அதி வேக ஆபத்துகள்: ஒடிசா ரயில்வே தண்டவாளத்தில் சாய்ந்த 3 ரயில்களின் பெட்டிகள்:கவிஞர் தணிகை
அறிவியல் முறைகளில் இளம் விஞ்ஞானிகள் வேகம், கட்டுப்பாடு, விபத்து தடுப்பு கருவிகள் இப்படி நிறைய கண்டறிந்ததாக அவ்வப்போது நாம் படித்து விட்டு கடந்து சென்று விடுகிறோம்.
ஜி.டி.நாயுடுவே இந்த நாட்டின் அறிவியல் அங்கீகாரம் இல்லை என்ற காரணத்தால் தமது கண்டுபிடிப்புகளை ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு இலவசமாக கொடுத்ததான செய்திகள் உள்ளன
என்று இது போன்ற மாபெரும் விபத்துகளை எல்லாம் மனித குலம் தடுக்கப் போகிறது?
3 ரயில்கள், 280பேருக்கு மேலான இறப்புகள், 900 பேருக்கும் மேலானோர் படுகாயம்...இது தற்போதைய நிலவரம் இன்னுமிவை அதிக எண்ணிக்கையாகலாம் சில நாட்கள் ஆகும்போது தெரியவரும். சொல்லத் தரமில்லா சோகம்...இந்த பாரதத் திருநாட்டில் நிகழ்ந்த அவலம்...ஒடிசா, மே.வங்கம், மட்டுமல்ல தமிழ்நாடு, கர்நாடகம் இப்படி அனைத்து மாநிலங்களுக்குமே இது ஒரு அதிர்ச்சி கலந்த பெரும் சோகம்.
இதை எல்லாம் எப்படி இந்த நாடு ஈடு செய்யப் போகிறது? மக்கள் தொகைப் பெருக்கத்தால் மட்டுமேவா?
உயிருக்கு ஈடு என்ன செய்ய முடியும்?
அடுத்து நடக்காத முறையில் இனி மேலுமாவது நல்ல நடவடிக்கைகளில் இறங்குமா? இல்லை இதுவேதான் திரும்புமா? ரயில்வேயில் இது போன்ற மா பெரும் விபத்துகள் ஏற்கெனவே 5 முறை நிகழ்ந்ததாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன....இது 6 ஆம் நிகழ்வு...என்கின்றன செய்திகள்.
என்று தான் திருத்தம் நேருமோ?
எப்படித்தான் இந்த வருத்தம் ஆறுமோ?
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வழி இல்லை ஆழ்ந்த இரங்கல்களும் இந்த பேரிடரிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இயற்கையிடம் பிரார்த்தனைகளும்...
, சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களையும் 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவித்துள்ளது.
கொல்கத்தா சென்னை கோரமண்டல் ரயில் விபத்து அவசர கால உதவி எண்கள்: 06782-262286 ( ஒடிசா அரசு உதவி எண் ) ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 8249591559 (பாலசோர்) மற்றும் 044- 25330952 (சென்னை)
ஹவுரா-புரி விரைவு ரயில், ஹவுரா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா சென்னை மெயில், ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment