ரோஜா பார்க்ஸ் பிறந்த நாளில் ஆய்த எழுத்தாய் பெங்களூரு செய்தி: கவிஞர் தணிகை
பேருந்தில் கருப்பு இனத்தவர் அமர்வதற்கு முடியாதிருந்த நிலையை அமெரிக்காவில் மாற்றிய ரோஜா பார்க்ஸ் பிறந்த தினத்தில் டான் ஜானியப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைப் பற்றி அறிய நேர்ந்தது இதை எழுத வைக்கிறது.
விபத்து என்பது தவிர்க்கப்பட வேண்டியதுதான். அந்த பெங்களூருக்கு அருகே சோழனஹள்ளியில் முதலில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தம்பதியரில் மனவியை கார் மோதி இறக்கச் செய்த அந்த வெளி நாட்டு இளைஞர் மேல் நடத்திய தாக்குதல் கூட சற்று செரித்துக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் அதன் பிறகு அந்த வழியே சென்ற அது போன்ற நாட்டு இன மக்கள் மேல் எல்லாம் வன்முறைக் கட்டவிழ்ந்து போனதுதான் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாயிருக்கிறது.
காங்கிரஸ் அரசு, பி.ஜே.பி அரசு என்ற பாகுபாடின்றி சேரும் கூட்டம் காவல் துரைகள் பார்த்த்துக் கொண்டிருக்கவே அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கிடும் முயற்சியில் துகிலுரியவும், அந்தக் காரில் வந்த அனைவரையும் அடித்துத் தாக்கவும், அந்தப் பெண்ணை பேருந்தில் ஏற விடாமல் கீழ் இறக்கி அடித்ததும்,
காக்க சென்ற அந்த நாட்டு இளைஞர் ஒருவரையும், அந்த பெண்ணுக்கு தம் சட்டையை வழங்க முயன்ற அந்த உள்ளூர் இளைஞர் ஒருவரையும் அடித்ததும், அதன் பின் உள்ளூர் வாசிகள் 4 பேர் இவர்களை எல்லாம் காத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என சம்வங்கள்.
உள்ளூர் காவல்துறை இவர்கள் புகாரை பதியாதபோது, இவர்கள் டான் ஜானிய தூதரகமும், மேலும் பல கல்லூரி இளைஞர்களும் அழுத்தம் கொடுத்து காவல் துறை ஆணையர் அலுவலகத்தை அணுகி புகார் அளித்ததும் என செய்திகள் வளர்ந்தபடியே இருக்க ஏற்கெனவே விபத்து நடந்த கார் எரிக்கப்பட்டும் விட்டது, அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞர் ஒரு வேனில் பின் பக்கம் ஏறி தப்பித்து சென்றதும் பெங்களூரு,மற்றும் கர்நாடக மக்களின் ஒழுக்கத்தை வாகன விதிகளை, அரசின் பால் அவர்களுக்கு உள்ளக்கட்டுப் பாட்டையும் நன்கு விளக்குகிறது.
காட்டுத் தர்பார் நடக்கிறது. காவல்துறை வேடிக்கை பார்த்திருக்கிறது.கர்நாடக மக்கள் இன்னும் கர்நாடகமாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் சான்றுகள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் காவிரி நீரை தமிழகத்துக்கு அரசு ஆணைப்படி அணை மதகை திறந்து விட அனுமதிக்கவே மாட்டோம் என பல முறை இவர்கள் அரசை ஆட்டியதையும் வரலாறு கண்டிருக்கிறது.வேண்டுமென்றே எவரும் காரை ஏற்றி கொல்ல மாட்டார்கள். ஆனாலும் ஒரு நாட்டிலிருந்து வந்து இன்னொரு நாட்டில் வாழும் குடிகள் எவருமே உள்ளூர் மக்களை விட உள் நாட்டு மக்களை எல்லாம் விட மிகுந்த கவனமும், எச்சரிக்கையும், உயிர்கள்பால் அக்கறையும் கொண்டு வாழவேண்டிய நிர்பந்தம் அவரவர் நாட்டின் பெயரோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. காந்தியின் தென் ஆப்பிரிக்க வரலாறு இதற்கு கட்டியம் கூறும் அடிப்படை.
ரோஜா பார்க்ஸ் என்னும் அமெரிக்க கறுப்பு இன மங்கையின் பெரும் போராட்டமும் அநீதிக்கு எதிரான அதன் விளைவுகளும் சரித்திரமாயின. அது போல போராட்ட முறைகளுக்கு ஒரு வடிவமைப்பு, ஒழுங்கமைவு, ஒருங்கிணைப்பு அவசியம் அப்படி இருந்தால் அது என்றுமே திகழும் மறக்க முடியா சரித்திரமாக நினைவிற் கொள்ளப்படும். விபத்தே இல்லாமல் ஒரு விபத்துமே நடக்காமல் இனி வாகன போக்குவரத்து யாவும் நடக்க வேண்டும் அதற்கான போராட்டம் முறைமைகள், நியதிகள், விதிகள் ஆகியவற்றை எல்லாம் எல்லா மக்களும் கைக்கொண்டு எதிர்காலச் சாதனைகள் புரிய வேண்டும்.
அவ்வாறில்லாமல் இது போன்ற கூட்டம் தம் விருப்பம் போல செயல்பட்டால் அங்கு அரசு ஒன்று இருப்பதே இல்லாதிருப்பது போன்றதே. அது எந்த கட்சி, எந்த மாநில ,எந்த ஆட்சி செய்யும் அரசாக இருந்தாலும் ஒன்றுதான்.
தமிழகத்தில் அம்மா சிறை சென்ற நிகழ்வின் போதும்,ஊழல் வழக்கில் தேர்தலில் நிற்க முடியாதிருந்தபோதும், ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் வெடித்து சிதறடிக்கப்பட்ட போதும் இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்த போதும், இது போன்ற வன்முறைகள் நிகழ்ந்து சட்ட ஒழுங்கு முறைகள் கேலிக்கிடமாகின.
இந்நிலையில் நாட்டின் மத்தியில் ஆளும் கட்சி தேர்தல் காலத்திய தமிழகத்தில் காலூன்ற நிறையத் திட்டமிட்டு வருகிறது. கூட்டணி முயற்சி, பிரதம மந்திரி மோடியின் பொதுக்கூட்டம், அமித் ஷாவின் திட்டங்கள் என்றெல்லாம், ஆனாலும் பிரதமரின் மேல் பூந்தொட்டி வீசப்படுவதும், கறுப்புக் கொடி காட்டும் நிகழ்வுகளும் மத்திய ஆளும்கட்சி மேல் இந்த 2 ஆண்டுக்குள்ளாகவே ஏற்பட்டுள்ள அதிருப்தியை நன்கு வெளிப்படுத்துகிறது.
கோவை பிரதமர் வந்து சென்றிருக்கிறார். கோவையில் பி.ஜே.பி பேர் எப்போதும் இருக்கிறது, ஒரு காலத்தில் அத்வானி வந்து சென்ற போது குண்டுகள் வெடித்தன. அதை இன்னும் எவரும் மறந்திருக்க முடியாது.
சேலம் செங்குந்தர் மாநாட்டில் பி.ஜே.பியின் ஹெச்.ராஜா தாம் இந்த இனத்தவர் என்று சொல்லி மேடையில் பேசியிருப்பதாக மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் சொல்கிறார்கள். எனவே பாரதிய ஜனதாக் கட்சி இந்த முறை தேர்தல் கூட்டணி வியூகத்தோடு, தமிழக மண்ணில் கால் பதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருப்பதைக் காட்டுகிறது.
இத்தோடு இலஞ்ச ஊழல் பற்றிய செய்தி ஒன்றும் இழையோடுகிறது அது: தமிழகத்தில் இலஞ்ச ஊழல் செய்த அரசு அலுவலரை அரசின் ஆலோசனைக்குப் பிறகுதான் சட்ட நடைமுறைக்குட் படுத்த வேண்டும் என தமிழக அரசு சொல்ல, நாளை இது பற்றிய வழக்கின் முறையிடல் நீதிமன்றத்தில் .
தமிழ் நாட்டு அரசு இப்படி சொல்லும் நேரத்தில் மும்பை உயர் நீதி மன்றம் அடிப்படைத் தேவைகளுக்கு எல்லாம் இலஞ்சம் கொடுக்க வேண்டுமா? சரியான மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், இலஞ்ச ஊழலை ஒழிக்காவிட்டால் அரசுக்கு வரி செலுத்துவதை எல்லாம் ஒருங்கிணைந்து மக்கள் சேர்ந்து நிறுத்திப் போராட வேண்டும் என்ற நீதியின் குரல் ஒலித்திருக்கிறது.
இவை யாவுமே ஒன்றுடன் ஒன்று சாராத தனி விஷியங்களாக வெளித் தெரிந்த போதிலும் ஒன்றுக்கொன்று முற்றிலும் பின்னிப் பிணைந்தவை. அரசு இலஞ்ச ஊழல் இல்லாமல் இருந்தால் மட்டுமே வாகனப் போக்குவரத்து விபத்தின்றி நடக்க முடியும். அரசு ஒரு முன்மாதிரியாக இருந்தால் மட்டுமே மக்கள் அனைவரும் அவ்வாறு நடக்க முனைவர். அரசு எனில் ஆட்சி புரிவோர், பணி செய்வார், மக்கள் பிரதிநிதிகள் ,நீதிமன்றங்கள் யாவுமே. ஆக ஆட்சி,கட்சி சார்ந்தும், நிர்வாகம் ஊழல்,இலஞ்சம் சார்ந்தும் இருக்கும் வரை சாதனைகள் நிகழ் வாய்ப்பில்லை. இது போன்ற பரபரப்பூட்டும் நாட்டின் அமைதிக்கான சோதனைகள்தான்.கட்சி ஆட்சி நிர்வாகம் ஒழுங்கமைந்தால் மட்டுமே விபத்துகள் தவிர்க்கப்படும்.
ஆக இன்று உங்களோடு பேச வேண்டும் என இந்த முக்கூறான விஷியங்கள் .ஒன்று போராட்ட முறைகள் நியாயமாக நெறியுடன் மக்கள் சக்தி இணைந்து போரட்டமானால் சரித்திரமாகும் இதற்கு ரோஜா பார்க்ஸ்.
இந்தியாவில் தறிகெட்ட கூட்டம் சட்ட ஒழுங்கமைவுக்கு இணங்காமல் ஆர்ப்பரித்து காட்டு மிராண்டியாய் மாற பெங்களூரு போன்ற, சம்பவங்கள்,
இலஞ்ச ஊழல் செயல்பாடுகளில் அரசு தமிழ் நாடு அரசு போன்றவை இலஞ்ச ஊழலுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்க ,மும்பை நீதிமன்ற நீதிபதிகள் போராட்டக்காரராய் வரி கொடா இயக்கம் கூட இலஞ்ச ஊழல் ஒழிப்புக்காக செய்யலாம் என்கிறார்கள்.
இதையே சாதரண மனிதர்கள் சொன்னால் அவர்கள் நாட்டின் எதிரிகளாய் கருதப்பட்டிருப்பர்.
ஆக நேற்று ,இன்று நாளை என ரோஜா பார்க்ஸ் சம்பவமும் சரித்திரமும்,இன்றைய காலத்தில் தமிழக பாரதிய ஜனதா,தேர்தல்,அரசின் ஊழல் சார்ந்த ஆதரவு ,பேரம்.... நாளை செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டலாக மும்பை நீதி மன்ற நீதிபதிகளின் குரல்கள்....
நாமும், நமது பதிவும் நாளைய வாழ்வை நோக்கியும், நேற்றைய ரோஜா பார்க்ஸ், தென் ஆப்பிரிக்க மகாத்மா காந்தியின் பாதையிலும் பயணம் செய்யவுமே விரும்புகின்றன. இன்றைய பெங்களூரு நிகழ்வு, இன்றைய தமிழக ஆட்சி முறைகள் பால் விலகியே இருக்க வழி காட்டவே பதிவு செய்யப்படுகின்றன.
இன்றைய பதிவு சற்று திணறலானதே ஏன் எனில் இது ஆய்த எழுத்து போன்றது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment