Wednesday, March 31, 2021
பானங்கள்: கவிஞர் தணிகை
Tuesday, March 30, 2021
கனவு: கவிஞர் தணிகை
Sunday, March 28, 2021
Cinema சினிமா cinema விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன: கவிஞர் தணிகை
தமிழகமே தேர்தல் வேட்பாளர்களே உஷார்: கவிஞர் தணிகை
மேற்குவங்க தேர்தலில் ஒருசில இடங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்கு பதிவானதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது" : திரிணாமுல் காங்கிரஸ்
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில்,
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் காசிப்பூர் உள்ளிட்ட பல
வாக்குச்சாவடிகளை
பாஜக கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்னணு
இயந்திரத்தில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவானதாகவும்
விவிபேட் இயந்திரத்தில், இது காட்டுவதாகவும் திரிணாமுல்
காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மக்களை வாக்களிக்கவிடாமல் பாஜகவினர் மக்களை தடுத்ததாகவும் எனவே
இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்
எனவும் புகாரில் கூறியுள்ளது. அதேபோல், வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களில்
வெளிப்படைத்தன்மை இல்லையென்று திரிணாமூல் காங்கிரஸ்
கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்தச் செய்தி எதிர்பார்த்தபடி சிலர் சொல்லியபடி வியப்புக்குரியதாக
உள்ளது.
கவனியுங்கள்
மறுபடியும் பூக்கும வரை
கவிஞர் தணிகை.
thanks: puthiya thalaimurai
27th March 8.45.pm
Published
Saturday, March 27, 2021
வாக்குரிமை: கவிஞர் தணிகை
பாரதி யார்?
சம நோக்குப் பார்வை: கவிஞர் தணிகை
Thursday, March 25, 2021
ப்ளாஸ்டிக்ஸ்: கவிஞர் தணிகை
Wednesday, March 24, 2021
விளையாட்டு: கவிஞர் தணிகை
Tuesday, March 23, 2021
எளிய உடற்பயிற்சிகள்: உடல் வளர்ப்போம்: கவிஞர் தணிகை
Monday, March 22, 2021
நாடகம்: கவிஞர் தணிகை
Sunday, March 21, 2021
Cinema சினிமா Cinema
நாடகம்: கவிஞர் தணிகை
Friday, March 19, 2021
முக்தி: கவிஞர் தணிகை
Thursday, March 18, 2021
தாரணை: கவிஞர் தணிகை
Tuesday, March 16, 2021
பிரத்யாஹாரம்: கவிஞர் தணிகை
Monday, March 15, 2021
கார்ல் மார்க்ஸ் : கவிஞர் தணிகை
பிராணாயமம்: கவிஞர் தணிகை
Sunday, March 14, 2021
Cinema சினிமா Cinema
திருமண வரவேற்பு வாழ்த்து மடல்:கவிஞர் தணிகை
திருமண வரவேற்பு வாழ்த்து மடல்
15.03.2021 உமா முருகன் திருமண மண்டபம் கே.கே.நகர்.குப்பம்.
டாக்டர் .அட்லின் அலெக்ஸ் மணப் பெண் ஒரு செயல்பாட்டு அழகி
ராம்கி பாலகிருஷ்ணன் பண்பாட்டுப் பொறியாளரை
கரம் பிடிக்கும் நேரம்
வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன
அழைப்பிதழ் வடிவத்திலேயே 3 வண்ணத்துப் பூச்சிகள்
எண்ணத்தை எடுத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன
வாழ்வில் எண்ணிக்கையடங்கா கூட்டமாய் பறக்கும்
சிலிர்க்கும்...
பூமிக்கும் சாமிக்கும் சாட்சியாக
நீங்கள் இருவரும் கர்வம் கொள்ள
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ
உங்களுடன் நானும்...
இவண்
கவிஞர் தணிகை
த.க.ரா.சு.மணியம்
த.சண்முகவடிவு.
Saturday, March 13, 2021
ஆசனம்: கவிஞர் தணிகை
Friday, March 12, 2021
நியமம்: கவிஞர் தணிகை
Thursday, March 11, 2021
யமம்: கவிஞர் தணிகை
Wednesday, March 10, 2021
தியானப் பயிற்சி முன்னுரை இரண்டாம் பாகம்: கவிஞர் தணிகை
Tuesday, March 9, 2021
தியானப் பயிற்சி: முன்னுரை: கவிஞர் தணிகை
Monday, March 8, 2021
உலக மகளிர் (2021) தினத்தில்: கவிஞர் தணிகை
cinema சினிமா cinema:அன்பிற்கினியாள்
Saturday, March 6, 2021
தொடரும் கதை: கவிஞர் தணிகை
மிக அவசர அவசியம்: கவிஞர் தணிகை
மிக அவசர அவசியம்: கவிஞர் தணிகை
இந்தக் கட்டுரை நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. 300 கோடி மக்கள் ஆரோக்யமான உணவை வாங்க முடியா நிலையிலும் 68 கோடி மக்கள் பட்டினியால் இருக்கும் சூழலிலும் உலகில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 93 கோடி டன்கள் உணவு வீணடிக்கப்படுவதாகவும் இந்தியாவில் அது சுமார் 7 கோடி (6.8 கோடி) டன்களாக இருந்தது என்றும் 2020ல் அதன் கணக்கீடு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் ஐ.நா சார்ந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது
எனவே இப்போதைய அவசர அவசியத் தேவை என்னவெனில் மாந்தராய் பிறந்த அனைவருமே இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் உணவுப் பொருட்களை வீணடிக்கவே கூடாது என்றும் அது மாபெரும் குற்றமாகக் கருத வேண்டும் என்றும் சபதம் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்., சட்டம் எல்லாம் இயற்றப் பட்டுகூட இதை தடுக்கலாம்.
ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் அதன் கூட்டு நிறுவனம் இணைந்து எந்தளவு உணவு வீணாகிறது என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் 2019-ல் உலகளவில் 93 கோடி டன்கள் அளவிற்கு உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வீணடிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் 61% வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு சேவை நிறுவனங்களாலும், 13% சில்லறை விற்பனையாலும் ஏற்பட்டுள்ளது. வீணடிக்கப்பட்ட உணவுகளின் அளவு, மொத்த உலக உணவு உற்பத்தியில் 17% வரை இருக்கக் கூடும் என்கின்றனர். வீணான இந்த உணவு பொருட்களை லாரிகளில் ஏற்ற வேண்டுமானால் 40 டன் கொள்ளளவு கொண்ட 2.3 கோடி லாரிகள் தேவைப்படும். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தினால் உலகையே 7 வட்டமடிக்கலாம் என ஐ.நா., அமைப்பு கூறுகிறது.
மேலும், ஐ.நா., அறிக்கையின் படி, இந்திய வீடுகளில் வீணாகும் உணவின் அளவு ஆண்டுக்கு 6.8 கோடி டன்கள் ஆகும். இது அமெரிக்காவில் ஆண்டுக்கு 1.9 கோடி டன்கள், சீனாவில் 9.1 கோடி டன்களாக உள்ளது. ஓட்டல்கள் போன்ற உணவு சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் முறையே 5% மற்றும் 2% வீணடிக்கின்றன. பருவநிலை மாற்றம், இயற்கை, பல்லுயிர் அழிவு, சூழல் மாசு போன்ற பிரச்னைகளை சமாளிக்க உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், குடிமக்கள், தொழில் நிறுவனங்கள் உணவு வீணாவதை குறைக்க தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வளவு உணவு வீணடிக்கப்பட்ட அதே 2019-ல் உலகம் முழுவதும் 69 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு வீணாகாமல் தடுப்பது எப்படி
கொரோனா பாதிப்பால் இந்த எண்ணிக்கை 2020-ல் உயர்ந்திருக்கும் என்கின்றனர். மேலும் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே வீடுகளில் உணவு வீணாவதை குறைக்க உதவி தேவை என்று ஐ.நா., கூறுகிறது. உணவு வீணாவதை குறைப்பதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை குறைக்கலாம், மாசுபாட்டை குறைக்கலாம், இயற்கை அழிவது குறையும், பட்டினி குறையும், பணம் மிச்சமாகும் என்கின்றனர்.
நன்றி: தினமலர்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை