தெரிந்ததும் தெரியாததும்: கவிஞர் தணிகை
ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி,ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லும் அந்த ஆட்டுக்குத் தெரியாது இன்னும் சற்று நேரத்தில் தான் செத்துப் போகப் போகிறமென்று,
கிழக்கிருந்து மேற்கே ஆற்றங்கரை நோக்கிப் பறக்கும் அந்தக் கழுகுக்கு தெரியாது சற்று நேரத்தில் தனக்கு ஒரு பெரிய மீன் கிடைக்குமென்று ( கெண்டை ரகமே இப்போது கிடைப்பதில்லையாம் அழிந்து விட்டதாம் ஒரு 86 வயது மீனவரின் கவலை)
வடமேற்கிருந்து தென் கிழக்காக பறந்து செல்லும் அந்த கருங்கொக்கு கூட்டத்தின் கேப்டன் கொக்குக்குத் தெரியாது நாளை நாம் கேப்டனாக இருக்கப் போவதில்லையென்று
விரிசலுடன் எப்போ எப்போ? என்று கிடந்த பாலத்துக்குத் தெரியாது அடுத்த நொடி அது இடிந்து விழப் போகிறதென்று?
நிறம் மாறி காட்சி தந்த அந்த பூக்களுக்குத் தெரியாது அவை எத்தனை மனித உள்ளங்களுக்குள் உற்சாகம் ஏற்படுத்தி விடுகிறதென்று?
இனப் பெருக்கத்தில் பெருகிக் கிடக்கும் நத்தைகளுக்குத் தெரியாது அரிக்கரண்டியால் அவை எத்தனை தூரம் வீசி எறியப் படப் போகிறோமென்று?
சில விளக்குகள் மட்டும் அணைப்பார் இன்றி நாளெல்லாம் எரிந்து கிடக்க, இந்த தெரு விளக்குக்கு மட்டும் தெரியாது அது சரியாக தினமும் அணைக்கப்பட்டு நீட்சி பெற்று வெளிச்சம் தரப் போகிறெமென்றும், ஒரு நாள் உழைத்து தேய்ந்து எரியாமல் எடுத்து எறியப் படப் போகிறோமென்று?
கறிவேப்பிலைக்குத் தெரியாது இப்போதெல்லாம் எப்படி இந்த மனிதர்க்கு நல் அறிவு வந்தது அவர்கள் நம்மை தூக்கி எறியாமல் மென்று தின்று இரும்புச் சத்து போன்ற பல சத்துகளை நம் மூலம் அடைகிறார்களென்று?
வாசகர்கள் இது போல் நிறைய தெரிந்தது தெரியாதது, புரிந்தது புரியாதது, அறிந்தது அறியாதது பற்றி நக்கீரனும் சிவமும் திருவிளையாடலில் பேசுவது போல பேசிக் கொள்ளலாம் நேரத்தை பயன்படுத்த நேரத்தை பயப்படுத்த... இது விரயமல்ல சிந்தையை செப்பனிடுவது...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment