Tuesday, November 28, 2017

ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது மின் தடங்கல் ஏற்பட்டால்? கவிஞர் தணிகை

ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது மின் தடங்கல் ஏற்பட்டால்? கவிஞர் தணிகை
Image result for if Electricity stopped while taking money in Atms?



இது என்னுடன் ரயிலில் பயணம் செய்யும் ரெயில்வே பணியாளர்க்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவம். அவர் ஓமலூரில் உள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்கில் ரூபாய் 2000 எடுக்கும்போது மின் தடங்கல் ஏற்பட பணம் வரவில்லை. இவர் எடுக்கவில்லை. ஆனால் இவரின் ஸ்டேட் பாங்க் கணக்கில் எடுத்ததாக பணம் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு விட்டது.

அப்படி நேரும்போது அந்த ஏ.டி.எம் சி.சி.டி.வியில் தமது கார்டை காண்பித்துவிட்டு தமது முகத்தையும் காண்பிக்கலாம் ஏன் உண்மையைக் கூட பகிர்ந்து சொல்லிக் கொள்ளலாம். அது பதிவாகும்.

அதன் பின் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த ஏ.டி.எம். நடத்தும் வங்கியின் அண்மையக் கிளைக்கு சென்று தமக்கு நேர்ந்ததை விவரித்து வேண்டுகோளை வாய்மொழியாகவும், எழுத்து மூலமும் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

ஆனால் இதை எல்லாம் இவர் செய்யவில்லை. இரவு நேரம் என்பதால் இவர் வங்கியை அணுக எந்த வித முயற்சியும் எடுக்க முடியாமல் எடுக்காமல் மறு நாளில் இருந்து தமது ரெயில்வே பணிக்கு செல்ல ஆரம்பித்ததுடன் தாமாக எங்கும் இதற்கான முயற்சி எடுக்காமல் தமது தந்தையை அனுப்பி ஸ்டேட் பாங்கை அணுகி இருக்கிறார்.

 ஸ்டேட்  பாங்கிற்கு தமது தந்தையை அனுப்பி பார்க்கச் சொல்ல, அவர்கள் பணம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது எனவே கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. கணக்கு யார் பேரில் உள்ளதோ அவரையே வந்து பார்க்கச் சொல்லுங்கள். எனத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

தம்பி மாது என்ன சொல்கிறார் எனில் இது இரண்டாயிரம் சரி, ஆனால் என் சம்பளம் எடுக்கும்போதும் இப்படி நடந்திருந்தால் எல்லாமே போய்விடுமே...என அங்கலாய்க்கிறார்.

தொடர்புடைய ஏ.டி.எம் வங்கிக் கணக்கிலும், ஏ.டி.எம் எந்திரத்திலும் எடுக்காத இவர் பணம் பற்றிய மிச்சம், எச்சம், சொச்சம் இருக்க வாய்ப்புண்டு. அல்லது மின்சாரம் வந்த பின்னே யார் முதலில் எடுத்தார்களோ அவர்களுக்கும் கூட கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

இதை எல்லாம் ஆய்ந்து பார்த்து இவருக்கு நீதி வழங்கும் முன் மிகவும் கால தாமதம் ஏற்பட்டு இவர் விரக்தி நிலைக்குத் தள்ளப்படலாம்.இந்தியாவில் இது போன்ற எந்திரத்தனமான தவறுகள் நடந்தபடியேதான் இருக்கின்றன தீர்வு சொல்லப்படாமலே..

ஷாக் அடிக்காத கரண்ட்,மூடப்படாத ஆழ்துளைக்குழாயில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றி மீட்கும் எந்திரம், பனை தென்னை ஏறும் எந்திரம், தேங்காய் உரிக்கும் எந்திரம், நிறைய விவசாயம் தொடர்பான கருவிகளும், வாகனங்களும், எந்திரங்களும் இன்னும் பெரிதும் பயன்பாட்டுக்கு வரும் வண்ணம் எந்த அரசுகளும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

தடை இல்லாத மின்சாரம் என்பார் ஆனால் அது தடையில்லாமல் வார்த்தையில் மட்டும்...வரும்.


ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும்போது இது போன்ற தடங்கல் ஏற்பட்டால் அதை எப்படி சரியாகவே எப்போதும் போல வழக்கம்போல் இயக்கி வாடிக்கையாளருக்கு ஒரு இடையூறும் இல்லாமல் செய்வது என்ற உத்தி பயன்படுத்தப் பட வேண்டுமல்லவா? மேலும் அவசியமான சேவை எல்லாம் 24 மணி நேரமும் இருக்க வேண்டுமல்லவா?

இதை எல்லாம் விட்டு விட்டு ட்ரம்ப் மகளுக்கு உலகிலேயே மாபெரும் விருந்தும் அதில் உலக அழகி எல்லாம் கலந்துகொள்வதும் இந்தியா ஒரு பக்கம் மிக வளர்ந்தும் மறுபக்கம் மிக தேய்ந்துமாக...


சரி இது ஒரு சிறிய விஷயம்தாம் எங்கும் நடைபெறுவதுதான் இதற்கு எதற்கு இந்தப் பதிவு என்கிறீர்களா? அவரவர்க்கு நேரும்போதுதான் அந்த வலி தெரியும். நாம் இந்தப் பதிவின் மூலம் அது போன்ற வலியை பெறுவார் சார்பாக ஆதரவாக நிற்கிறோம். இனியும் இது போன்ற அரசின் மெத்தனப் பிழைகள் சாதாரண அப்பாவி மனிதர்களை ஏ.டி.எம் வாசலில் தமது சுய சம்பாத்தியப் பணத்தை எடுக்க முடியாமல் பசியால் தடுமாறி தமது பயன்பாட்டுக்கே அந்தப் பணம் பயன்படாமல் பிணமான பின்னும் போய்விட்டதே என்ற அவலங்கள் நேரக்கூடாது இனியும் என்ற ஆதங்கத்தில் சொல்கிறோம்

சரி அரசியல் நிலவரம், கலவரம் களேபரத்துக்கு வருவோமா? கமல் பாரதிய ஜந்தாவுடன் கூட மக்களுக்குத் தேவையென்றால் கூட்டு வைத்துக்கொள்வாராம் முதிர்வில்லாத அரசியல் தடம் பதிக்க ஆசைப்படும் விஸ்வரூபக் குழந்தை.

எடப்பாடி அணிக்கு தினகரன் எம்.பிக்கள் எம்பி எம்பி போய்விட்டார்கள்..

குஜராத் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து அத்வானிக்கு விலக்கு அளித்து விட்டார்கள்

ஆர்கே நகர் 21 ஆம் தேதி டிசம்பரில் களை கட்டு முன்னே  கட்டு கட்டாக பணம் நகருள் சென்று கொண்டிருப்பதாக செய்திகள்...இதை தேர்தல் ஆணையம் தடுக்கிறோம் என சூளுரை.

இரு அணிகளும் இணைந்த திருப்தியும், இரட்டை இலையும் மாயம் செய்யும் என்று மனப்பால் குடிக்கும் அ.இ.அ.தி.மு.கவும், இந்த முறை சென்னையில் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க வென்றே தீரும் என்ற நம்பிக்கையில் அவரக்ளும், மற்றவர்கள் பற்றி எல்லாம் எழுதி உங்கள் நேரமும் என் நேரமும் எந்நேரமும் விரயம் ஆகிடக் கூடாது விட்டு விடுவோம்.

விவசாயிகளுக்கு முகம் காட்டாத‌ பிரதமர் ட்ரம்ப் மகளுக்கு விருந்து கொடுப்பதன் வாயிலாக கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க இருக்கிறார் மாபெரும் விருந்து கொடுத்தோர் என்ற பட்டியலில்.

ஆள் பார்த்து சலான் எழுதி லெட்ஜரில் போஸ்ட் செய்து டோக்கன் கொடுத்து பணம் கொடுத்த காலம் பரவாயில்லை. மனிதத் தொடர்புகள் இருந்தன. இப்போது எந்திரத்தனமாக மனிதம் மாறிவிட்டது. ஏ.டி.எம்மில் வரும் கள்ள நோட்டை வங்கிக்கு வெளியில் சென்றுவிட்டு வந்து மறுபடியும் கேட்டவர்க்கு அதைப்பற்றிய விளக்கமில்லை. அதை மாற்றித் தரவுமில்லை.

வாழ்க பாரதம். வாழிய மணித்திரு நாடு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


All our ATMs have a telephone which you can just pick up and you are connected to the call centre. You can inform the call centre or the branch, whichever is convenient.”
some solutions:

with in 12 days the complaint should be resolved by the bank.

Always ask for a receipt for every ATM transaction. Details such as exact time of withdrawal, the transaction number, the ATM or branch number and the amount would be specifically mentioned in the receipt. In case you haven’t asked for a receipt, you can manually note down the details by asking the non-available details from the security guard or the nearest bank branch.
Also, in case the money has not popped out, make sure you have an eye witness to the incident.

2 comments: