லைஃப் ஈஸ் பியூட்டிபுல்: : கவிஞர் தணிகை
மாமன்னர் படம் இயக்கிய மாரி செல்வராஜின் பேட்டியைப் பார்க்கும் போது அதில் வடிவேலு லைஃப் ஈஸ் பியூட்டிபுல் படத்தை நான் பண்ண வேண்டும் நீ இயக்க வேண்டும் என்று சொல்லியதாக கேட்டேன். உடனே அப்படி என்ன அந்த படத்தில் எனத் தேடல்
அந்த தலைப்பிலேயே இன்னும் சில படங்கள் இருக்கின்றன ஆங்கிலத்திலும் ஏன் தெலுகிலும் கூட.
முதலில் ஒரு படத்தைப் பார்த்தேன் அது ஒரு வாடகைக் கார் ஓட்டுனர் பற்றியும் ஒரு அடக்குமுறை சாம்ராஜ்ஜியம் பற்றிய கதை அதிலிருந்து தனது காதலியுடன் எப்படி மீண்டு தனி விமானத்தில் ஏறி கடைசிக் காட்சியில் தப்பிக்கிறார். என்பது பற்றியது.
பொதுவாக இந்த தலைப்பில் உள்ள படங்களில் எல்லாம் மையக் கருவாக மிகவும் கஷ்டப்பட்டு இறுதியில் இன்பம் தொடல் என்பது பற்றிய நிலை சொல்லப் படுகின்றன.
இந்த இத்தாலிய மொழித் திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்த பிற மொழிப் படம் என்றெல்லாம் 1997ல் வெளிவந்த படம்
வழக்கம் போல நாஜிகள் யூதர்களை கொடுமைப்படுத்தி துன்புறுத்தும் காலக் கட்டப் படம் தான்... இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்ததாக சொல்லப் பட்டுள்ள கதைதான்.
இந்தப் படத்தைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும் எனில் இதைப் பார்த்தது முதல் பல்வேறு எண்ண அலைகள் அடங்காமல் ஆர்ப்பரித்தபடியே இருப்பதுதான்.
ஒரு கிராமத்து யூத இளைஞர் நகருக்குள் நுழைந்து தனது விளையாட்டான ஜாலியான நடவடிக்கைகளால் ஒரு ஜெர்மானியப் பெண் மனம் கவர்ந்து இவரும் அவரும் மணம் கொண்டு அதன் வழி ஒரு ஆண் குழந்தையை பெற்றுக் கொள்வதும்...
அதன் பின் நிலை சிக்கலாக மாறி சொல்லொணாத் துன்பம் நேர்வதை எப்படி இருவரும் தமது மகனுக்கு தெரிவிக்காமல் கொண்டு செல்கிறார்கள் அது ஒரு சவாலான போட்டி அதி வெல்வாருக்கு பெரும்பரிசு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி அந்தச் சிறுவனை பெரும் துன்பத்திலான நேரத்தில் கூட ஒரு விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவதாக வெல்வதற்கான சவாலை வென்றெடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வாழ்வில் உடன் அழைத்துச் செல்கிறார்கள்.
அதிலும் அவரது தந்தையின் செயல் யாவும் மிகவும் வேடிக்கையாகவே இருக்கின்றன. "துன்பம் வரும் வேளையில் எல்லாம் சிரிங்க" இடும்பைக்கு இடும்பை படுப்ப என்ற தமிழ் மரபு வார்த்தைகளுக்கு ஏற்ப
உண்மையிலேயே தலைப்பைப் பார்த்து ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்க்கும் ஆர்வத்துடன் நாம் இருந்தால் அந்தப் படம் வாழ்வின் பேருண்மையை நமக்கு புகட்டுவதாய் அமைந்து விடுகிறது.
சகிப்புத் தன்மையுடன் வாழ்வை எதிர்கொள்ளல், அதிலும் ஒரு விளையாட்டுத் தனம் கலந்த ஜாலியாக எதிர்கொள்ளல் எப்பேர்ப்பட்ட துன்பம் வரினும் அதை அழுது கொண்டு சந்திக்காமல் சிரித்துக் கொண்டே சந்தித்தல் அவற்றிற்கு மேல் நமது குழந்தைகளுக்கு அவை பற்றி ஏதும் தெரிவிக்காமலே புரிய வைக்காமலே புரியவிடாமலே அந்த வாழ்வை எப்படி நகர்த்திச் செல்லல் போன்ற நடை பார்க்கும் நமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது
இறுதியாக அந்த தந்தை செய்யும் தியாகம் அந்தச் சிறுவனை ஒரு நல்ல வாழ்க்கைக்கு எப்படி இட்டுச் செல்கிறது அவரது தாயுடன் சேர்த்து வைக்கிறது....என்ற முடிவு...அந்தச் சிறுவனுக்கு தனது தந்தை இனி இல்லை என்ற நினைவைக் கூட வர விடாமல் இனி எலாம் சுகமே...என்ற வாறு முடித்து வைக்கிறது...
ஆக இது ஒரு பாடம். படம் அல்ல...மணமாகி குழந்தை என்று வந்து விட்டாலே நமது நோக்கம் யாவும் அவர்களை மலர்விப்பதானதாகவே இருக்க வேண்டும் அவர்தாம் நல்ல பெற்றோராக இருக்க முடியும் என எப்போதே சொல்லப் பட்ட படம், இப்போது இந்தக் காலக்கட்டத்தில் புணர்ச்சி சுகம் அனுபவிக்கும் போது தொந்தரவாக இருக்கிறது என பெற்ற பிள்ளைகளையே அடித்து பல்வேறுபட்ட துன்புறுத்திக் கொன்று வரும் இந்தக் காலக் கட்டத்தில் எனக்கு பொருத்திப் பார்த்து அவசியம் சொல்லத் தோன்றுகிறது...ஓ! மனிதா உன் வாழ்வென்ன எளிதா? உன் வாரிசுகளுக்கு எளிதாக்கு அதுவே உனது மொழிதான்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment