வீட்ல விஷேசம் நாட்லயுந்தாங்க: கவிஞர் தணிகை
75 ஆம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துகள் ( சொல்லித் தானே ஆக வேண்டியிருக்கிறது)
சூப்பருங்க திங்கள் கிழமையில் சுதந்திர நாள் இயல்பாக வந்திருப்பதால் லீவு சேர்ந்து சனி ஞாயிறு திங்கள் என்று 3 நாளாகிவிட்டதே...ஆம்னி பேருந்துகளுக்கும் கொண்டாட்டமாம் ஆயிரம் ரூபாய் டிக்கட் மூவாயிரமாம் சென்னையில் இருந்து சொந்த ஊர் வர சென்னை வாசிகளுக்கு...
புது டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறாராம் நாட்டின் பிரதமர்
எல்லா வீடுகளிலும் கொடி ஏற்ற ஏற்பாடு செய்து விட்டார்கள்
பால், தயிர், அரிசி எல்லாம் ஜி.எஸ்.டி வரம்புக்குள் வந்து விட்ட 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் இன்னும் என்ன என்ன கொண்டு வரப் போகிறதோ? தந்து விடப் போகிறதோ என அரசியல் தொலை நோக்கர்கள் கருத வேண்டிய சூழல்
காற்றுக்கு சுவாசிக்க வரி வந்து விடுமோ என ஒரு பேச்சரங்கத்தின் வாயிலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு காங்கிரஸ் கட்சி பிரமுகர் பேசி இருந்தார்....அடைக்கப் பட்ட உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றி எனக்கு மேல் விவரம் ஒன்றும் தெரியாது...
ஆனால் சமையல் எரிவாயுவின் விலை ஏறியபடியேதான் இருக்கிறது அதையும் கொடி ஏற்றிக் கொண்டாடியே தீர வேண்டும்...
வீட்ல விஷேசம்:
நல்ல படம். பார்க்க வேண்டும் என நினைத்ததை ஜி.தமிழ் சேனல் மூலம் நேற்று நிறைவேற்றிக் கொண்டேன்.
சிக்கலான கருப்பொருள் பாலாஜி கையாண்டிருக்கிறார் அதற்கான தீர்வையும் சொல்ல முயன்றிருக்கிறார்.என்றெல்லாம் சொல்ல முடியாது ஏனென்றால் இது 2018ல் வந்த இந்திப் படத்தின் மறு தயாரிப்பு போனி கபூர் வழியாக தயாரிக்கப் பட்ட படம். பாலாஜியுடன் அவர் நண்பர்களும் என்.ஜெ.சரவணன் என்ற இயக்குனரும் உருவாக்கி இருக்கிறார்கள் தமிழ் மொழிக்கேற்றபடி. என்றாலும் கேரள மலையாளமும் தமிழும் கலந்திருக்கிறது இதில் சொல்லப் பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் போல...
அபர்ணா முரளி ஒரு சிறந்த நடிகை. கவிதா ரஞ்சினியாம் ஊர்வசியின் பேர்.
கே.பி.ஏ.சி. லதா என்னும் முதிர் நடிகை படத்தில் கதையை எடுத்து நிறுத்தி இருக்கிறார்.சத்தியராஜ் என்னும் உன்னிகிருஷ்ணனின் தாயாகவும் ஊர்வசியின் கிருஷ்ணவேணியின் மாமியாராகவும் இளங்கோ சகோதரர்களின் பாட்டியாகவும் இருந்து. ஊர்வசி, சத்யராஜ், பாலாஜி, அபர்ணா பாலமுரளி, லதா என்னும் பாட்டி எல்லாருமே மிக நன்றாக நடித்திருப்பதால் படம் பார்க்க பார்க்க மகிழ்வாக இருக்கிறது. ஆனால்
ஏன் முதிய வயதில் குழந்தை வேண்டாம் என இயற்கையின் முடிவு எனில் பெற்றோர்களின் ஆயுள் நீடித்து முழு அரவணைப்பும் இருக்காது அந்தக் குழந்தைக்கு கிடைக்காது என்பதால்தான்... அதிலிருந்து ஒன்றிரண்டு தப்பிப் போனால் என்ன செய்வது எனச் சொல்ல முயன்றிருக்கும் படம்...
நகைச்சுவைக்காக பார்க்கலாம்.
இந்தியத் தியாகிகளுக்காக விடுதலை நாளைக் கொண்டாடலாம்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
100 ஆம் ஆண்டு சுதந்திர தினப் பெருவிழா வரும் வரை வாழ்வாங்கு வாழ்ந்து நண்பர்கள் அனைவரும் கொண்டாட தயாராக உடல் பேணி உயிருடன் இருக்க அனைவர்க்கும் வாழ்த்துகள்.
இந்த 75 மைனஸ் 15 = 60ல்
ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பும், ஒரு குடும்பத்தில் மணவிழா நிகழ்வுமாக எல்லாம் நினைக்க நினைக்க தித்திப்புமாக என் துணைவியார் செய்த ஒப்பிட்டு போல அதிகம் திகட்டுவதாக இனிப்பு கூடவே இருக்கிறது. இந்த 75 ஆம் தின சுதந்திர நாள்
வாழ்த்துகள்
வணக்கங்களுடன்.
No comments:
Post a Comment