Monday, May 10, 2021

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவரானது சரியே: கவிஞர் தணிகை

 எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவரானது சரியே: கவிஞர் தணிகை



வெளியே போலீஸ் லத்தியுடன் தயாராக இருக்கிறது . அ.இ.அ.தி.மு.க கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டால் அடித்து கலைத்து விட. அதே போலீஸ் தான் சில நாட்கள் வரை எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற அந்தஸ்தில் எங்கு சென்றாலும் ப்ரொட்டோக்கால் என்று சுமார் 10 மீட்டருக்கு ஒரு காவலரை நிறுத்தி பொது மக்களை எல்லாம் வேறு வழியில் செல்லச் சொல்லி அல்லது அவர் போன பின்னால் செல்லுங்கள் எனத் தடுத்து நிறுத்தியதும்.



சில நாட்களில் பாருங்கள் என்ன ஒரு தலைகீழ் மாற்றம். மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். ஆனால் முதல்வராக இருப்பவர் எதிர்க்கட்சித் தலைவராவதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் முதல்வர் ஆவதும் மக்களின் கையில் இருக்கிறது. அதுதான் ஜனநாயகம்.


ஆனால் அது பற்றி எல்லாம் நான் குறிப்பிட இங்கு எதுவும் பதிவிட வில்லை. ஏன் எனில் அ.இ.அ.தி.மு.க கட்சி ஜனநாயகத்தில் சசிகலா உள் வருவதாக அவர்கள் கட்சி தலைமையகத்தில் போஸ்டர் வைத்ததும், பா.ஜ.க 4 உறுப்பினர்களில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைமையை முடிவெடுக்கப் போவது நாங்கள் என பழைய மனப்பால் குடித்து வார்த்தையை விரயம் செய்ததற்கும் மாறாக பொதுச் செயலாளர்தாம் அதாவது ஓ.பி.எஸ் தான் வரவேண்டும் எவ்வளவு தான் விட்டுக் கொடுப்பது, நீங்கள் தாம் முதல்வராக இருந்தீரே எனக் கேட்டதும் மத்திய பி.ஜெ.பி சொல்வார்தாம் வரவேண்டும் என்றதும் தவிடு பொடியாக‌



ஜனநாயக மாண்பு என்றால் என்ன இருக்கும் 65 சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க பிரதிநிதிகளில் 61 பேர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க, 4 பேர் மட்டும் எதிர்த்திருக்கிறார்கள். ஒருமித்த கருத்து அல்லது ஏகோபித்த கருத்தாக த‌லைமையை முடிவு செய்ய முடியவில்லை எனில் யார் பக்கம் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முறையான ஜனநாயகத் தேர்தல் முறையாக இந்தியாவில் இது வரை இருக்கிறது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சரியானதுதான்.


ஊடகங்களுக்கு தீனி கிடைக்க வேண்டுமே என்பதற்காக ஊதிப் பெருக்க வைத்து ஆச்சரியமூட்டும்படியாக எதையாவது எழுதுவது பேசுவது வீடியோ போடுவது என்ற மரபுகள் பழங்கதையானவை. அவை சரியானவையும் அல்ல.


எனவே அப்படி தேர்ந்தெடுக்கப் படுவதில் எந்த சிக்கலும் இல்லை. அப்படித்தான் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவராக. ஓ.பி.எஸ் கோபித்துக் கொண்டு கூட்டம் முடிந்த‌தும் முதல் ஆளாக வெளியில் போனாலும் நியாயம் நியாம்தானே...

இனி எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமிக்கு ஒரு மந்திரிக்குரிய அந்தஸ்து மாநிலத்தில் உண்டு. ஆனாலும் அவர் செய்த வேலையை எல்லாம் ஆராய்ந்து பார்க்க அவசியமும் உண்டு.



ஆறுமுக சாமி விசாரணைக் கமிஷன் இன்னும் ஜெ மறைவு எப்படி என்றெல்லாம் சொல்லவே வெளியில் இல்லை. அதன் பிறகு எவருக்கும் வராத வாய்ப்பு எடப்பாடிக்கு ஊற்றாக கிடைத்தன. ஊற்று அடங்கவில்லை இன்னும் இருக்கும் போல இருக்கிறது. ஆனால் இனி வரும் நீர் வற்றுமா வற்றாதா என்பதையும் அந்த நீர் எதற்கு பயன் என்பதையும் காலம் சொல்லும்.... எக்காலமும் ஒன்று போல இருப்பதில்லை. ஓடமும் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் ஏறுவதை காலம் செய்து விடுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment