Saturday, November 11, 2017

அறம்: கவிஞர் தணிகை

அறம்: கவிஞர் தணிகை

சினிமா:
Related image



 நயன் தாராவை அடுத்த நிரந்தரமான முதல்வராக‌ அல்லது பிரதமராகவும் உள்ள வாய்ப்பை இவர்களது இரசிகர்கள் நினைக்க, கனவு காண வைக்க மாவட்ட ஆட்சியராக இருந்து பணியை உதறித் தள்ளி மக்கள் சேவைக்கு வந்துவிடுவதாக சொல்லும் படம். இந்தப் படம் இவருக்கும் ;இவரது இரசிகர்களுக்கும் பெரும் பேரை சிக்கனமான பொருட் செலவிலே கச்சிதமாக கொடுத்து விடுகிறது காரணம் இதன் கதையமைப்பு கருப்பொருள் சமூகத்தாக்கம் நிரம்பிய சவலான கேள்விகள்...

நீண்ட நாளுக்குப் பிறகு நயன் தாராவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு நல்ல பேர் இந்தப் படத்தின் மூலம். நடிப்புக்கே இந்தப் பேர் என்றால் உண்மையாக இப்படி இருந்தால் பேர் எப்படி இருக்கும் என்று சொல்ல ....உண்மையில் இருப்பார்க்கும் கூட இப்படி பேர் வருவதில்லை. ஆனால் இப்படி நடித்தாலே உலகப் புகழ் பெற்று விடுகிறார்கள்.

 சினிமாத் துறை அத்தனை விளம்பரத்தை சுலபமாக பெற வைத்து விடுகிறது. எனவே நயன் தாராவுக்கு இது காலமெல்லாம் நினைத்துப்  பார்க்க நினைவில் நிற்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் சினிமா மூலம் நல்லதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை கனவை விதைத்திருக்கிறது. அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடிக்கிறோம் என்றெல்லாம் நினைக்காமல் எளிமையான உடையுடன் ஒப்பனையுடன் சத்யவதியாக மதிவதினி என்னும் பாத்திரத்தில் உறைந்திருக்கிறார்.

நிறைய கேள்விகள் கேட்கப்படுகிறது கோபி நயனார் மூலம் கதையாக, விதையாக, இயக்கமாக இன்றைய ஆட்சிமுறைகளுக்கு எதிராக, கட்சி அமைப்புகளுக்கு சவாலாக...

சுமார் 2 மணி நேரம் ஓடும் படம் கடைசிவரை நம்மை அத்துடன் பிணைத்து விடுகிறது. அதுவும் எமது ரோகிணி கலெக்டராக சேலம் மாவட்டத்திற்கு வந்து சுற்றி சுழன்றாடி வருகையில் அவரையும் நினைத்தபடி இந்தப் படத்தைப் பார்ப்பதிலிருந்து விடுபட முடியவில்லை.

ஜெயமோகனின் அறம் என்னும் சிறுகதையை ஜெயமோகனின் தளத்தில்  நண்பர் நாகா மூலம் வாட்ஸ் அப் மூலம் தூண்டப்பட்டு படித்துப் பார்த்துவிட்டு, இலட்சுமி, களைவு என்னும் குறும்படங்களையும் செய்தித் தூண்டல்களால் பார்த்துவிட்டு இந்தப்படத்தையும் பார்த்தேவிடுவது என்ற தூண்டலால் பார்த்து முடித்துவிட்டோம் இதயம் கனமாக.

நயன் தாரா, கிட்டி தவிர எல்லாமே மற்ற யாவருமே சிறு பாத்திரங்களை சினிமாவில் ஏற்ற நடிகர்களை வைத்தே அருமையான படத்தை செய்து முடித்திருக்கிறார் இயக்குனர் அனைவர்க்கும் தெரிந்த கருப்பொருள் செய்தியை வைத்தே ஒரு நல்ல படத்தை தந்து விட்டார்.

ஆழ்துளைக் கிணறுகளை தோண்டிவிட்டு நீர் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மூடாமல் விடப்படும் ஆழ்துளைகள் எப்படி சிறுவர் சிறுமியர் தவறி விழக் காரணமாகி விடுகின்றன அவை எப்படி உயிர் விடுகின்றன, அப்படி அங்கிருந்து காப்பாற்றப்பட்டாலும் எப்படி மருத்துவமனைகளில் உயிர் பிரிகின்றன அவற்றுக்கு எல்லாம் அஞ்சலி என்றும் அவை இனி நடக்காமல் இருக்க அரசும் மக்களும் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பும் சமூக விழிப்புணர்வூட்டும் சமூக நாடித்துடிப்புள்ள படம்.

உலகெமெலாம் நேற்று சன் தொலைக்காட்சி வெளியிட உரிமம் பெற்றுள்ள படம் நேற்று வெளியாகி உள்ளது. எல்லாத் தரப்பிலுமே நல்ல பேர் பெற்றும்  விட்டது . நமக்கு படம் பார்க்கும் உணர்வே இல்லாமல் நமது கண்முண் பார்க்கும் உண்மைச் சம்பவமாக மிக இயல்பாக தத்ரூபம் என்பார்களே அது போல உயிர்ப்புடன் படம் உள்ளது .

அரம்பத்தில் மிகவும் சாதாரணமாக தண்ணீர் பஞ்சத்தின் கதையுடன் ஆரம்பிக்கும் படம் இருபது இருபத்தைந்து நிமிடங்களுக்கும் மேல் கதையுடன் பயணிக்கிறது. ஆழமாக 140 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி தன்ஷிகாவின் தவறி விழுந்த சம்பவத்துடன்.

அரசியல் வாதிகள், ஊடகங்கள், அரசு அலுவலர்கள் எப்படி அதை அணுகுகிறார்கள், உண்மையான ஆத்மார்த்தமான ஒரு மக்கள் பணியாளர் எப்படி அணுகுகிறார் என்பதுவே படத்தின் கதை.

என்பிலதனை வெயில் போலக் காயுமாம்
அன்பிலதனை அறம்.

 பாராட்ட வேண்டும்

இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக எப்போதோ செய்தி படித்த நினைவுடன்

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

சினிமாவாக பார்க்க முடியாமல் ஒரு நிகழ்வாகவே படம் செய்திருப்பது பற்றி இயக்குனர் கோபி நயனார், தயாரிப்பாளர் கொட்டப்பாடி ராஜேஸ், ஒளிப்பதிவாளர்:ஓம்பிரகாஷ், தொகுப்பாளர்(எடிட்டர்:ரூபன்) அனைவரையும் பாராட்டுகிறோம். சினிமா என்றாலும் நூற்றுக்கு 65 மதிப்பெண்களைத் தரலாம். ஒரு நல்ல சினிமா, தெரிந்த சம்பவத்தை வைத்தே இப்படி இரசிக்கும்படியாக தயாரித்து வெளியிட்ட அனைவரையும் வாழ்த்துகிறோம்.

3 comments:

  1. நல்ல தகவலுக்கு நன்றி.
    இனி தான் படத்தை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. thanks for your participation with this post. vanakkam.

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம். நன்றி.

    ReplyDelete