Sunday, July 18, 2021

அணுகும் முறை: இரண்டாம் முறை கோவிட் தீ நுண் கிருமி எதிர்ப்பு ஊசி போட்டுக் கொண்டேன்: கவிஞர் தணிகை

 அணுகும் முறை: இரண்டாம் முறை கோவிட் தீ நுண் கிருமி எதிர்ப்பு ஊசி போட்டுக் கொண்டேன்: கவிஞர் தணிகை



கல்லூரி வாட்ஸ் ஆப் குழுவில் சேலம் மாவட்டம் முழுதும் 17.07.2021 அன்று போடப் பட இருக்கும் ஊசிகளின் மையம் மற்றும் எண்ணிக்கை குறித்த ஒரு பதிவைப் பார்த்தேன்

எனது இல்லத்தரசிக்கு இன்னும் முதல் ஊசி போடப் படாமலே இருந்த குறையை நிவர்த்திக்க திட்டமிட்டு காலை சுமார் 9 மணி அளவுக்கு மேச்சேரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நோக்கி பயணம்.

அங்கே 730 ஊசிகள் அதாவது கோவிஷீல்ட் 600 எண்ணிக்கை என்றும், 130 இரண்டாம் ஊசிக்கான கோவேக்சின் மருந்துகள் போடப்படுகின்றன என்ற செய்தி...

600 ஊசிகளில் நமக்கு ஒன்று கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை

பள்ளி நுழை வாயிலில் இருந்த நீண்ட வரிசையைப் பார்த்து சற்று மலைப்பு ஏற்பட்டது கோகுலம் தனியார் மருத்துவ மனைக்கு சென்று ரூ. 780 செலவு செய்து சேலத்தில் போட்டுக் கொள்ளலாமா என்ற ஒரு நினைவும் வந்தது


ஆனால் வரிசை மள மள வென செல்வதைப் பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி...காவல் துறையும், சுகாதாரப் பணியாளரும் திறம்பட பணி புரிந்தனர். 10. 37 மணிக்கெல்லாம் ஊசி போட்டுக் கொண்டு வெளியே வந்து விட்டோம்.

மிகவும் நேர்மையாக முதலில் வருவோர்க்கு முதலில் என்ற விதி முறை கடைப்பிடிக்கப் பட்டிருந்தது.

பெண்கள் பக்கம் கூட்டம் குறைவு. எனவே எனது இல்லத்தரசி மிகவும் குறுகிய நேரத்திலேயே போட்டுக் கொண்டு வெளியே வந்து விட்டார். காவல் துறை பெண் நண்பர் கூட பெண்கள் எங்கே போவார்கள் அவர்களுக்கு போட்டு விடுங்கள் முதலில், ஆண்கள் கூட கிடைக்கும் இடம் தேடிப் போய் போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் பெண்கள் நலம் சார்ந்து பேசியதாக பகிர்ந்து கொண்டனர்.



நானும் இரண்டாம் ஊசியை போட்டுக் கொண்டேன். முதல் ஊசி போட்டது 17.06.2021 என்றிருந்த போதும், 84 நாள் கழித்தால் தான் போட வேண்டும் என்ற நிபந்தனையை எல்லாம் மீறத் தலைப்பட்டேன். 17.07.2021ல் போட்டுக் கொண்டேன். குறுஞ்செய்தி வராது என்றார்கள். பரவாயில்லை வந்தாலும் வராவிட்டாலும் வராமலே போனாலும் எனது வேலையை நான் முடித்துக் கொண்டேன். காரணம் வெளி நாட்டுக்கு செல்வாருக்கு இரண்டாம் முறை ஊசியை 25 நாளிலேயே போட்டுக் கொள்ளலாம் என்னும் அரசு, கோவேக்சின் என்றால் 20லிருந்து 30 நாளுக்குள்ளாகவே போட்டுக் கொள்ளலம் என்றும் இப்போது கோவிஷீல்ட் போட்டுக் கொண்டிருக்கும் எனது இல்லத்தரசி போன்றோர்க்கு 90 நாள் இடைவெளி என்றும் விதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கு அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்பில் ஊசி போட வேண்டிய கடமை இருக்கிறது. 


தனியார் மருத்துவமனைகளில் ஊசிகள் தேங்கிக் கிடக்கின்றன என்ற செய்திகளும், தனியார் வியாபாரத்தை ஊக்குவிக்க விரும்பும் அரசை தனி மனித மறுப்பாக இதைச் செய்து இருக்கிறேன் ஏன் எனில் சுலபமாக கிடைப்பதை விட்டு விடத் தயாரில்லை. மேலும் எந்த தளத்திலும் ஊசிக்காக பதிவு செய்து கொண்டால் எங்கு எந்த மையத்தில், எப்போது ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற தகவல் இல்லை.


மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் தக்க ஊசிகளை வழங்க வேண்டிய பணியை மத்திய அரசே வைத்திருப்பதும் இப்போதுதான் செங்கல் பட்டு ஊசி தயாரிப்பு ஆலையை தனியாருடன் கரம் சேர்த்து ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாகவும் மிகவும் மெத்தனமான மிகவும் விரைவாக செயல்படாமல் அதற்கு மாநில உரிமை மத்திய உரிமை மாநிலத்துக்கு பேர் போய்விடும் என்று மக்களின் உயிர் காக்கும் பணியில் அலட்சியம் காட்டி வரும் அரசை பொது அதிகாரக் குவியலை எல்லாத் துறைகளையுமே தன்னிடமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய அரசை காந்திய மார்க்கத்துக்கு அதிகாரப் பரவல் என்ற போக்குக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன், விவசாயப் போராட்டம் இன்னும் நீடிக்க முடிவு எட்டப் படாமலே ஒரு அரசால் எப்படி இருக்க முடிகிறது என்ற கேள்வியுடன் இந்த பதிவை நிறைவு செய்திருக்கிறேன்...கர்நாடகாவின் கர்நாடகமான மேக்கேதாது அணை ஆடு தாண்டும் கால்வாய் பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக கையாளும் அரசியல் நிகழ்வுகளை கண்டிக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனித கடமையாக நினைக்கிறேன்.

(மேச்சேரி காளி அம்மன் கோவிலில் ஏகப் பட்ட கூட்டம் சமூக இடவெளி இன்றி அது கட்டியது முதல் நாங்கள் சென்று பார்க்க வில்லை என்ற எண்ணக் குறைபாடும் அன்று நிவர்த்தி ஆனது என்பதை சொல்லவும் வேண்டும்)


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment