தணிகையின் பார்வையில்
தலையாய குறள்கள்
100
பதிப்பாசிரியர்;
கவிஞர் சு. தணிகை
உரிமை:
பதிப்பாசிரியர்க்கே
வெளீயீடு:
தெய்வா பதிப்பகம்
11 125 புதுசை
மேட்டூர் அணை 636 403
பிறர்க்குதவிடும்
செய்கையே
எல்லாக் கவிதைகளிலும்
சிறந்தது.
A.P.J.Abdul Kalam Rashtrapati Bhavan
New Delhi..110 004.
மேதகு குடியரசு தலைவர் டிசம்பர் 23, 2004.
திரு தணிகாசலம் அவர்களுக்கு,
வணக்கம்.
நாட்டில் லஞ்ச ஒழிப்பு, எண்ணம் செயலாக மாறவேண்டும்( இது அவரின் சொந்த கையெழுத்தில் எழுதி துவக்கிய கடிதம்) இலஞ்சத்தை நம் நாட்டிலிருந்து ஒழிக்க நான் பரிந்துரைத்த வழி, ஒவ்வொரு தனிமனிதனின் மாற்றத்தின் மூலம், ஒவ்வொரு இல்லத்திலும் ஆரம்பமாக வேண்டிய ஒன்று. நல்லொழுக்கத்தோடும், இலஞ்சமில்லா மனப்பான்மையோடும் வாழ முற்படுபவர்கள் நிறைந்த குடும்பங்கள் பெருகப் பெருக, இலஞ்சமில்லா தேசம் தானாகவே உருவாகும். ஆகவே ஒவ்வொருவரும் தத்தமது இல்லங்களில் இலஞ்சம் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் எதிரான அணுகுமுறையை அவரவரது குடும்பத்தினரிடம் ஏற்படுத்த வேண்டும்.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஆ .ப.ஜெ அப்துல் கலாம்
(கையெழுத்து)
தணிகையின் பார்வையில்
தலையாய குறள்கள்
100
தமிழ் கூறும் நல்லுலகில் வள்ளுவனை தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு இன்று (எய்ட்ஸ் நோயில்) முதலிடம் மற்றும் இலஞ்ச ஊழலில் முன்னிடம்.
உலகப் பொதுமறையை ஈந்து உலகின் வழிகாட்டியான இந்தியா, தமிழகம் என்றும் தரணிக்கு தாய்வீடு. இனியும் விழிக்கவில்லையெனில் நல்லவைக்கெல்லாம் சாவுமணிதான்.
பட்டுக்கோட்டை பதைத்தபடி:
சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும் புத்தரும் யேசுவும் உத்தமராம் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வைச்சாங்க, எல்லாந்தான் படிசீங்க, என்ன பண்ணி கிழிச்சீங்க? என்பதற்கேற்ப, குறள் ஒன்றே போதும் உலகு உய்ய வழி!
இதில் உள்ள 1330 குறள்களை எல்லாம் மனப்பாடம் செய்து பரிசு வாங்க வேண்டுமென்பதில்லை, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு குறளை பற்றிக் கொண்டால் போதும்.
ஒரு குறளுக்கு அர்த்தமாகி வாழ்ந்தாலே போதும் அரிச்சந்திரன் கதையைப் பார்த்து மோகன் தாஸ், மகாத்மா ஆனது போல.
எனவே 1330 குறள்களிலிருந்து ஒரு 100 குறள்கள் மட்டுமே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.பள்ளிப் பிள்ளைகளுக்கு, இளஞ்சிறார்களுக்கு, இளைஞர்களுக்கு, பல்வேறுபட்ட தரப்பினருக்கும் பயன்படும் வண்ணம்.
பாராட்டோ, பெருமைகளோ இந்நூலின் எதிர்பார்ப்பல்ல, மாறாக இது போல பல நூல்கள் வழி வர வெளியிட உதவிடுங்கள்!
தயாரிப்புச் செலவில் பங்கு கொள்வீர், பிரதியாக நூலைப் பெற்றுப் பயனுறுவீர்!
தரித்திரமாற்றி
சரித்திரம் படையுங்கள்
ஒவ்வொருவரிலிருந்தும் அற்புதங்கள் நிகழும்
அவை
அற்பங்களை அகற்றி
பேரொளியுடன் மிளிரும்.
ஒரு காந்தி, ஒரு யேசு, ஒரு புத்தன், ஒரு வள்ளுவர், ஒரு நபி,ஒரு பாரதி,அப்படிப்பட்ட ஒரு..............நீங்களாகவும் ஆகலாம்.அப்படிப்பட்ட ஒரூ ................ உங்களுள்ளும் இருக்கலாம். கண்டு கொள்ளும் தூண்டுகோலாய் இந்த குறள்களுள் ஏதாவதொன்று இருக்கும்.
நீங்கள் சாக்காடாய் இருக்கும்
புவியை
பூக்காடாய்
மாற்றலாம்
நன்றி!. வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
அன்புடன் தணிகை.
பக்கம் எண் 10.
1. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
2. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
3. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
4. அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழு கலான்.
5. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
பக்கம் எண்: 11.
6. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ்சொல்.
7. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
8. அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
9. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
10. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
பக்கம் எண்:12
11. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
12. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன்போற் பொதிந்து.
13. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
14. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
15. ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு.
பக்கம் எண்: 13.
16.வறியார்க் கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
17. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்பொருட் செல்வம்
பூரியர் கண்ணும் உள.
18. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்.
19. உற்றநோய்நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அறே தவத்தின் குரு.
20. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
பக்கம் எண்: 14
21 .நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
22. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
23. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
24. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
25. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
பக்கம் எண்: 16.
26. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரொடு ஏனையவர்.
27. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
28. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
29. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
30. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
பக்கம் எண்: 16.
31. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
32. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
33. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
34. ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
35. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
பக்கம் எண்: 17.
36. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
37. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
38. வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு.
39. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
40. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
41. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
42. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்.
43. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
44. ஈன்றாள் படிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
45. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
பக்கம் எண்: 19.
46. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
47. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
48. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.
49. அன்புடைமை ஆன்றகுடிப் பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
50. அகலாது அணுகாது தீக்காய்வர் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்.
பக்கம் எண்: 20
51.நீர் இன்றுஅமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
52. உறுபசியும் ஓவாப்பிணியும் செறு பகையும்
சேராதி யல்வது நாடு.
53. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.
54. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
55. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாந்துயரம் தரும்.
பக்கம் எண்: 21.
56. தொழுத கையுள்ளும் படையொடுக்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து.
57.உடம்பாடு இலாதார் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
58. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.
59. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
60. வேண்டற்க வென்றிடுனும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று.
பக்கம் எண்: 22,
61. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
62. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
63. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தர்ம்.
64. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
65. நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
பக்கம் எண்: 23.
66. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்.
67. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
68. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
69. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
70. அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
பக்கம் எண்: 24.
71. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்தற்று.
72. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
73. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
74. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
75. பேதமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
பக்கம் எண்: 25.
76. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது
77. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
78. மோப்பக் குழைய அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
79. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
80. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.
பக்கம் எண்:
81. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடில்.
82. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
83. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
84. பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
85. கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
பக்கம் எண்: 27.
86. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.
87. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
88. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
89. கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
90. மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.
91. நீரும் நிழலும் இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
92. உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
93. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமத்திற்கு உண்டு.
94. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு.
95. ஊடல் உணர்தல் புணர்தல்இனிது காமம்
கூடியார் பெற்ற பயன்.
பக்கம் எண்: 29.
96. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
97. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
98. மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார்.
99. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று ஒன்று.
100. காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்.
********************************************************************
புது மொழி:
```````````````````
அவ்வப்போதே அப்புறப்படுத்தாத
குப்பை
உங்களையும் சேர்த்து எரிக்கும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நேற்றைய அசட்டை
இன்றைய கஷ்ட நஷ்டம்.
```````````````````````````````````
வாழ்வதற்கு
பொருள் வேண்டும்
வாழ்வதிலும்!
__________________________________________
எனக்குப் பின்
நானாக இருக்கும்
த.க.ரா.சு. மணியத்துக்கு.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மரங்கள்
-------------------
மழையாக
பழமாக
இலையாக
விறகாக
நீங்கள்?
சு. தணிகை. இது
ஒரு
தெய்வா வெளியீடு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment