Sunday, November 12, 2017

வயதான காலத்தில் கடினமின்றி உடற்கழிவுகள் நீங்கினாலே பேரின்பம்:= கவிஞர் தணிகை.

வயதான காலத்தில் கடினமின்றி உடற்கழிவுகள்   நீங்கினாலே பேரின்பம்:= கவிஞர் தணிகை.


Related image
சுஜாதா தம் 70 ஆம் வயதில் நிலவு, கனவு, எல்லாம் போய் காலையில் எழுந்தவுடன் மலம் சிக்கலின்றி கழிவதே சுகமானது என்றும், கி.ராஜநாராயணன் உரிய நேரத்தில் சிறு நீர் கழிப்பதும், மலத்தை வெளியேற்றுவதும், காற்றுப் பிரிதலுமே பேரின்பம் என்றும் எழுதிச் சென்றார்கள் என்றால் அதில் நிறைய அனுபவ அறிவு இருக்கிறது.

நானறிந்த பெரியவர் ஒருவர் 4 ஆம் வகுப்பு படித்தவர் ஆனால் ஒரு கோடீஸ்வரர், வயதான காலத்தில் பெரிய வயிற்றுடன் இருப்பார், இவருக்கு மலம் கழிதலும், சிறு நீர் கழித்தலுமே பெரும் பிரச்சனையாக மாறி உடலெல்லாம் எரிகிறதே என ஆடை கூட அணிய முடியவில்லையே என்று உயிர் பிரிந்த கதை எல்லாம் நாமறிந்ததுதான்.

பெரும்பாலும் உடல் இயக்கங்கள் மெதுவாக ஒவ்வொன்றாக இயங்க மறுத்து அடம் பிடித்து உடற்கழிவுகளை வெளியேற்றாமல் இருப்பதுவே அவர்களது முடிவுக்கு காரணமாக இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இருதயம் இயங்கவில்லை, நுரையீரல் இயங்கவில்லை, சிறுநீரகம் இயங்கவில்லை, மலம் கழியவில்லை....இப்படியாக சொல்வார் வயதில் பெரியார்கள்,

 ஏன் பெரியார் ஈ.வெ.ரா கூட சிறு நீர் சொம்பை கூட கொண்டு சென்று கொண்டே கூட்டத்தில் பங்கெடுத்ததாக அறிகிறோம். அவர் பகுத்தறிவு பகலவன் என்ற போதும், தம் உடலின் செயல்பாட்டுக் குறைபாடுகள் என்பது அனைவர்க்கும் பொருந்தும் அது ஞானி, முனிவர், சித்தர், யோகி , தவசீலர் என்ற போதும் ஆனால் அவர்கள் உடல் ஓம்பும் முறைகளை தம் தவ வாழ்வில் நியமங்களாக கடைப் பிடித்தமையால் உடல் அப்படி பெரிய அளவில் துன்பம் கொடுத்து முடிவுகளை ஏற்படுத்தவில்லை.

Related image

ஆக வயது ஏற ஏற 40 , 60, 80 என்று வயது ஆக, ஆக, சாதாரணமாக அன்றாடம் அவ்வப்போது செய்ய வேண்டிய சிறு நீர் கழித்தலும், மலம் கழித்தலும் இயல்பான உடல் உபாதைகளையும் உடல் இயக்கம் செய்து கொண்டிருந்தாலே அது பெரிய சுகமாகிவிடுகிறது.

அதே போல்தான் வியர்வை வெளியேறுவதும்...ஆனால் அதிகமாக வியர்ப்பது மாரடைப்பின் அறிகுறி என்றும் அடையாளங்களாகிவிடுகின்றன.

எனவே பள்ளிப் பிள்ளைகளுக்கும், நம் வீட்டின் குழந்தைகளுக்கும் உடல் பராமரிப்பு முறைகளை முறையாக எப்படி செய்வது என்று கற்றுக் கொடுப்பதுவே முதன்மையான கல்வியாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர்கள் அதைப்பற்றி கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு உகந்த உரிய கல்வியாளர்களை, வல்லுனர்களை கேட்டு படித்தறிந்து பயன்படுத்துவது பக்குவமான அறிவின் செயல்பாடு ஆகும்.

ஏன் எனில் கல்லூரிப் பருவம் எய்திய மாணவர்களுக்கும் முதிய வயதினர்க்கும் கூட எப்படி வாய் சுத்தம் செய்து கொள்வது, பல் விளக்குவது, ஆசனவாய் சுத்தம் செய்வது, குளி(ர்)ப்பது, உடலைக் குளிர்விப்பது நடைப்பயிற்சி செய்வது, துவட்டிக் கொள்வது, நீர் பருகுவது, உணவு உண்பது, பற்றிய நிறைய குளறுபடிகள் உள்ளன.

இவை எல்லாம் ஒரு ஒழுங்கமைய இருக்கும்போது உடலின் செயல்பாடு நீண்டு சீராக இயங்கி ஆயுள், வாழ்நாள் அதிகரிக்கவே செய்கிறது. இப்படி இருப்பார்க்கும் விபத்து போன்றவை நேரலாம் அது வேறு.

தினம் இரண்டு, வாரம் இரண்டு, மாதமிரண்டு, ஆண்டுக்கிரண்டு பற்றி எல்லாம் ஏற்கெனவே பல முறை சொல்லிவிட்டதால் அதை இங்கு மேலும் விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். இதற்கெல்லாம் சரியாக நேரம் ஒதுக்காத போது உடல் சரியாக பணி புரிய மறுக்கிறது அதன் விளைவாக நிறைய நோய் வாய் பிணிகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சாக்லேட், கேக், சமோசா, பிட்சா போன்ற பேக்கரி /அடுமனை தின்பண்டங்களை உண்ணக் கூடாது என பல் மருத்துவர்கள் சொல்வதுண்டு அது ஏன் எனில் அவை எல்லாம் உடலுள் சென்று செரிமானம் ஆனது போக எஞ்சியிருப்பவை குடலின் உட்புறச் சுவர்களில் படிந்து கொள்கிறது மலமிளக்காமல் கட்டிப்பட்டு நிற்க காரணமாகிவிடுகிறது. இதன் பலனாக சோம்பல் உணவு உண்ணும் அளவு குறைவு, வயிறு உப்புசம் வயிறு பெருத்தல், வாய்வு பிரிதல், துர்நாற்றமான வாயு பிரிதல், போன்ற உடலின் செயல்பாட்டுக் குறைவின் அறிகுறிகள் தோன்றுகின்றன.


Related image

எனவே உடனே மலச்சிக்கலை நீக்க ஆவன செய்ய வேண்டும். நீர் நிறைய பருகுவதும், மலக்குடலுள் குதத்துள் விரலை விட்டு வெளிநீக்கி சுத்தம் செய்வதும் அவசியமான செயல்பாடாகிவிடுகின்றன.

அனுபவத்தை சொல்கிறேன், நிறைய சாக்லேட் சாப்பிட்டதால், ஒருவருக்கு இப்படித்த்தான் வயிறு பெருத்தது போலாகி, உணவின் உட்கொள்வதன் அளவு குறைந்து ஒரு வாறான உடல் இறுக்கம் ஏற்பட்டது.

ஒரு நாள் அவர் தம் மலம் கழித்தலை சீர் செய்ய உடலே புதுப்பிக்கப்பட்டது போன்றும் அதன் பின் சனி நீராடி மேலும் உடலை புதுப்பித்துக் கொண்டதும் மறுபிறப்பை எய்தியது போன்றும் ஆகிவிட்டது என்கிறார்.

உடல் சூட்டை தணிக்க இரவில் தலைக்கு, தொப்பூள் குழிக்கு, கால் பாதத்துக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பதுவும், கண்களை அடிக்கடி வாயகன்ற அகலச் சட்டியில் (அவலச் சட்டி என்று பெரியவர்கள் சொல்வதுமுண்டு குளிர்ந்த நீரை வைத்து அடிக்கடி கண்களை அதில் மூழ்கி எடுத்து பயிற்சி செய்வது போன்ற சிறு சிறு நுட்பமான பயிற்சிகளும் அமர்ந்து அமர்ந்து எழுவது போன்ற பயிற்சியில் வயிற்றை சுருக்கி பிதுக்கி உள் இருக்கும் கழிவை வெளியேற்றுவதும் செய்யலாம்..

அதே போல எந்தக் கழிவுகளுமே பெரும் துர்நாற்றமாக மாறிவிடக் கூடாது அப்படி மாறினாலே அவர்கள் உடல் கெட்டிருப்பது சான்று. மேலும் அவர்கள் உண்டதும் சரியல்ல....ஆட்டுப் புழுக்கை உரம், மாட்டுச் சாணம் எரு, பன்றி மலம் நெல்வயலுக்கு ஏற்ற சிறந்த உரம் இப்படி எல்லாம் விலங்குகளின் எச்சங்களே இருக்கும்போது மனிதக் கழிவுகள் ஏன் அப்படி இல்லை எனில் அவர்கள் உண்ணும் உணவின் தரமற்ற நிலையே காரணம். எனவே நாம் முன் சொன்னபடி அந்தக் காலத்தில் மலத்தை குழிபறித்து இருந்து மூடி வைத்து விட்டு வந்து ஆசன வாயை சுத்தம் செய்து கொள்வார்களாம் அவையும் எருவாக மாறும் என்பார். எல்லாம் ஒரு சுழற்சிதான் விவரமாக சொன்னால் ஏற்க முடியாதுதான்.சுருக்கமாக சொன்னாலும் அசிங்கமாகிவிடும்தான். மலம் துர்நாற்றமின்றி இருக்குமாறான உணவை தேர்வு செய்து உண்ணுங்கள் மலச்சிக்கலின்றி நோய் நொடி இன்றி வாழுங்கள் நீண்ட ஆயுள் நிலைத்த பாரம்பரியம் மலர வளர வாழ்த்துகள்...
Related image


ஆனால் இவற்றுக்கு எல்லாம் வழியில்லாமல் உண்ணும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றிலேயே நேரம் காலம் சரிவிகிதம் என மேற்கொள்ளும்போது வாழ்வு சுலபமாகி விடுகிறது இப்போது இன்னொரு மருத்துவ நண்பர் நின்று கொண்டு நீர் குடிப்பார்க்கு வாதம், மூட்டு வலி போன்றவை வரும் என்றும் எனவே அமர்ந்த நிலையில் மட்டுமே நீர் அருந்த வேண்டும் என்றும்,
காலை அதிகாலை நீர் பருகுவதும், உணவு உண்ட 40 நிமிடம் கழித்து நீர் பருகுவதும் நீர் பருகுவதன் சிறந்த முறை  என்கிறார். அதையும் இதையும் எதையும் பரிசோதித்தறிந்து விட்டு உண்மையானால் மேலும் பகிர்ந்து கொள்கிறேன்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam

    ReplyDelete