Tuesday, May 18, 2021

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு: கவிஞர் தணிகை

  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு: கவிஞர் தணிகை



வணக்கம்


மக்கள் பிரதிநிதிகள் கட்சியை சார்ந்திருக்கக் கூடாது. அவர்கள் மக்கள் அனைவர்க்கும் பொதுச் சேவை புரியவேண்டும் என நீங்கள் ஒரு கொள்கை முடிவுடன் அரசாட்சி அமர்ந்தவுடன் கடைப் பிடிக்க முயற்சிசெய்து வருவது  அனைவராலும் பாரபட்சமின்றி பாரட்டத் தக்கது.

தலைமைச் செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ் முதல் மற்றும் திறமையுள்ள‌ 4 ஐ.ஏ.எஸ் செயலர்களை தனிச்செயலர்களாக நியமித்திக் கொண்டுள்ளது மேலும் நம்பிக்கை பிறக்கிறது நல்லவர்களுடன் கை கோர்ப்பு அவசியம் என்பதாக.



நீங்கள் தலைமையில் இப்படி இருக்கும் போது 


1.உங்கள் கட்சி சார்ந்த ஒருவர் குடித்துவிட்டு, இடுப்பில் வேட்டி கூட நழுவுவதை கையில் பிடித்தபடியே ஊரடங்கு உள்ள நிலையில் பணியில் இருக்கும் ஒரு பெண் காவலரிடம் அதிகார தோரணையில் புரிந்தும் புரியாமலும் பேசுவதை தினமலர் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.


2. திருச்சியில் உங்கள் மாவட்ட கட்சி அலுவலகத்தில் தமிழக அமைச்சர்களில் ஒருவரான அன்பில் பொய்யாமொழி மஹேஷ் அவர்கள் கூட்டம் நடத்தியதாகவும் அதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் /ஆணையர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.


இது போன்ற செயல்கள் எல்லாம் நீங்கள் நல்ல நோக்கத்துடன் ஆள வந்திருக்கும் இச்சூழலை போகப் போக கெடுத்து விடும். ஆரம்பத்திலேயே இப்படி என்றால் இனி எப்படி இருக்குமோ என்ற நிலையை மக்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


எப்படி அம்மா உணவகத்தின் முன் உள்ள விளம்பரப் பலகையை எடுத்து எறிந்த  கட்சியினர் மேல் நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களோ அதே போல இது போன்ற நடவடிக்கைகளிலும் கவனித்து செயல்பட வேண்டும் அப்போதுதான் அரசின் கட்டுப்பாட்டை உங்கள் கட்சியினர் அனுசரித்து நடந்து கொள்வர்.


3. மேலும் முக்கியமாக இப்போது அரசின் மதுக்கடைகள் முழு ஊரடங்கில் மூடப்பட்டு இருப்பது வரவேற்கத் தக்கது. அதை அப்படியே நீடித்து முழுமையாக அரசு மதுக்கடைகளை தமிழகத்திலிருந்து எடுத்து விட்டால் அது புண்ணியமாகும். ஏன் எனில் அதனால் ஏற்படும் சமூகக் குற்றங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.மேலும் இது போன்ற இடைவெளிகளில் கவனித்துப் பார்த்தால் குற்றம் குறைகள் குறைந்திருப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடியும்.

 எனவே மதுக்கடைகள் நிரந்தரமாக எடுக்கப் பட்டால் அது நல் விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் கட்சி ஆட்சி அரசு முறைக்கும் புகழ் சேர்க்கும். இது கடந்த தேர்தலின் போது வெற்றி பெற்றால் முதல் கையெழுத்தாக உங்கள் தந்தை போட்டு அமல்படுத்துவதாக இருந்த திட்டம் தான். அதை ஏன் நீங்கள் துணிந்து செய்யக் கூடாது என ஒரு மக்கள் சேவகனாக நின்று கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி


இவண்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

இணைத் தலைவர்

தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்




No comments:

Post a Comment