Tuesday, August 30, 2016

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் இளநிலைப் பல் மருத்துவ பட்டமளிப்பு விழா: கவிஞர் தணிகை

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் இளநிலைப் பல் மருத்துவ பட்டமளிப்பு விழா: கவிஞர் தணிகை




27.08.16 அன்று சேலம் ‍ஹோட்டல் பார்க் பிளாசா ரேடிசனில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் இளநிலைப் பட்டமளிப்பு விழா இனிதே நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் வாய், தாடை, பல் மருத்துவ அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர். ரீனா பேபி ஜான் வரவேற்புரை நிகழ்த்தி கல்லூரியின் சார்பாக அனைவரையும் வரவேற்றார்.

67 இளம் பல் மருத்துவர் பட்டங்கள் பட்டதாரிகளுக்கு வழங்கப் பட்ட இந்த அரிய விழாவில்



தெய்வத் திரு டாக்டர் எ. சண்முகசுந்தரம் நிறுவனர், வேந்தர் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம் ‍ சேலம் அவர்களின் அருளாசியுடன்

திருமதி அன்னபூரணி சண்முகசுந்தரம் அம்மா
விநாயகா மிஷன் அறங்காவலர் கருணை கூர்ந்து தலைமையேற்று பட்டம் வழங்கிட‌



மாண்புமிகு என்.வி.சந்திரசேகர், துணைத் தலைவர் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழகம்

திரு. என். ராமசாமி, இயக்குனர் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழகம்

திரு.கே.ஜெகன்னாதன், இயக்குனர் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழகம் ஆகியோர் முன்னிலையில்

சிறப்பு விருந்தினராக டாக்டர் சி.எல். பிரபாவதி, தேர்வு அதிகாரி விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழகம் அவர்கள் கலந்து கொள்ள‌




தலைமை விருந்தினராக டாக்டர் .நாகலட்சுமி சவுத்ரி,பேராசிரியர் மற்றும் சிறுவர் பல் மருத்துவத் துறைத் தலைவர்,
சித்தார்த்தா பல் மருத்துவக் கல்லூரி தும்கூர் கர்நாடகா,மற்றும்
இந்தியப் பல் மருத்துவ சபை உறுப்பினர் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தி பட்டம் பெற்ற அனைவரையும் பாராட்டி கிராம மக்களுக்கும் மருத்துவ சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜே.பேபிஜான் உறுதி மொழியை முன் மொழிய அனைத்து மாணவர்களும் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை கல்லூரியின் விளையாட்டு மற்றும் கலாச்சாரத் துறை ஒருங்கிணைப்பாளர் தொகுத்து வழங்கினார்.




மிகவும் அல்லலுறும் நாட்டு மக்களுக்கு தமது சேவையை இந்த இளம் மருத்துவர்கள் அர்ப்பணிப்பார்களாக!. மட்டற்ற மகிழ்வுடனும் அளவற்ற ஆசிகளுடனும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இது ஒரு அறிக்கை.

No comments:

Post a Comment