன் பின் அந்தக் கல்லை தூய்மைப் படுத்துவது மிக முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
சுமார் 20 அல்லது 30 நிமிடங்கள் நீரிலும், அதன் பின் சுமார் 2 அல்லது 3 மணி நேரம் பாலிலும் ஊற வைத்தால் மட்டுமே அந்தக் கல் உறிஞ்சிய விஷத்தை இழக்கும் அது மிக முக்கியம் என்றும் அதன் பின் மட்டுமே பிறர்க்கு பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடுகிறார் . மேலும் ஏறி இருக்கும் விஷம் அந்த உடலைப் பொறுத்து பல மணி ஏன் சில நாட்கள் அல்லது பல நாட்கள் கூட காத்திருக்க வேண்டும் அந்த விஷம் முற்றிலும் அந்த உடலில் இருந்து வெளியேறும் என்கிறார். அது வரை அந்தக் கல் நோயாளிகளிடமே கடிவாயில் ஒட்டி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எங்கள் ஊரிலேயே கூட முக்கிய பிரமுகர் ஒருவரின் ஆசிரியை மனைவிக்கு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்குள் விஷக் கடியால் உயிர் போனதைப் போன்று எத்தனையோ உயிர்கள் இந்த அறிவியல் காலத்திலும் நடக்கும் போது இது ஒரு அரிய எளிய அற்புத செலவில்லாத மருத்துவ உயிர் காக்கும் செயலாய் இருக்கிறது என்பதால் இந்த ஆங்கில ஆண்டின் பிறப்பில் அவரை காலையில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனமகிழ்வையும் நிறைவையும் தந்தது எனவேதான் இந்தப் பதிவு பகிர்வு எல்லாம். உடனுக்கு உடனே.
கருப்புக் கல்,ப்ளேக் ஸ்டோன், பாம்புக் கல் ஸ்னேக் ஸ்டோன், அல்லது சற்ப்பன்ட் ஸ்டோன் பற்றி கூகுள் பொறியீட்டில் அதிகம் காணப்படவில்லை என்ற போதும் அவர் கூறியபடி பிரான்ஸ் இடம் பெறுகிறது பெல்ஜியத்தில் அதைத் தயாரிக்க ஒரு ஆலை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் இலாப நோக்கம் அல்லது பொருளாதார நோக்கத்தில் பயன்பாடு இல்லை என்ற போதும் இப்போது வணிகமயமாகிவிட்டதாகவும் அல்லது கிறித்தவம் பரப்ப அதன் பயன்பாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று ரெயில்வேமேன் தொடரில் இந்து மத வெறியர்கள் ஓடும் விரைவு தொடர் வண்டியில் பிரதமர் இந்திராகாந்தியை துப்பாக்கி சூட்டால் படுகொலை செய்யப் பட்ட காலக் கட்டத்தில் சீக்கியரைத் தேடி எப்படி கொல்ல முயல்கின்றனர் எனச் சொல்லப் பட்டிருந்ததைக் காணும் போது
உயிர்க் காத்து அதன் பயனாக தங்கள் மதம் ஈர்க்க முனைவதாக இருப்பதில் பெரிதான தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மதத்துக்காக உயிர் போக்குவதை விட உயிருக்காக உயிர் காக்க மதத்தை பயன்படுத்துவது தவறு அல்ல என்றே தோன்றுகிறது. சரி விடுங்கள் அந்தப் பிரச்சனை நமக்கு வேண்டாம்.
கண்டேன் சிவ(ம்) லிங்கத்தை இவர் ஒரு ப்ளேக் ஸ்டோன் மேஜிக் காரர் ப்ளேக் மேஜிக்காரர் அல்ல.இவரது வாழ்க்கைத் துணையான கண்ணம்மா சிவலிங்கமும் இவர் செய்யும் உயிர் காக்கும் சேவைக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பதுவும் குறிப்பிடத் தக்க வரவேற்கத் தக்க ஒன்று. இவர்கள் வாழ்க பல்லாண்டு என இந்த ஆங்கிலப் புத்தாண்டில் வாழ்த்துகிறேன்.
நாக மணி என்று விக்கிப் பீடியாவில் மற்றும் யூ ட்யூப் தளங்களில் இதைப் பற்றிய சான்றுகள் உள்ளன.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு:பாம்பு-கல், கட்டுவிரியன் கல், பாம்பின் முத்து, கருப்பு கல், பாம்பு-கல் அல்லது நாகமணி என்பது விலங்கு எலும்பு அல்லது கல் ஆகும். இது பாம்புக் கடிக்கு நாட்டு மருந்தாக ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப்பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. விக்கிப்பீடியா
நாகமணி சிவலிங்கம் கண்டேன்: கவிஞர் தணிகை
No comments:
Post a Comment