மகாத்மா காந்தி பற்றி பேசுகிறேன்: கவிஞர் தணிகை
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாளும் கர்மவீரர் காமராசரின் நினைவு நாளுமான இன்று:
மகாத்மா காந்தியின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பேசும் வாய்ப்பை தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி(மா)மன்றம் வழங்கி உள்ளது.
இன்று சுமார் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இந்நிகழ்வு காணொளிக் காட்சி வழியே நடைபெறுகிறது. இணைப்பை வழங்கி உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக ஆண்டுக்கு நூற்றுக்கு மேலான பல் மருத்துவர்களை உருவாக்கித் தரும் கல்லூரியில் சுமார் 600 மாணவர்கள் மற்றும் 200க்கும் மேலான ஆசிரிய அலுவலர்களுடன் எனது பணியும் அர்ப்பணிப்பாய் மாறி உள்ள காரணத்தால் நிறைய எழுத வேண்டும், பேச வேண்டும் என்ற செயல்பாடுகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. அதுவும் ஆக்க பூர்வமான பணி என்பதால் நிறைவே. இன்னும் நிறைய பேரைப் பற்றி எழுத வேண்டிய பேச வேண்டிய கடமைகள் எல்லாம் மனமெனும் சுரங்கத்துள் ஊறியபடியே கிடக்கின்றன. என்றுதான் அவை வெளிச்சம் பெறுமோ?
இந்தக் காலக் கட்டத்தில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சுமார் 400 பேர் அடங்கிய 500க்கும் மேலானவர்களுக்காக இன்று காந்தியம் பற்றி பேசுகிறேன்.
வாய்ப்பு இருந்தால் வாருங்கள் சேர்ந்து கொள்வோம், சேர்ந்து செல்வோம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment