Thursday, August 25, 2016

தர்ம துரை: கவிஞர் தணிகை

தர்ம துரை: கவிஞர் தணிகை


Image result for dharmadurai wiki

தர்ம துரை என்றவுடன் எப்படி ரஜினிகாந்த் நடித்த பில்லாவை அஜித் செய்தபடி இதுவும் விஜய் சேதுபதியால் நடிக்கப் பட்டு இருக்குமோ அப்படி என்றால் பார்க்க முடியாது என மகனிடம் கூறினேன். ஆனால் சில குடிகாரக் காட்சிகள் தவிர வேறு கதையுடன்  நல்ல கருத்துகளுடன் பயணம் செய்யும் படம்தான். நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும்.

விஜய் சேதுபதிக்கென்று தனியாக எப்படியும் கதை கிடைத்து விடுகிறது. இதில் சீனு ராமசாமியின் இயக்கம், கதை வசனம் சொல்லும்படியாக இருக்கிறது.

படம் ஆரம்பத்தில் ஒரு தந்திரமான வன்முறை டாக்டராக இருந்த தர்மாவின் மேல் அவர்கள் குடும்பத்தின் சகோதரர்களாலேயே திணிக்கப் படுகிறது. அதை முதல் காட்சிகளாக கொண்டதால் நமக்கு படம் முழுதுமே என்னவோ ஏதோ என்ற ஒரு பீதி படம் முழுதும் நிலவ அந்தக் காட்சிகள் காரணமாகிறது.

கடந்த 19 ஆகஸ்ட் வெளியான படம் நல்ல படம் லிஸ்ட்டில் இடம் பெற்றுவிட்டது. ராதிகாவுக்கும், ராஜேஸுக்கும் நீண்ட நாள் கழித்து தமது பாத்திரங்களை சொல்லிக் கொள்ளும் அளவு நல்ல வாய்ப்பு.ராதிகா ஒரு நல்ல தாயாக இருக்கிறார் இந்த தர்மாவுக்கு மேலும் இவரது கல்லூரி தோழிகளும் சில தோழர்களும்...தமன்னாவுக்கும் நல்ல டாக்டர் ரோல். இது ஒரு மருத்துவக் கல்லூரி சார்ந்த கதை.

கேலி வதை பற்றியும் சமய நல்லிணக்கம் பற்றியும் நல்ல போதனைகளையும் கதையுடன் சொல்லியதால் இதற்கு வெற்றி என்றே சொல்ல முடியும்.

எதிர் பாரா திருப்பங்கள் நிறைய உள்ள கதைத் தேர்வு நல்ல திரைக்கதை, நல்ல வசனம். ராதிகாவின் தாய் பாத்திரம் உலகுக்கு ஏற்ற படி அதாவது தற்கால உலகுக்கு ஏற்றபடி தமது அடிப்படையில் நல்ல மகனை மற்ற சராசரி மனிதர்களிடமிருந்து காப்பாற்ற பல யுக்திகளை கையாளும் பாத்திரம்.

அன்புச் செல்வி மாதிரி இருக்கே என தமன்னாவை அழைக்கிறார். தமன்னாவின் காதலையும் கல்லூரியின் காலத்திலேயே புரிந்துக் இருக்கிறார். இவரை நேசித்த பெண்ணும், இவர் நேசித்த பெண்ணும் இழந்து போக தமன்னாவின் காதல் வெற்றி பெற்று விடுகிறது என்று சொல்ல வேண்டும்

முனியன் எனப்படும் காமராஜர் முதிர் பேராசிரியர் (சீனியர் ப்ரொபசர்) ராஜேஸ் காட்சிகளில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து கண்களில் நீரை வரவழைத்து விடுகிறார். பார்த்து பழகிய காட்சிகளாக இருந்த போதும் இந்த ஆசிரியர் மாணவர் பந்தம் எப்போதும் அலுப்பதேயில்லை தாய், தந்தை குடும்ப பந்தம் போல.

ஆனால் இதில் விஜய்சேதுபதி ஏற்ற தர்மாவின் பாத்திரம் தவிர இவரது குடும்பத்தில் ராதிகா ஏற்றுள்ள ஆத்தா பாத்திரம் தவிர ஏனைய சகோதர பாத்திரம் எல்லாம் ஒரு அணியாகவும் விஜய் சேதுபதி அதாவது தர்மாவை சார்ந்த அணி படு வீக்காக இருப்பது போன்ற கதை அமைப்பு. இப்படியும் குடும்பங்கள் இருப்பது உண்மைதான். சகோதரரை ஒருவர் ஒருவர் தாக்கிக் கொண்டு. போட்டி பொறாமை என...

இதற்கும் மேல் சொல்லக் கூடாது படம் பார்க்கும் ஆவல் குன்றிவிடும் .நல்ல திருப்பங்கள் நிறைந்த கதை அமைப்பும் அதற்கான நடிகர் தேர்வும் நாம் இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்

Image result for dharmadurai wiki


அன்புச் செல்வியின் கதை நிறைய குடும்பங்களில் இருக்கக் கூடியதான எதார்த்த டச். நூற்றுக்கு 50க்கும் மேல் கொடுக்கலாம். எல்லோரும் பார்க்கலாம். பாடல்கூட கிராமிய மணத்துடன் உள்ளது ராசா தூசா என்ற வரிகளின் முடிவு வரும்படியான பாடல் கேட்கும்படி உள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment